
15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 29ம் ஆண்டு நினைவு நாளும் 15.07.2001 அன்று மன்னாரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இன்பனின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் உட்பட மூன்று போராளிகள் 15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் முற்றுகையில் சிக்கிக் கொண்டனர். இந்த முற்றுகையை முறியடித்து தப்பிச் செல்வதற்கு முயன்றவேளை சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தளபதி லெப். சீலன் விழுப்புண்ணடைந்தார். தன்னால் தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த தளபதி சீலன் தன்னைச் சுட்டுவிட்டு வீரவேங்கை ஆனந்தையும் மற்றைய போராளியையும் தப்பிச் செல்லுமாறு பணிக்கிறார், தயங்கி நின்ற இவர்களை தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலைய சகதோழனால் தளபதி சீலன் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இந்நிலையில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் வீரவேங்கை ஆனந்தும் விழுப்புண்ணடைய தளபதி சீலனின் வழியைப் பின்பற்றி, தன்னையும் சுடுமாறு சகதோழனை வலியுறுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர்களின் 29ம் ஆண்டு நினைவு நாளும்,
15.07.2001 அன்று மன்னார் மாவட்டம் கொக்குப்படையான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
லெப்.சீலன் பற்றிய குறிப்பு http://www.veeraveng...ny-trinco-malee
வீரவேங்கை ஆனந் பற்றிய குறிப்பு http://www.veeraveng...ayiliddi-jaffna



















