Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 22 July 2012 - 08:09 AM
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் ஹிந்தியில் கையெழுத்திடவேண்டும் என்று சமீபத்தில் வற்புறுத்தப்பட்டதை தமிழ்நாட்டில் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து அந்த உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பிய சுற்றறிக்கையில் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஹிந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் ஹிந்தியில் கையெழுத்திட்டு, ஹிந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன் தெரிவித்தார். இந்த உத்தரவை ஊழியர்கள் ஏற்று நடக்கவேண்டும் என்று ஊழியர்களின் கணினி வாயிலாக வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து பணியாளர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்ததாக கூறும் சுவாமிநாதன், உடனடியாக தமது சங்கமும் ஊழியர்களும் இதை எதிர்த்ததாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தங்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் அமைதி காப்பதாக கூறும் சுவாமிநாதன், இந்தி மொழியை பரப்புவதற்கான பிரிவும், அரசு அதிகாரிகளும் அதற்கான நிதி ஒதுக்கீடும் தொடரும்வரை எதிர்காலத்தில் இத்தகைய கோரிக்கைகள் தொடர்ந்தும் வரலாம் என்றும் கருதுகிறார். எனவே,ஹிந்தி மொழியை மத்திய அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் கட்டாயப்படுத்தி திணிப்பது குறித்து பொது விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். http://www.bbc.co.uk...tamilnadu.shtml
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]