எனது முதல் பதிவாகவும் காலத்தின் தேவை கருதியும் தமிழரின் வீரத்தை சோழர் இராட்சியத்தின் எழுச்சி வீழ்ச்சி போன்றவிடயங்களை
மிகவும் மேலோட்டமாக அலசி எங்கள் வீரம் முள்ளிவாய்க்காலுடன் நின்றுவிடப்போவதில்லை எனும் பதிவுடன் எனது யாழ் கலைப்பயணத்தை ஆரம்பிக்கிறேன்...
சோழர் என்பவர் பழந்தமிழ நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் ஓர் குலத்தவராவர், மூவேந்தரில் மற்றைய குலத்தவர்கள் சேரரும்
பாண்டியரும். கி.மு 300௦௦ களில் தொடங்கி கி.பி 1279 வரை தான் சோழராச்சிய காலமாமாகக் கருதப்படுகிறது. கி.மு வலிமையாய் இருந்த சோழசாம்ராட்சியம் கி.பி 2 ம் நூற்றாண்டில் சிற்றரசு நிலைக்குத் தாழ்ந்து மறுபடியும் 9 ம் நூற்றாண்டுக்கு பின் மறுபடியும் வலிமை பெறத்தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. 10 -12 ம் நூற்றாண்டுகள் சோழர்களின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் சோழர்கள் கடற்படைமூலம் கடல்தாண்டிச் சென்று சில நாடுகளையும் வென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி வென்றவர்கள் சோழர்களே ஆவர்.
இந்தச் சரித்திரத்திலிருந்து கவனிக்கப்படவேண்டிய விசயம் என்னவென்றால் வலிமையாயிருந்து வீழ்ச்சியடைந்து மீண்டும் வலிமை பெற்ற சாம்ராட்சமாக 13 ம் நூற்றாண்டுவரையிருந்தது அவர்கள் இராட்சியம். இந்த மாற்றங்களெல்லாம் நிழந்தது பல நூற்றாண்டு இடைவெளிகளில் இப்படியான காலச்சக்கரத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழர்படையின் ஆரம்பம் என்று சொல்லப்படும் 1970 நடுப்பகுதி தொடக்கம் தமிழன் வீரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எதிரி கொக்கரிக்கும் முள்ளிவாய்க்கால் வரையான காலப்பகுதியானது மிகமிக சிறியதான காலப்பகுதி மட்டுமே.
இந்த முப்பதாண்டு காலப்பகுதியில் பூச்சியத்தில் கிடந்த தமிழினத்தின் வீரம் பூமியின் மறு எல்லைவரை தெரியத் தொடங்கியது . சிறிது சிறிதாகக் கட்டியமைக்கப்பட்ட எமது படைக்கட்டமைப்பு எதிரியை மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலிருந்து
மரபுவழிப் போர்முறைக்கு மாறி எதிரியை துவம்சம் செய்யத்தொடங்கியது. வலிமையான கடற்படைக் கட்டமைப்பும் அமைக்கப்பட்டு
பல்லாயிரம் மாவீரர்களின் தியாகத்தின் முலம் எதிரியை எங்கள் தாய்மண்ணிலிருந்து துரத்தி முன்றில் இரண்டு பகுதிவரையான
தாய்நிலத்தை மீட்டு ஒரு நிழல் அரசையே அமைத்து ஆளத்தொடங்கியது எங்கள் தமிழர் படை. எல்லாவற்றுக்கும் மேலாக
தமிழனின் வரலாற்றில் முதல்முறையாக வான்படையையும் உருவாக்கி, அதுவரை வானாதிக்கம் செலுத்திவந்த எதிரியின்
வான்பரப்புக்கு உள்ளேயே சென்று எதிரியின் கோட்டையை சிதைத்து வந்தது தமிழனின் வான்படை. உயர் தொழில் நுட்பத்தைக் கொண்ட
போர் விமானங்களை இலங்கையரசு வைத்திருந்தும் அடிப்படையில் எந்தவொரு உயர் தொழில் நுட்பமுமில்லாத
ஆனால் மனோபலத்திலும் அதீத திறமையையும் கொண்ட தமிழீழ வான்படையை கண்டு அஞ்சி நின்றது இலங்கையரசு.
