Jump to content


Orumanam
Photo

இந்திய நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி


 • Please log in to reply
9 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 22 July 2012 - 01:27 PM

Posted Image

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.


குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.


இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார்.சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன.


பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.


பதவியேற்பு


நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டுவரை பிரணாப் முகர்ஜி பதவி வகிப்பார்.


http://tamil.oneindi...ion-158173.html


வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,113 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 22 July 2012 - 02:06 PM

ஈழத்தமிழர்கள் விடயத்தில் மிக மோசமான கொள்கையுடைவர் சனாதிபதி என்னும் ரப்பர் ஸ்டாம்ப்பிற்கு வந்துள்ளார்

இவர் சனாதிபதி ஆனபடியால் காங்கிரசில் இருந்து பிரதமர் வேட்பாளர் ஆகும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்

#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 July 2012 - 02:22 PM

ஈழத்தமிழர்கள் விடயத்தில் மிக மோசமான கொள்கையுடைவர் சனாதிபதி என்னும் ரப்பர் ஸ்டாம்ப்பிற்கு வந்துள்ளார்

இவர் சனாதிபதி ஆனபடியால் காங்கிரசில் இருந்து பிரதமர் வேட்பாளர் ஆகும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்


அது இராகூலுக்கு. இவர் புத்தியாக வெளியேறிவிட்டார்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,113 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 22 July 2012 - 02:27 PM

அது இராகூலுக்கு. இவர் புத்தியாக வெளியேறிவிட்டார்.


கரும்பு சொல்லியிருப்பது போல நான் ராகுல் பிரதமராவதை மிகவும் விரும்புகின்றேன். இந்தியாவை குட்டிச் சுவராக்க அவரை விட்டால் எவராலும் முடியாது, முடியாது ......முடியாது !!

#5 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,113 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 22 July 2012 - 03:06 PM

பிரணாப் வாழ்க்கை குறிப்பு!
Posted Date : 17:35 (22/07/2012)Last updated : 17:35 (22/07/2012)

Posted Imageபுதுடெல்லி: 1969ல் மாநிலங்களவை உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பிரணாப் முகர்ஜி,2012 ல் இந்தியாவின் 13 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.அவரது வாழ்க்கை குறிப்பு சுருக்கமாக...

பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர்.1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

பிரணாப் எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களை பெற்றார்.கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.மாநிலங்களவை உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

2009 ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராக பதவி வகித்து,தற்போது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

#6 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 July 2012 - 03:38 PM

1946 ஆம் ஆண்டு பிறந்த சோனியா. இன்று வயது 66 . இன்னும் பத்து வருடங்கள் என்றாலும் அரசியலில் இருந்து மகனுக்கு 'போதிப்பா'.

அதுவரை மகன் சும்மா டம்மியாக இருப்பார். இல்லை அம்மா சொல்லை மீறும் வல்லமை இருக்குமா?

இல்லை என்றே எண்ணுகிறேன். காரணம் இவர் விரும்பியே அரசியலுக்கு வரவில்லை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 விவசாயி விக்

விவசாயி விக்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,223 posts
 • Gender:Male
 • Location:ஒன்டாரியோ, கனடா
 • Interests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்

Posted 23 July 2012 - 03:14 PM

1946 ஆம் ஆண்டு பிறந்த சோனியா. இன்று வயது 66 . இன்னும் பத்து வருடங்கள் என்றாலும் அரசியலில் இருந்து மகனுக்கு 'போதிப்பா'.

அதுவரை மகன் சும்மா டம்மியாக இருப்பார். இல்லை அம்மா சொல்லை மீறும் வல்லமை இருக்குமா?

இல்லை என்றே எண்ணுகிறேன். காரணம் இவர் விரும்பியே அரசியலுக்கு வரவில்லை.


ரகூல் அவ்வளவு அறிவுள்ள வாரிசில்லை.  
பூட்டன், பாட்டியின் சொத்தை அழிக்கவந்த பேரன். :)

இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.

 


#8 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 23 July 2012 - 06:50 PM

முழு நேர அரசியல்வாதி நாட்டின் ஜனாதிபதியானார்

ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.

சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978ஓட்டுகள் கிடைத்ததாக, தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார். பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே துவங்கி விட்டன. காங் கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும், திரிணமுல் தலைவர் மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிரணாப், இனி...:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்த இடத்தை வகித்து வந்தார்.

ராகுலுக்கு வழி:

கடந்த 1981ல், இவர் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, மன்மோகன், ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியது வரலாறு. தற்போது, ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளதை அடுத்து, பிரதமர் உட்பட, கேபினட் இவரது கருத்தைக் கேட்கும் திருப்பம் வந்திருக்கிறது. பிரணாப், ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளதால், காங்கிரஸ் கட்சியிலும், இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. அமைச்சரவையில் மாற்றங்கள் வருவதுடன், வரும் 2014ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு, அக்கட்சி புதிய வியூகங்களை வகுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நன்றி:

பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர் என, தழுதழுத்த குரலில் கூறினார்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மா கூறுகையில், வெற்றி பெற்ற பிரணாப்புக்கு, என் வாழ்த்துக்கள்.


இந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட விதம், பாரபட்சமாகவும், அரசியல் சார்பானதாகவும் இருந்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்காத மாநிலங்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, அந்த மாநிலங்களுக்கு, சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது.

http://tamil.yahoo.c...-020400611.html

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#9 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,783 posts
 • Gender:Male
 • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 23 July 2012 - 07:52 PM

Posted Image


பேரறிவாளன்.. சாந்தன் .. முருகன் ஆகிய தோழர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..

:( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன், 23 July 2012 - 08:12 PM.

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#10 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,047 posts
 • Gender:Male

Posted 23 July 2012 - 08:00 PM

வெட்கம் கெட்ட இந்திய அரசியல்வாதிகள்.

முதல் தலையாட்டி பிரதமர்
இரண்டாவது தலையாட்டி சனாதிபதி

இத்தாலிக் குடும்பத்துக்கு ஒத்து ஊதுவதற்கு ஏற்றவர்களே இருவரும்.
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]