நேற்று அமெரிக்காவில் பேட்மேன் ஓடிய தியேட்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண், சிறிது நாட்களுக்கு முன்பு டொரண்டோ ஈட்டன் மாலில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
ஜூன் மாதம் 2ஆம் தேதி டொரண்டோவின் ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, ஜெசிக்கா காவி என்று அழைக்கப்படும் ஜெசிக்கா ரெட்ஃபீல்ட், (Jessica Ghawi, also known as Jessica Redfield, ) அந்த உணவகத்தில்தான் இருந்தார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பித்த ஜெசிக்கா, நேற்று அமெரிக்க தியேட்டரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை ஜெசிக்கா, தன்னுடைய பாய்பிரண்டுடன் அமெரிக்க திரையரங்கில் படம் பார்ப்பதற்காக உள்ளே சென்று நடுவரிசை இருக்கையில் உட்கார்ந்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது அலறி அடித்துக் கொண்டு வெளியே வரும் வழியில் துப்பாக்கி குண்டு அவரை துளைத்துள்ளது. இதுகுறித்த தக்வல்களை ஜெசிக்காவின் சகோதரர் தன்னுடைய பிளாக்கில் இன்று தெரிவித்துள்ளார். ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஜெசிக்கா தப்பித்ததையும் அவர் தன்னுடைய பிளாக்கில் விவரித்துள்ளார்.
மேலும் அவர் தன்னுடைய பிளாக்கில், ஜெசிக்கா, யாருக்கும் சிறிது கூட கெடுதல் நினைக்காத குழந்தை மனம் படைத்தவர் என்றும் அவருடைய தலையில் ஒரு துப்பாக்கி குண்டும், காலில் ஒரு துப்பாக்கி குண்டும் துளைத்து அவருக்கு மரணம் நேர்ந்ததை நினைக்கும்போது ம்னதிற்கு மிகவும் கஷ்டமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]