Jump to content


Tamil Star News
Photo

ஓயாத அலைகள் - 1ல் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட 12 மாவீரர்களின் நினைவு


  • Please log in to reply
6 replies to this topic

#1 மின்னல்

மின்னல்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,761 posts
  • Gender:Male
  • Location:முகில்களுக்குள்

Posted 20 July 2012 - 11:48 PM

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவுதளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது. கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் 21.07.1996 அன்று

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் - சங்கத்தானை, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் - அக்கரைப்பற்று, அம்பாறை)
மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் - கும்புறுப்பிட்டி, திருகோணமலை)
கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா - குமுழமுனை, முல்லைத்தீவு)
கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் - கரடியனாறு, மட்டக்களப்பு)
கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் - தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் - திருகோணமலை)
லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி - சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா - மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி - அக்கரைப்பற்று , அம்பாறை)
வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாளில் அம்பாறை மாவட்டம் பன்னலகமவில் அமைந்திருந்த தமது முகாமிலிருந்து மாந்தோட்டம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது

மேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்) ஆறுமுகம் சிவகுமார் - கல்முனை, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றை நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Posted Image
Posted ImagePosted Image
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்

Advert

#2 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,304 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 21 July 2012 - 09:09 AM

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,600 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 21 July 2012 - 10:52 AM

வீரவணக்கங்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 July 2012 - 12:25 PM

சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடி தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,924 posts
  • Gender:Male

Posted 21 July 2012 - 12:33 PM

வீர வணக்கங்கள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#6 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 21 July 2012 - 04:39 PM

வீர வணக்கங்கள்

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#7 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,201 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 21 July 2012 - 05:37 PM

வீரவணக்கங்கள்




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]