Jump to content


Tamil Star News
Photo

ஆரம்பித்தது சண்டை, நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கோபம்!


  • Please log in to reply
12 replies to this topic

#1 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,248 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 23 July 2012 - 05:06 PM

Posted Image


ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!


மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளாராம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இதனால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது வெடித்து வெளிக்கிளம்பி அம்பலத்திற்கு வரும் என்றும் ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தா நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதருக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம் புரிந்தவர்கள்.
நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் மடத்திற்குள் குவிந்துள்ள 100க்கும் மேற்பட்டோரும் நடந்து கொள்ளும் விதம் ஆதீனத்தை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாம்.
நித்தியானந்தாவை இளைய வாரிசு என்று ஆதீனம் அறிவித்த பின்னர், அவருக்காக ஆதீன மடத்திற்குள் ஒரு ஆபீஸ் போட்டுக் கொடுத்தனர். மேலும் அவரது 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஆதரவாளர்களும் உள்ளேயே தங்கிக் கொள்ள, படுக்க, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தார் ஆதீனம்.
இந்தக் கும்பல் வந்த பிறகு படிப்படியாக ஆதீன நிர்வாகத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர். இவர்களின் அடாவடி ஆதிக்கத்தால், மதுரை ஆதீன மடத்தில் நீண்ட காலமாக வேலை செய்து கொண்டிருந்த சிலர் அங்கிருந்து விரட்டப்பட்டனர் அல்லது விலகிப் போயினர். மதுரை ஆதீனத்தின் உதவியாளரான வைஷ்ணவியைத் தாக்கும் அளவுக்குத் தைரியமும் பெற்றனர் நித்தியானந்தாவின் ஆட்கள்.
மதுரை ஆதீனம் ஊரில் இல்லாதபோது வைஷ்ணவியைத் தாக்கி அவரது டிரஸ்ஸையும் கிழித்து அசிங்கப்படுத்தினர் நித்தியானந்தாவின் முரட்டு ஆதரவாளர்கள். இதனால் வைஷ்ணவி கதறி அழுதார், போலீஸாரைத் தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறு கோரும் அளவுக்கு நிலைமை போனது.
பின்னர் நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் கண்டிக்க, பதிலுக்கு அவர் தனது ஆதரவாளர்களை கண்டிக்க வேண்டியதாயிற்று.
இப்போது நித்தியானந்தா கொடைக்கானலில் முகாமிட்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அங்கேயே புதிய மடம் அமைக்க சைட் பார்த்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆட்கள், ஏதோ சினிமாவில் வரும் அடியாள் கூட்டம் போல நடக்க ஆரம்பித்திருப்பதால் மதுரை ஆதீனம் கடும் கோபமடைந்துள்ளாராம். மதுரை ஆதீனத்திற்கு்ச சொந்தமான குடியிருப்புகள் சூடம் சாமியார் சந்தில் உள்ளது. இங்கு நித்தியானந்தாவின் ஆட்கள் சிலர் போயுள்ளனர். கைகளில் உருட்டுக் கட்டை மட்டும்தான் இல்லை, டாடா சுமோவில் வரவில்லை. மற்றபடி சினிமாவில் வரும் வில்லன்களைப் போல உடனே இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று அங்கு குடியிருந்து வருபவர்களை இந்தக் கும்பல் மிரட்டியதாம்.
இதனால் வெகுண்ட அந்த மக்கள் மதுரை ஆதீனத்திடம் இதைக் கொண்டு போனார்கள். இதைக் கேட்டு ஆதீனம் கடும் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும், மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதீனத்தின் தந்தை படம், அவரது படம் உள்ளிட்டவற்றை நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்தவர்கள் கழற்றிப் போட்டு விட்டனராம். நித்தியானந்தா சிரிக்கும் போட்டோக்களை மாட்டி வைத்துள்ளனராம். இதுவும் ஆதீனத்தை கடுப்பாக்கியதாம்.
இது போதாதென்று நித்தியானந்தாவின் ஆள் ஒருவர், தனது விசிட்டிங் கார்டில் ஆதீனத்தின் படத்தைப் போடாமல் நித்தியானந்தாவின் படத்தை மட்டும் போட்டு வைத்திருக்கிறாராம். இதைப் பார்த்தும் டென்ஷனாகி விட்டாராம் ஆதீனம். என்ன நடக்கிறது இங்கே என்று அவர் நித்தியானந்தா தரப்பைப் பார்த்து கோபத்துடன் கேட்டதாக கூறுகிறார்கள்.
இதையெல்லாம் விட நித்தியானந்தாவுக்கு ஆண்மை உள்ளதா என்பதைக் கண்டறிய கர்நாடகத்தில சோதனை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதை மதுரை ஆதீனத்திற்கே நேரில் வந்து கொடுத்துள்ளனர். அதை நித்தியானந்தாவின் ஆள் ஒருவர் வாங்கியுள்ளார். ஆனால் இது எதுவுமே மதுரை ஆதீனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லையாம். எதேச்சையாக பேப்பரைப் படித்த போதுதான் இதெல்லாம் மதுரை ஆதீனத்திற்குத் தெரிய வந்ததாம். இதனால் மேலும் கோபமாகி விட்டாராம் மதுரை ஆதீனம்.
நித்தியானந்தாவை விட அவரது கூடவே இருக்கும் ஆட்கள் படு மோசமாக இருப்பதாக மதுரை ஆதீனம் கருதுகிறாராம். எனவே இந்தக் கும்பலை ஒட்டுமொத்தமாக ஆதீன மடத்தை விட்டு விரட்டியடிக்க அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நித்தியானந்தா மீதும் அவர் சமீப காலமாக சீற்றமடைந்து வருவதாகவும் தெரிகிறது.
விரைவில் கைலாயம் போகப் போகிறாராம் நித்தியானந்தா. அங்கு போய் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. 15 நாட்கள் டேரா போட்டிருப்பாராம். நீங்களும் வாங்களேன் என்று ஆதீனத்தையும் அழைத்தாராம் நி்த்தியானந்தா. ஆனால் நான் வரவில்லை என்று பட்டென்று கூறி விட்டாராம் ஆதீனம். இதனால் நித்தியானந்தா தர்மசங்கடமாகி விட்டாராம்.
தற்போதுதான் முதல் முறையாக நித்தியானந்தாவுடன் நேருக்கு நேர் முகம் காட்ட ஆரம்பித்துள்ளார் மதுரை ஆதீனம். விரைவில் இது பூதாகரமாக வெடிக்கும், பல அதிரடி முடிவுகளை ஆதீனம் எடுக்கலாம் என்று அவரது தரப்பினர் கூறுகிறார்கள்.
நன்றி தற்ஸ்தமிழ்.

