வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைப்பிரதேசமானதும் தற்போதைய நிலையில் மன்னார் வவுனியா மற்றும் தென்பகுதியை இணைக்கும் மதவாச்சிக்கிடையில் கேந்திர முக்கியத்துவமானதாக கருதப்படும் பறையனாளன் குளத்தில் புதிய பௌத்த ஆலயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
பறையனாளன் குளத்தில் மன்னார் நோக்கி அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனை; தடைக்கு எதிர் புறமாக தொடருந்து பாகைகும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடருந்து நிலையத்துக்கும் இடையில் இவ் நிலையும் ஆலயமும் நிறுவப்பட்டுள்ளது.
அங்கு புதிதாக முழைத்த அல்லது முழைக்கவைக்கப்பட்ட அரச மரம் ஒன்றில் கீழ் வெள்ளை நிறத்திலான கட்டம் ஒன்று நிறுவப்பட்டு அதனுள் இரண்டு அடி உயரம் கொண்ட சமாதி நிலைப் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான இவ் சிலையை சுற்றி அலங்காரங்கள் வைக்கப்பட்டு தினமும் விளக்கேற்றப்படுவதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முன்னைய காலங்கில் பள்ளமடு மற்றும் கட்டையடம்பன் முன்னரங்க நிலைகளில் போர் நடந்த போது அனைவராலும் பேசப்பட்டு வந்த தமிழீழத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பில் படையினர் தமது ஆக்கிரமிப்பின் அடையாளத்தை நிறுவியுள்ளதுடன் மூன்று மாவட்டஙகளான் மன்னார், வவுனியா, அனுராதபுரத்தை இணைக்கும் இவ் பிரதேசத்தில் எதிர்கால அபிவிருத்திகள் திட்டமிடப்பட்டுக் கொண்டுள்ள
வேனையில் இவ் ஆக்கிரமிப்பை செய்துள்ளது பல சந்தேகங்களை ஏற்படத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் குஞ்சுக்குளம் ஆக்கிரமிப்பும் இவ்விட்தில் இருந்து இரு கிலோமீற்றருக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் புத்தர்சிலையை நிறுவியது படையினர் மற்றும் தற்போது இந்திய நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மன்னார் மதவாச்சி தொடருந்து தடத்தின் புனரமைப்பில் பணியாற்றும் சிங்களவர்களுமே எனத் தெரிவித்துள்ள கணேசபுர வாசிகள் அங்குள்ள அரச காணிகளையும் அவர்கள் அபகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் உரிய அதிகாரிகள் அதை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://thaaitamil.co...்கிடையில்-பறைய/
மதவாச்சிக்கிடையில் பறையானாளன்குளத்திலும் புதிய பௌத்த ஆலயம்.
Started by
chinnavan
, Jul 06 2012 06:10 PM
No replies to this topic
#1
Posted 06 July 2012 - 06:10 PM
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














