இலங்கை மனித உரிமைகள் மேம்பாடு குறித்து ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்புகிறது
Started by
akootha
, Jul 23 2012 04:00 AM
3 replies to this topic
#1
Posted 23 July 2012 - 04:00 AM
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை இலங்கை ஐ.நா.வுக்கு அனுப்ப உள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இயங்கும் மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வை முன்வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதையும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டித்து கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டுக்காக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக குறித்த கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இறுதி அவகாசத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான சமிக்ஞைகள் கிடைக்காதவிடத்து இலங்கைக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகளில் தாம் இறங்க நேரிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும்தொனியில் தெரிவித்திருந்தன.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வின்போது மீண்டும் இலங்கைப் பிரச்சினை கிளப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட காலத்துக்குள் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு முன்னேற்றகரமாக செயற்படாதவிடத்து அதுதொடர்பாக இந்த அமர்வில் ஆராய்ந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் ஊகிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே இலங்கையில் குறித்த காலப்பகுதிக்குள் இனநல்லிணக்கம், மனித உரிமைகள் என்பன தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளை அறிக்கை வடிவில் இலங்கை தயாரித்துள்ளது. சில உறுப்பு நாடுகளின் ஆய்வுக்காகவும் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை அனுப்பப்படவுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்புதலுக்காகக் கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, இன்று ஜெனிவாவுக்கு அனுப்பிவைக் கப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வுகளைக் கண்டுள்ளது. அத்துடன் மனித உரிமைகள் விடயத்திலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனவே நவம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவும், உதவியும் இலங்கைக்குக் கிட்டுமென்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://onlineuthayan...721252023646184
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 23 July 2012 - 04:58 AM
எல்லா வகையிலும் சிறிலங்கா அரசு தாம் நல்லவர்கள் என நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
http://www.yarl.com/...howtopic=105335
http://www.yarl.com/...howtopic=105335
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
- பிளேடோ
#3
Posted 23 July 2012 - 03:18 PM
இந்தியா ஆய்வு செய்யும் அறிக்கையா?
இந்தியா முதலில் ஆதிவாசி பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை நிறுத்தவேண்டும்.
ஓநாய்க்கு நரி ரெகமண்டேசன்!
இந்தியா முதலில் ஆதிவாசி பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை நிறுத்தவேண்டும்.
ஓநாய்க்கு நரி ரெகமண்டேசன்!
இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.
#4
Posted 23 July 2012 - 08:04 PM
]"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[/u] இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த மூன்று நாடுகள் .. கிந்தியா சீனா மற்றும் ஈரான்
தோழர் .. அந்த ஆவணத்தில் தமிழர்களே இல்லை என்று சொல்கிறேன் நான் அப்புறம் எப்புடி இனசிக்கல் வரும்..? ரெல் ரெல் மீ..
டிஸ்கி:
பொருளாதார நிபுணர் என்றால் பொருளாதார நிபுணர்தான் கரெக்டாக அடிகோடிட்டு காண்பித்து இருக்கார்
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














