Jump to content


Tamil Star News
Photo

நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது! - தலிபான் கமாண்டர் ஒப்புதல்


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,416 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 13 July 2012 - 09:14 AM

Posted Image
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என்று தலிபான் தீவிரவாத கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். நேட்டோ படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான் உயர்நிலை கமாண்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்கன் செய்திகளை சேகரித்து வரும் ஆசிரியர் மைக்கேல் செம்பல் பேட்டி எடுத்துள்ளார். அதில் தலிபான் கமாண்டர் கூறியிருப்பதாவது:
ஆப்கனில் நேட்டோ படைகளுக்கும் தலிபான்களுக்கும் நடந்து வரும் போரில், தலிபான்கள் வெற்றி பெறுவது கடினம். தலிபான்கள் வெற்றி பெற கடவுள் அருள் இருக்க வேண்டும். கடந்த 96ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தது. அமெரிக்க படைகள் வந்த பின் நிலைமை மாறிவிட்டது. அல் கய்தா அமைப்பின் நடவடிக்கையும் சரியில்லை.
தலிபான்களில் 70 சதவீதம் பேர் அல் கய்தா மீது கடும் கோபத்தில் உள்ளனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஒசாமா கொல்லப்பட்ட பிறகு தலிபான்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஒசாமாவின் கொள்கைகள் ஆப்கனை சீரழித்துவிட்டன. உண்மையில் புனித போரை (ஜிகாத்) ஒசாமா விரும்பி இருந்தால், ஆப்கனில் இருந்ததை விட அவர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கிருந்து ஜிகாத் நடத்தி இருக்க வேண்டும். ஒசாமாவால் ஆப்கன் சிதைந்துவிட்டது. இவ்வாறு தலிபான் கமாண்டர் கூறியதாக ஸ்டேட்ஸ்மேன் இதழில் பேட்டி வெளியாகி உள்ளது.
http://seithy.com/br...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert



Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]