வணிக வளாகம் மீது டொரண்டோ போக்குவரத்து பேருந்து மோதல். ஓட்டுனர் உள்பட மூவர் படுகாயம்.
Started by
easyjobs
, Jul 23 2012 05:04 PM
No replies to this topic
#1
Posted 23 July 2012 - 05:04 PM
மேற்கு குயின் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது டொரண்டோ மாநகர பேருந்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு குயின் தெருவையும் பீட்டர் தெருவையும் இணைக்கும் சந்திப்பின் மூலையில் இருந்த கட்டிடத்தின் மீது 10:18 a.m மணியளவில் திடிரென டொரண்டோ மாநகர பேருந்து மோதியது. உடனடியாக காவல்துறைக்கும் , அவசர ஊர்திக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி விபத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. காயமடைந்தவர்களில் ஒருவர் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் என்பதும் , இருவர் பயணிகள் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்தின் போது பேருந்திற்கு அருகே வந்து கொண்டிருந்த காரில் பேருந்து லேசாக மோதியதில் காரின் முன்புறமுள்ள அடி தாங்கி உடைந்ததுடன் , விபத்துக்குள்ளான பேருந்தின் முகப்பு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பகுதிகளும் உடைந்து தெறித்ததால் அந்தப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் துகள்கள் சிதறிக் கிடந்தன.
போக்குவரத்து காவல்துறையினர் விசாரிக்க வசதியாக உடனடியாக மேற்கு குயின் தெருவில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அந்த பகுதியில் இருந்த பிளாஸ்டிக் , கண்ணாடி உடைந்த பாகங்கள் அகற்றப்பட்டு 5 p.m மணியளவில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது
TO SEE THE IMAGES OF ACCIDENT BUS PLEASE CLICK HERE

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














