Jump to content


Tamil Star News
Photo

அரசியல் ஆண்மையற்றவர் மன்மோகன் சிங்.. பால் தாக்கரே கடும் தாக்கு


  • Please log in to reply
3 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,313 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 10 July 2012 - 12:16 PM

Posted Image

மும்பை: அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.


இதற்கெல்லாம் முடிவு கட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் தாக்கரே.


ஆளாளுக்கு இப்போது மன்மோகன் சிங் தலையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளனர். டைம் பத்திரிக்கை முதலில் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டது. பிறகு பாஜக விமர்சனம் செய்தது. இப்போது பிரதமரை அரசியல் ஆண்மையற்றவர் என்று வர்ணித்துள்ளார் பால் தாக்கரே.


இதுகுறித்து அவர் கூறுகையில், செயல்திறனற்றவர் என்று பிரதமரை ஒரு பத்திரிக்கை கூறியுள்ளது. அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று மக்களுக்கு விளங்கவில்லை. எனது பாஷையில் சொல்வதானால், அரசியல் ஆண்மையற்றவர் என்று சொல்லலாம்.


அதேசமயம் டைம் பத்திரிக்கை எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காரணம்,டைம் பத்திரிக்கை தனது தொழிலைச் செய்துள்ளது.


சில காலத்திற்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியர்களால் அதிகம் வெறுக்கப்படும் அரசியல்வாதி என்று இதே டைம் பத்திரிக்கைதான் வர்ணித்திருந்தது. ஆனால் அவரை வெறுத்தவர்கள், இந்துத்வாவை விரும்பாத சக்திகள் மட்டுமே.


இது நாள் வரை பிரதமர் மன்மோகன் சிங்கை உள்ளூர் பத்திரிகைகள்தான் சாடி வந்தன. தற்போது வெளிநாட்டு பத்திரிகைகளும் கூட அதைச் செய்யத் தொடங்கி விட்டன.


இந்த இக்கட்டான நேரத்தில் நல்லாட்சி புரியக் கூடிய, ஊழல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், தீவிரவாதம், பிற தேச துரோகிகள் ஆகியோருக்கு எதிராக போராடக் கூடிய, தைரியமான ஒரு தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டியது பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடமையாகும்.


இதற்கு சிவசேனாதான் இப்போதைக்கு தகுதியான ஒரே கட்சி. நாட்டில் புரட்சி வெடிக்க வேண்டும். அது டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப் புரட்சி மகாராஷ்டிராவிலிருந்து வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.


http://tamil.oneindi...ngh-157420.html


மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 10 July 2012 - 12:54 PM

அரசியல்லை வேறை ஆண்மைபெண்மை பாக்கிறாங்களப்பா....அதுவும் பால் தாக்கரே :icon_idea:

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#3 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,076 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 10 July 2012 - 03:04 PM

அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.





இருக்கமுடியாது ...நிச்சயமாய் இருக்கமுடியாது .....அது இல்லாவிட்டால் இன்றுவரை சோனியா
அவரை அரசியலில் வச்சிருந்திருக்க மாட்டார் :D :D :icon_idea:
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#4 ukkarikalan

ukkarikalan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 216 posts
  • Gender:Male

Posted 12 July 2012 - 10:06 AM

அந்தாள் ஒரு டம்மி பீஸ் என்று கண்டுபிடிக்க இவங்களுக்கு இந்தளவு காலம் எடுத்து இருக்கிறது. :D :D




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]