சும்மா... கிடந்த சங்கை, ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#2 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,638 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 23 July 2012 - 05:38 PM

Posted ImagePosted Image

இரண்டும் ஒரு குட்டையிலை ஊறின மட்டையள்தான்......எண்டாலும் மதுரை பொல்லுக்குடுத்து அடி வாங்குது :icon_mrgreen:


  • தமிழ் சிறி likes this

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#3 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,248 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 23 July 2012 - 05:46 PM

Posted ImagePosted Image

இரண்டும் ஒரு குட்டையிலை ஊறின மட்டையள்தான்......எண்டாலும் மதுரை பொல்லுக்குடுத்து அடி வாங்குது :icon_mrgreen:

நித்தி பொல்லுக் குடுத்தாலும், அடி வாங்காமல் தப்பிட்டார். :D :lol: :icon_idea:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#4 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,199 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 23 July 2012 - 05:48 PM

Posted ImagePosted Image

இரண்டும் ஒரு குட்டையிலை ஊறின மட்டையள்தான்......எண்டாலும் மதுரை பொல்லுக்குடுத்து அடி வாங்குது :icon_mrgreen:


நித்தியெல்லோ பொல்லைக் குடுத்து இப்பவும் அடி வாங்குது. :D

#5 karu

karu

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,289 posts
  • Gender:Male
  • Interests:Tamil Poetry & literature

Posted 23 July 2012 - 08:32 PM

நித்தி பொல்லுக்குடுக்கிறதா இல்லையா எண்டிறதெல்லாம் விரைவில் சோதனையில தெரியவரும்.
S. K. RAJAH

#6 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 23 July 2012 - 09:38 PM

மொத்தத்திலை பிரச்சனையே பொல்லாலைதான் :)
  • நந்தன் likes this
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#7 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,023 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 01:54 AM

உருத்திராட்ச மாலையோடை மதுரையை பார்க்க நித்தியைவிட செக்சியாகத்தானே இருக்கு. பிறகேன் இந்த குத்துப்பாடு, பொறாமைச்சண்டைகள் எல்லாம். ரஞ்சியே படத்தில் நித்தியை கடந்து மதுரையைத்தானே எட்டிப்பார்த்து சிரிக்கிறா.