இந்த நிலையில் தான் வல்லரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தனக்கு சாதகமாக எடுத்து அத்துடன் இந்திய அரசின்
சூழ்ச்சியுடன் தமிழனின் உரிமைப்போரை தனது போய்ப் பரப்புரையால் பயங்கரவாதமாக உலகுக்கு காட்டி முள்ளிவாய்க்காலில்
கொண்டுவந்து படு கோரமான இன அழிப்புடன் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்று உலகுக்கு சொல்லியது, இன்றுவரை
சொல்லிக்கொண்டிருக்கிறது இலங்கையரசு. விடுதலைப் புலிகள் எனும் பெயரையே தமிழ்மக்கள் மனங்களிலிருந்து அகற்றும்
நோக்குடன் மாவீரர் இல்லங்கள் குஉட துடைத்தழிக்கப்பட்ட நிலையில் மூலைமுடுக்கெல்லாம் புத்தர் சிலைகள்
முளைத்துக்கொண்டிருக்க, எங்கெங்கெல்லாம் புலிக்கொடி பறந்ததோ அங்கெல்லாம் சிங்கக்கொடி பட்டொளிவீசிப் பறந்துகொண்டிருக்கிறது.
வெல்லப்படமுடியாத தமிழர் படை என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளையே யுத்தம் ஆரம்பித்து இரண்டரை வருடங்களுக்குள்ளேயே
வென்றுவிட்டோம், தமிழரை தோற்கடித்துவிட்டோம், இனி அவர்களால் எங்களை ஒன்றுமே செய்யமுடியாது என்று சொல்லிச் சொல்லி தனது இனவாத நஞ்சை தனது சிங்கள மக்கள் மத்தியிலே பரப்பிய வண்ணமிருக்கிறது. அதே நேரம் முள்ளிவாய்க்கால் எனும் பெருங்கொடுமையை தமிழருக்கு இழைத்ததன் மூலம் தமிழர் மனங்களில் அதை என்றும் அதை மாறா
வடுவாகச் செய்துள்ளது. அந்தப் பெருந்துயரம் இந்தக் கணம்வரை தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழன் மனங்களிலும்
நீறு புத்த நெருப்பாக எரிந்து தாயக சுதந்திரப் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களின் செயற்பாடுகளுக்கும் எரிபொருள் சக்தியாய்
செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அழிவைச் சந்தித்த ஓர் இனம், இனி எழுந்திருக்க முடியாது என சிங்களம் கொக்கரிந்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயம் தான் நாங்கள் விழவிழ எழுவோமே தவிர வீழ்ந்துகிடக்க மாட்டோம் எனச்சொல்லும் பல மாற்றங்கள் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாங்கள் களத்தில் பலமாக இருந்தபோது அரசியல் ரீதியில் இலங்கையரசுக்கு கொடுக்கமுடியாத நெருக்கடிகளை, களத்தில் பலமிழந்து எமது ஆயுதங்கள் மெள்னிக்கப்பட்டிருக்கும் இவ்வேளை புலத்தில் செய்டுகொண்டிருக்கிறோம், இதற்கு சமீபத்திய உதாரணம், கொடுங்கோலோன் மகிந்த ராஜபக்க்ஷவின் படுதோல்வியில் முடிந்த இரு லண்டன் பயணங்கள். தனது சர்வாதிகார ஆட்சியில் தமிழர் நிலங்கலெல்லாம் சுதந்திரமாகச் செல்லமுடிந்த மகிந்த ராஜபக்க்ஷவால் முழுக்க முழுக்க ஜனனாயக நாடான பிரித்தானியாவில் ஒரு சாதாரணக்குடிமகனுக்கு இருந்த சுதந்திரம் கூட ஒரு நாட்டின் அரச தலைவருக்கு கிடைக்க விடாதது தமிழனின் அறவளிப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியல்லவா? தாய் நாட்டில் புலிக்கொடியை இறக்கிவிட்டோம் என்று