அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!
வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர்.

1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர்.
இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது.
ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் திறன் போன்றவைகள் கொண்டஇவரை ஒரு நல்ல எம்பியாகவே எல்லா கட்சியினரும் பார்த்தனர்.
இலங்கை தமிழர்களுக்காக முதலில் அதுவும் ஓங்கி ஒலித்த ஒரு குரல் என்றால் இவரின் கர்ஜனை குரல் தான்.
ஆம் 1978 ஆம் ஆண்டு ராஜ்யசபா பிரவேசத்தின் போது வாஜ்பாய், அத்வானி போன்றவர்களால் மிகவும் கவரப்பட்டவர்.
இவரின் அடராது இலங்கை தமிழர்களின் பாசம் ஒரு கட்டத்தில் இந்திராகாந்தியை திரும்பி பார்க்க வைத்தது மட்டுமில்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க நான் உறுதியளிக்கிறேன் என்று கூற வைத்தது.
ஆதியில், இவர் திமுக தான் என்றாலும் ஒரு வெள்ளை மனது கொண்ட எம்பியை ஏனோ தலைமைக்கோ அல்லது கடை நிலை தொண்டர்களுக்கோ வர வர பிடிக்காமல் போனபோது தான் 1993 ஆண்டு தி மு க வை விட்டு விலக்கப்பட்டார்.
சரியாக ஒரு வருடம் கழித்து 1994 ஆம் ஆன்டுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உதயமானது.
தமிழ் நாட்டில் யார் புதிய கட்சி தொடங்கினாலும் அது ஒரு கார்ப்பேரெட் கம்பெனி போலத்தான் ஒன்று கூட்டணி தர்மம் தேவை அல்லது கட்சியை மெர்ஜ் செய்து ஒப்புக்கு சப்பானாக இருக்க வேண்டிய நிலை தான் இன்று வரை.
இதில் மீண்டு வந்தவர் தான் விஜயகாந்த்
( இப்போதைக்கு அவர் கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை!- என்னை கேட்டால் இன்னுமொரு 20 ஆண்டுகளுக்கு திராவிட டாமினேஷன் இருக்கும் வரை அவரால் இதே போல் அல்லது இதை விட கொஞ்சம் பெட்டர் தான் பண்ண முடியுமே தவிர தனி ஒரு மெஜாரிட்டி கட்சியாக தன்னை நிலை நாட்டி கொள்ளமுடியாது எனறுதான் அரசியல் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.)
இப்படித்தான் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் கூட. ஆனாலும் இவரின் இலங்கை தமிழர்களின் காதல் மட்டும் என்றுமே மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் ரகம் இல்லை.என்று எல்லோருக்கும் தெரியும்.
ஜெயலலிதா முதலைமைச்சராக இருந்த போதுதான் இந்த வைகோ – 2002 ஆம் ஆண்டு கைது செய்யபட்டு சுமார் 18 மாசம் பொடா சட்டத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தன் நிலையை தெளிவு படுத்தினார் –
ஆமாம் நான் ஒரு விடுதலை புலி ஆதரவாளன் அதில் மாற்றம் எதுவும் இல்லை என்று.
இவரின் முல்லை பெரியார், ஸ்டெர்லைட் போன்ற பல சமூக பிரச்சினைக்காக ஒரு ஆதாயமும் இல்லாமல் இவரின் குரல் தொடர்ந்து ஒலித்த போது கூட ஏனோ பதவி ஆசை இல்லாமல் இருந்த ஒரு நல்ல மனிதர்.
இவ்வளவு ஏன்? பிஜேபி மத்தியில் ஆட்சி செய்யும் போது கூட பல தடவை மத்திய மந்திரி பதவி ஆஃபரை கூட நிராகரித்தார்.
ம தி மு க கட்சி தொடங்கி இன்றோடு சுமார் 18 வருடங்கள் ஆகியும் இந்த கட்சியால் சமீபத்திய வரைக்கும் மிக அதிகமாக பிரகாசிக்க முடியாமல் போன காரணம் என்ன?
உப்பு விற்க போனால் மழை பெய்யும், மாவு விற்க போனால் காற்று அடிக்கும் என்பது ஏனோ இவருக்கு அதிகம் பொருந்தியதுதான்.

பல சிறை தியாகங்கள் செய்து 2006 ஆம் ஆண்டு அ தி மு க வுடன் களத்தில் இறங்கி தோல்வி கண்ட போதிலும் அசராமல் கூட்டணியில் இருந்தவர்
2008 ஆம் ஆண்டு இலங்கை அரசின் அத்துமீறலை கண்டித்த போது மத்தியில் காங்கிரஸுடன் கூட்டனியில் இருந்த திமுக இவரையும் கண்ணப்பனையும் கைது செய்து 14 நாள் கழித்து வெளியே வந்த மனிதர்.
2011 ஆம் தமிழக தேர்தலில் இவரும் மாறன் சகோதரரின் 2ஜி மற்றும் திமுக காங்கிரஸ் கொள்ளைகளை ஊர் ஊராக சென்று விழிப்பணர்வு கூட்டங்கள் போட்டு பட்டி தொட்டி வரை பாப்புலராட்டி பெருகிய போது தான் கூட்டணி அலாட்மென்ட்கள் ஒத்து வரவில்லை.
இதுதான் ஒரு திராவிட கட்சியின் வெற்றிக்கும் இன்னொரு திராவிட கட்சியின் தோல்விக்கும் முக்கிய காரணம்.
இருந்ததும் கட்சியின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக வலுழுவிழந்து போனதற்க்கு காரணம் -எந்த கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பும் நம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நமக்கு ஏதாவது நல்லது நடக்காதா என்று ஒரு காமன் சிட்டிசன் அஜென்டாதான் ,
ஆனால் கடைசி நேர எக்ஸிட் நிறைய தொண்டர்கள் ஏமாந்து தான் போயினர். இவரின் இத்தனை வருட சாதனையில் இலங்கை தமிழர் பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை, நல்லதொரு ஆட்சிக்கு இவர் பங்கும் இல்லை மற்றும் இப்போது சமீபத்திய அமெரிக்க ராணுவம் கொன்ற தமிழ் மீனவர்களின் துயரத்தில் இவரின் குரல் ஒலிக்காமல் போனது நிறைய தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே.
எந்த திராவிட கட்சியும் தமிழர்களின் சென்டிமென்டை ஒரு வியாபர நோக்கத்துடன் பார்த்த போது வைகோ நமக்காக இருக்கிறார் என்று கொஞ்சம் நிம்மதி கொண்டனர்

ஆனால் இந்த விஷயத்தில அமெரிக்காவை எதிர்த்து இவர் குரல் கொடுக்காமல் போனதற்க்கு காரணம் அவரின் அமெரிக்க கனெக்ஷன் மற்றும் அவரின் அமெரிக்க உறவுகள் மற்றும் அவரின் அமெரிக்க விசாவும் தான் என்று அவரை பற்றி இன்னுமொரு பக்க விமர்சனம்.
அட குரல் கூட குடுக்க வேண்டாம் அந்த இறந்தவரின் பிணத்தையாவது இந்தியாவுக்கு கொண்டுவர இவர் முயற்ச்சித்தால் அதுவே இந்த கணம் பெரியது என பலர் ஏங்குகின்றனர்.

வைகோ மிச்சம் இருக்கும் நாட்களிள் ஏதாவது ஒர் அதிரடி மாற்று வழியை கொண்டால் ஒழிய இவர் அரசியலில் பிரகாசிக்க முடியாது என நிறைய அரசியல் சாணக்கியர்கள் கூறுகின்றனர்.
இவரை போல தன்மானம் மனதில் கொண்டு வந்து ஜி. கே மூப்பனார் கட்சியை ஆரம்பித்து பெரிய அளவில் குறுகிய நேரத்தில பிரபலம் ஆகும் போது ஏன் வைகோ மட்டும் பிரகாசிக்க முடியவில்லை என்பதை காலமும் அவரும் தான் பதில் சொல்ல வேண்டும்…..
பதில் சொல்வாரா…
http://www.aanthaireporter.com/?p=8353















