கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14).
பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டுள்ளான்.
அதற்கு அவர்கள், ”சரியாக படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா?” எனக் கேட்டு பரத்ராஜை அடித்து, துன்புறுத்தியதோடு மட்டுமின்றி, "சிறுநீர் கழிக்க வெளியில் செல்லக்கூடாது, அதை இங்கேயே குடி!” என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த பரத்ராஜ்,விடுதியிலிருந்து வெளியேறி பஸ் மூலம் கும்பகோணம் வந்து சோழன் மாளிகையில் உள்ள வீட்டிற்கு சென்றான். அப்போது அவனது தந்தை தேசிங்குராஜன் மரத்தில் இருந்து தவறி விழுந்து கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து கும்பகோணம் வந்தான்.
அங்கு தந்தை தேசிங்குராஜனிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தேசிங்குராஜன், கும்பகோணம் மருத்துவ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் பெரம்பலுர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கும் தகவல் தெரிவித்தனர்.
மாணவர் பரத்ராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஸ்பெண்ட்
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா, மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரும் மாணவன் பரத்ராஜை அடித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா உத்தரவிட்டார்.
புகாருக்கு மறுப்பு
முன்னதாக விசாரணையின் போது ,”சிறுநீர் குடிக்க வைத்தனர் என்பது தவறான தகவல். யாரும் அப்படி செய்யவில்லை. மாணவன் ஆசிரியர்கள் மிரட்டலுக்கு பயந்து விடுதியை விட்டு தப்பி சென்று விட்டான். பின்னர் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மீது தவறான கருத்தை சொல்லியிருக்கிறான் ”என்று கூறினர்.
மேலும் சிறு நீர் கழித்து வர அனுமதி மறுக்கப்பட்டதுதான் உண்மை என்றும் சிறுநீர் கழித்தமைக்காக ஆசிரியர்கள் அடித்ததாகவும்,அந்த. மாணவன் பான்பாரக் சாப்பிடுவது வழக்கம். அவன் பாக்கு போடுவதை ஆசிரியர்கள் கண்டித்து வந்துள்ளனர். "பான்பாரக் சாப்பிடுற நீ மூத்திரத்தை குடிடா!" என்று திட்டியதாகவும் மாணவன் ஆசிரியர்கள் மீது வீண்பழி போட்டுள்ளான் என்றும் விசாரணையின்போது தெரிவித்தனர்.
கைது
இருப்பினும் மாணவனை அடித்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதால், ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர். மாணவன் பரத்ராஜை அடித்து துன்புறுத்திய வழக்கில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விகடன் செய்திகள்
மாணவனை சிறுநீரை குடிக்க வற்புறுத்தல்; 3 ஆசிரியர்கள் கைது!
Started by
நிழலி
, Jul 22 2012 03:08 PM
No replies to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















