Jump to content


Tamil Star News
Photo

ஒரு நாட்டை 'ரேட்டிங்' ஏஜென்சிகள் எப்படி மதிப்பிடுகின்றன!?


  • Please log in to reply
9 replies to this topic

#1 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,710 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 04 July 2012 - 06:40 PM

ஒரு நாட்டை 'ரேட்டிங்' ஏஜென்சிகள் எப்படி மதிப்பிடுகின்றன!?

Posted Image

இன்றைக்கு மீடியாவில் அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயம் ஒரு நாட்டைப் பற்றிய ரேட்டிங். என்ன அது? எதற்காக இந்த ரேட்டிங்?

விவரமாகப் பார்ப்போம்...

ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா... அவனால் அதைத் தாங்க முடியுமா.. திருப்பி செலுததும் திறன் இருக்கிறதா... என்பதை அலசுவதைப் போலத்தான், ஒரு நாட்டைப் பற்றியும் அலசி பட்டியலிடுகிறார்கள். புள்ளிகள் தருகிறார்கள்.
நல்ல ரேட்டிங்கில் உள்ள நாடு அல்லது நிறுவனத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தர உலக நிதி அமைப்புகள் முன்வரும். அந்த நாட்டில் முதலீடு செய்ய வெளி முதலீட்டாளர்களுக்கு தயக்கமிருக்காது. ரேட்டிங்கில் குறைந்துவிட்டால், எல்லாமே தலைகீழ்தான். கடன் தர முன்வரமாட்டார்கள். அப்படியே தந்தாலும் நிறைய நிபந்தனைகள், வட்டிகள் இருக்கும்.
இதைச் செய்ய உலகளவில் ஸ்டாண்டர்டு அண்டு புவர், மூடி, ஃபிட்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களின் ரேட்டிங்கில் ஒரு நாடு வீழ்ச்சி கண்டால், அவர்களின் கடன் பெறும் திறன் வெகுவாகக் குறைந்துவிடும்.

உதாரணத்துக்கு, இந்தியாவின் ரேட்டிங் குறைந்த நிலையில், இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் முதலீடு திரட்ட முயற்சிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது, முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்துக்கு கடன் தர முன்வர மாட்டார்கள். அல்லது பாதுகாப்பு கருது, ஏகப்பட்ட வட்டியைத் தீட்டிவிடுவார்கள்.
அதிக வட்டிக்கு வாங்கிவிட்டு, பின்னர் அதைச் செலுத்த முடியாமல் நிறுவனம் திணறும் நிலை வரும். இது அந்த நிறுவனத்தை திவாலுக்கு இட்டுச் சென்றுவிடும்.

இந்தியாவின் ரேட்டிங்

ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவன மதிப்பீட்டின்படி, கடந்த 2007-ல் இந்தியாவின் ரேட்டிங் நிலையாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரலில் இந்த கடன் பெறும் திறன் பட்டியலில் சறுக்கிவிட்டது இந்தியா. இப்போது மேலும் வீழ்ச்சி கண்டு 'junk status' க்கு போகப் போகிறது என்கிறது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர். இந்த ஜங்க் நிலை மிக மோசமானது.

இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து நாம் பெறும் கடன்கள் ரொம்ப காஸ்ட்லியாகிவிடும். உலகில் முதலீட்டுக்கு ரிஸ்க் அதிகமுள்ள நாடு என்ற பெயரை இந்தியா பெறும்!

http://tamil.goodreturns.in/classroom/2012/06/what-do-rating-agencies-like-s-p-moody-and-fitch-do-000017.html

டிஸ்கி:

பொருளாதார நிபுணர் அவர்கள் இலங்கையின் ரேட்டிங்க் என்ன என விளக்க வேண்டும்
  • akootha likes this

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 04 July 2012 - 06:53 PM

ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவன சுட்டிகளை பார்க்க : http://chartsbin.com/view/1177

மூடி நிறுவன சுட்டிகளை பார்க்க : http://chartsbin.com/view/1175

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 04 July 2012 - 09:44 PM

கனடா, பிரித்தானியா, ஜேர்மனி ஸ்கன்டினேவிய நாடுகள்,அவுஸ்
முன்னணியில் நிற்கின்றன.

சிறிலங்கா கடைசியில் இருப்பது சந்தோசம்.

மகிந்தா கூவிக் கூவி அழைத்தாலும்
ஒரு நாடும் அங்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள்.