கத்திய சிங்களம், போகும் தமிழர் தாயகமெல்லாம் சிங்கக்கொடியை ஏற்றியது, ஆனால் லண்டன் வந்தபோது ஆயிரம் புலிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்க பறக்க தனது நாட்டின் தேசியக்கொடியான ஒரு சிங்கக்கொடியைத் தானும் தனது அரச வாகனத்தில் காட்டமுடியாத அளவுக்குச் செய்ய எங்களால் எப்படி முடிந்தது. பிரித்தானியாவில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டு அமர்வுகளில் வந்திருந்த எல்லா நாட்டுத் தலைவர்களும் தங்கள் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளுடன் வாகனங்களில் வந்திறங்க, பயங்கரவாதத்தை முதன்முதலாக உலகிலே முறியடித்ததென தன் பெருமையை பீத்திக்கொள்ளும் ஓர் அரச தலைவர் திருடன் போல ஒளிந்த வண்ணம் இந்த மாநாட்டு அமர்வுகளில் கலந்துகொள்ள வந்தது எதைச்சொல்லி நின்றது. பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டிருந்த ஓர் குழுவினரை நீங்கள் கொன்றதாக உலகுக்குச் சொல்லி நின்றாலும் அது உண்மையல்ல் நீர் கொன்றது தமிழ் இனத்தை, இந்த இனத்தை அழித்தற்கு நீர் என்றைக்காவது பதில் சொல்லியே ஆகவேண்டும் அதுவரை, அந்த அழிக்கப்பட்ட இனத்துக்கு ஓர் நீதி கிடைக்கும் வரை அந்த இனம் போராடியே தீரும் என்ற கருத்தையல்லவா இந்தப் போராட்டம் சொல்லி நின்றது. இலங்கைத்தூதரகமென்று சொல்லி தனது நரி வேலைகளால் தமிழரை தரப்பைப் பிரித்தாழும் சூழ்ச்சியை செய்துகொண்டிருக்கும் அவர்களால் கூட தமிழர்தரப்பின் இந்த எழுச்சியை ஒன்றுமே செய்யமுடியவில்லலை.
எங்களுக்கு நீதி கிடைக்க பல சகாப்தங்கள் காத்துக் கிடக்கமுடியாது முள்ளிவாய்க்காலில் மாண்ட எம் உறவுகளுக்கும், உலக போர் விதிகளெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டு மிகவும் கோரமான முறையில் கொல்லப்பட்ட எம் மாவீரர்களுக்குமான நீதி விரைவில் கிடைக்கும் வண்ணம் எம் அறவளிப் போராட்டத்தினை உச்சப்படுத்த வேண்டும். முக்கியமாக தமிழ் ஊடங்கங்கள் எல்லாம் தங்களுக்குள் ஒன்றிணைந்து மாறிபட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி குழப்பம் விளைவிக்காமல் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை உறவுகளையும் மனதில் நிறுத்தி, பிரபாகரன் படை எப்பவுமே தோற்காது, சரித்திரத்திலும் சரி சமகாலத்திலும் சரி நாங்கள் என்றுமே தோற்கமாட்டோம், தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டு கிடக்கமாட்டோம் இறுதி வெற்றிவரை போராடி வெற்றிபெறுவோம் என சபதமெடுத்துக்கொள்வோம்.
நம் தானைத் தலைவன் சொன்ன பொன்மொழிகளைப் பின்பற்று எம் மானத் தமிழ்படை இவ் உலகை வெல்ல எனக்கூறி எனது இக் கட்டுரையை முடிக்கிறேன்.
மீட்போம் எமது தாயகம், காட்டுவோம் உலகுக்கு தமிழர் வீரம்.
நன்றி
அரிஞ்சயன்
Edited by இணையவன், 10 July 2012 - 09:36 AM.
எழுத்தின் அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது














