டொரண்டோவில் ஒரே நாளில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள். 4 பேர் படுகாயம். -
Started by
easyjobs
, Jul 21 2012 05:33 PM
1 reply to this topic
#1
Posted 21 July 2012 - 05:33 PM
டொரண்டோவில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து கடந்த ஆறு நாட்களில் டொரண்டோவில் மொத்தம் ஆறு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தனவா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கடைசியாக நடந்த துப்பாகி சூடு Kennedy and Ellesmere roads area என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாகவும் இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரது வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனாலும் இவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிலமணி நேரங்களுக்கு முன் அதாவது இரவு 11.30 மணியளவில், Bloor and Jane streets என்ற இடத்தில் இரண்டு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 21 வயது வாலிபர் ஒருவருடைய தோள்பட்டையிலும், 19 வயதுள்ள வாலிபருக்கு காலிலும் குண்டுகள் பாய்ந்துள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கறுப்புநிற காரில் வந்த மர்ம மனிதர்கள் இரண்டு பேர்களே இந்த இரண்டு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணம் என்றும் இவர்களில் ஒருவன், கறுப்பு நிறத்தை உடையவன் என்றும், மற்றொருவன் தலையை மொட்டை அடித்துள்ளான் என்றும் நேரில் பார்த்த சாட்சிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இருவருமே வெள்ளை நிறத்தில் டி சர்ட் அணிந்துள்ளதாகவும் தெரிகிறது. இவர்களை பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனே அருகிலுள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
\
TO SEE THE SHOOTING PLACE OF IMAGE CLICK HERE

#2
Posted 21 July 2012 - 07:52 PM
செவ்வாய்க்கிழமை நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் அதிகமான அளவில் காலவ்துறை இறக்கப்பட்டும் ஒவ்வொரு நாளும் சூட்டு நிகழ்வுகள் நடக்கின்றன. இரண்டு கறுவல் இனத்தவர்கள் செவ்வாய் அன்றும் அதன் பின்னர் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை காவல்துறை வெற்றிகரமாக கைது செய்தது ... ஒருவரை. அவரும் செவ்வாய்கிழமை துப்பாக்கிச்சூட்டில் காயப்பட்டவர்.
இதுவரை காவல்துறை வெற்றிகரமாக கைது செய்தது ... ஒருவரை. அவரும் செவ்வாய்கிழமை துப்பாக்கிச்சூட்டில் காயப்பட்டவர்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














