Jump to content


Tamil Star News
Photo

தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒண்டோரியோ மேயர் ரால்டன் மெக்கன்றி


  • Please log in to reply
5 replies to this topic

#1 easyjobs

easyjobs

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,045 posts
  • Gender:Male
  • Location:Chennai, Tamilnadu,
  • Interests:Reading books, Seeing news websites,Social network websites,

Posted 23 July 2012 - 04:46 PM


ஸ்கார்புரோவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியின் அதிர்ச்சி இன்னும் கனடாவை விட்டு அகலவில்லை. நேற்று ஸ்கார்புரோவில் குடியிருக்கும் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஒண்டோரியோ மேயர் டால்டன் மெக்கன்றி இதுபோன்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தை இனி வரும் காலங்களில் தடுப்பதற்கு, இளைஞர்களுக்கு நல்வழியை காட்டுவதும், அவர்களின் எதிர்காலத்தின் அக்கறை கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். w

ww.thedipaar.com

நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மேஜிக் போல கொண்டுவர யாராலும் முடியாது என்றும் இதுபோன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை உருவாக்கி படிப்படியாகவே மாற்றத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.


குற்றம் நடக்கும் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் இருந்து அவற்றை தடுப்பது என்பது இயலாத காரியம் என்றும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள ஓவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சிக்க வேண்டும், குறிப்பாக இளைஞர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்ச்சியும், பாதுகாப்பு பயிற்சியும் இருக்க வேண்டும். இதற்கான திட்டங்களை அரசு உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என மேயர் டால்டன் மெக்கன்றி கூறியுள்ளார்.



TO SEE THE IMAGE OF THIS NEWS. CLICK HERE


Advert

#2 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 23 July 2012 - 04:55 PM

வணக்கம் ஈசிஜெற்! தாங்கள் அடிக்கடி கனடா செய்திகளை இணைப்பதன் மர்மம் என்னவோ? :)

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#3 easyjobs

easyjobs

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,045 posts
  • Gender:Male
  • Location:Chennai, Tamilnadu,
  • Interests:Reading books, Seeing news websites,Social network websites,

Posted 23 July 2012 - 05:05 PM

மர்மம் ஒன்றுமில்லை. கனடிய தமிழர்களுக்கு செய்தி சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான்.

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 23 July 2012 - 05:06 PM

எவ்வாறு தமிழர் விடயத்தில் மகிந்தா பேசுகின்றானோ அவ்வாறே இங்குள்ள 'தலைவர்கள் ( ஒன்ராரோயோ மாநில முதல்வர், டொறன்ரோ நகரபிதா, டொராண்ரோ காவல்துறை தலைவர்) பேசுகின்றனர்.

உண்மையில் எந்த மாற்றத்தையும் செய்யும் விருப்பம் இல்லை.

காரணம் - இனவாதம் என்பதே எனது கருத்து.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,239 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 23 July 2012 - 06:02 PM

மக்களின் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கத் தான் சரியான ஆட்கள் இவர்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 01:10 PM

நேற்று சந்தித்த மூன்று தலைவர்களும் பழைய மாவை மீண்டும் வெற்றிகரமாக அரைத்தார்கள்.

ஏற்கனவே அங்கீகரிப்பட இருந்த பணத்தை 'நிரந்தரமாக' அங்கீகரித்து ஊடகவியலார்கள் முன்னால் சிரித்தார்கள். தவிர எந்த புதிய பணமோ இல்லை புதிய காவல்துறை அதிகாரிகளுக்கான பணமோ இல்லை சமூக செயற்பட்டுகளுக்கான பணமோ ஒதுக்கப்படவில்லை.

காரணம்? - சுடுபவர்களும் சுடப்படுபவர்களும் கறுப்பின மக்கள். அதிகாரம் அவர்கள் கையில் இல்லை. அவர்கள் மத்தியில் பலமான சமூக, அரசியல் அமைப்புக்களும் இல்லை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]