இணைப்பிற்கு நன்றி புரட்சி மற்றும் அகூதா

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 06 July 2012 - 01:31 PM

ஐரோப்பிய மத்திய வங்கி - வரலாற்றில் அதி குறைந்த வட்டி வீதம்

நேற்று ஐரோப்பிய மத்திய வங்கி வங்கிகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 0.75% ஆக குறைத்தது.
இது வரலாற்றில் அதி குறைந்த வட்டி வீதம்
நோக்கம் - மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை தவிர்ப்பது
கவனம் - குறைந்த வட்டி என்று கடனின் மூழ்காமல் இருப்பது

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 06 July 2012 - 01:38 PM

ஒரு மாதத்தில் சீனாவின் மத்திய வங்கி வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் வேகமான வளர்ச்சியையும் கொண்ட சீனா தனது முதன்மை வட்டி வீதத்தை குறைத்து பொருளாதார வளர்ச்சியை பேண முனைகின்றது.

குறைத்த வீதம் - 0.31%
இப்பொழுதுள்ள வட்டி வீதம் 6%

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 06 July 2012 - 02:04 PM

பிரான்சில் அதி உச்ச பணக்காரர்கள் மீது வரி அதிகரிப்பு

இதன் மூலம் கிட்டத்தட்ட எழுபது பில்லியன்களை ஆளும் அரசு தனது கணக்கில் பெறவுள்ளது. பொருளாதாரம் சரிந்து வரும்பொழுது வருவாயை கூட்ட எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் சிலவேளைகளில் எதிர்விளைவுகளை உருவாக்கும்.

பணக்காரர்கள் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்குவார்கள். சில நாடுகள் இவ்வாறானவர்களை வெளிப்படையாகவே கருகின்றது, உதாரணம் பிரித்தானியா.

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்திலும் 6 இலட்சத்திற்கு மேலாக உழைப்பவ்ர்களைடம் அதிக வரி அறவிடப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 30,000 பேரளவில் அதிக வரி செலுத்த வேண்டு வரும். சிலர் வரி குறைந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,634 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 06 July 2012 - 02:15 PM

ஆறு லட்சம் எனக்குக் குடுத்தால் வரிகட்டத் தயங்கமாட்டேன் என்பதை கனேடிய அரசுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#8 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,750 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 06 July 2012 - 06:20 PM

பிரான்சில் அதி உச்ச பணக்காரர்கள் மீது வரி அதிகரிப்பு

சில நாடுகள் இவ்வாறானவர்களை வெளிப்படையாகவே கருகின்றது, உதாரணம் பிரித்தானியா.


தற்போது பதவி ஏற்றுள்ள சோசலிச கட்சி அரசும் அதன் புதிய ஐனாதிபதியும் தாம் தேர்தலில் முன் வைத்த திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளனர்
இந்த வகையில் அதி உச்ச வருமானம் பெறுபவர்கள் மமற்றும் பணக்காறர்களுக்கு என்று விசேச வரித்திட்டங்கள் செயற்படுத்தபட இருக்கின்றன. இதை பிரித்தானிய பிரதமர் தமக்கு சாதகமாக பாவித்து ஓரு அறிக்கை விட்டிருநந்தார். அதன்படி பிரான்சின் இத்திட்டத்தால் பாதிக்கப்படவிருக்கும் பகுதியினரை தான் சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்பதாகவும் பல வரிசச்சலுகைகளை அவர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இது பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமான தொடர்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஐரேராப்பிய கூட்டத்திலும் இது பிரதிபலித்தது.

இங்கு பிரெஞ்சுக்காறரின் ஆதங்கம் என்ன வெனில் ஐரேராப்பிய கூட்டமைப்பாக இருக்கலாம் ஈரோவாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தமக்கு சாதகமானவற்றை மட்டுமே அவர்கள் தெரிவு செய்து கொண்டு சுயநல அடிப்படையில் செயற்படுகின்றனர் என்பதே.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#9 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 06 July 2012 - 06:26 PM

ஆறு லட்சம் எனக்குக் குடுத்தால் வரிகட்டத் தயங்கமாட்டேன் என்பதை கனேடிய அரசுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். :D


அதுதானே நாமும் பல காலமாக கேட்டு வருகின்றோம். சொந்த தொழிலை ஆரம்பியுங்கள் :D
  • இசைக்கலைஞன் likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#10 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,134 posts
  • Gender:Not Telling

Posted 06 July 2012 - 07:37 PM

அதுதானே நாமும் பல காலமாக கேட்டு வருகின்றோம். சொந்த தொழிலை ஆரம்பியுங்கள் :D

நல்ல ஜடியா .. அப்படியே ஜேர்மனியிலும் ஒரு கிளை திறந்து என்னை GM ஆக்கிவிடுங்கள். :D :D
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]