Edited by மல்லையூரான், 24 July 2012 - 01:56 AM.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 


#8 Volcano

Volcano

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 905 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 24 July 2012 - 02:02 AM

எனது நண்பன் ஒருவன் facebook இல் லைக் பண்ணியிருந்தான்..
ஒரு பெண் கிடைத்தால்- ஆனந்தம்
இரு பெண் கிடைத்தால் - பேரானத்தம்
மூன்று பெண் கிடைத்தால்- பரமானந்தம்
பல பெண் கிடைத்தால்- நித்தியானந்தம்/தா

#9 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,248 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 04:37 PM

Posted Image

எல்லாச் சாமியார்களும் ஏன்... கையில், ஒரு பொல்லு வைத்திருக்கிறார்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#10 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,057 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 24 July 2012 - 05:32 PM

Posted Image

எல்லாச் சாமியார்களும் ஏன்... கையில், ஒரு பொல்லு வைத்திருக்கிறார்கள்.




அதுக்குத்தான் :D ,,,,,,,,அடிக்க வேணும் என்றால் பொல்லு தேவைதானே..... :D :icon_idea: ....
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#11 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,195 posts
  • Gender:Male

Posted 25 July 2012 - 01:31 AM

Posted Image

எல்லாச் சாமியார்களும் ஏன்... கையில், ஒரு பொல்லு வைத்திருக்கிறார்கள்.

இரு பிரிவான, சுவாமியார் வகைகள் இந்து மதத்தில் இருக்கின்றன!
முதலாவது - ஏகானந்த நிலை- இவர்கள் ஒரு தனித் தடியைக் கொண்டு திரிபவர்கள்!
இரண்டாவது- திரியானந்த நிலை- இவர்கள் சூலத்தைக் கொண்டு திரிவார்கள்!
இந்தத் தடிகள் காவுபவர்களை, வேதங்கள் கட்டுப் படுத்தாது!
இவர்கள், வேதங்களைத் தாண்டி விட்டவர்கள் என்பது, ஐதீகம்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#12 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,248 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 25 July 2012 - 02:54 AM

இரு பிரிவான, சுவாமியார் வகைகள் இந்து மதத்தில் இருக்கின்றன!
முதலாவது - ஏகானந்த நிலை- இவர்கள் ஒரு தனித் தடியைக் கொண்டு திரிபவர்கள்!
இரண்டாவது- திரியானந்த நிலை- இவர்கள் சூலத்தைக் கொண்டு திரிவார்கள்!
இந்தத் தடிகள் காவுபவர்களை, வேதங்கள் கட்டுப் படுத்தாது!
இவர்கள், வேதங்களைத் தாண்டி விட்டவர்கள் என்பது, ஐதீகம்!

தடியை கொண்டு திரிபவர்களா, சூலத்தை கொண்டு திரிபவர்களா நல்லவர்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#13 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 25 July 2012 - 06:10 AM

எங்க நாட்ல இதுங்களா இப்போ மாட்டர் <_< <_< ?சும்மா கடுப்படிக்காதீங்க அண்ணனுங்களா :lol: . மூணு வருசத்தில வெலைவாசி ஏத்தத்தில ரெம்ப ரென்சனா இருக்கோம் :( . கெரசீன் , பாமாயில் , அரசி , பெற்றோல் வெலை யூரொப் ரேஞ்சுக்கு வந்து , மூச்சு முட்டுதுங்க :( . ரெம்ப ரென்சனா இருக்கிறவங்கள டைவேர்ட் செஞ்சுக்க இந்த காமடி பீசுங்கள அப்பப்போ ரிலீஸ் ஆக்குவாங்க :lol: :D . ஜனங்களும் குசி ஆயிடுவாங்க , அவ்வளவுதான்

.

Edited by சொப்னா, 25 July 2012 - 06:11 AM.

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]