1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது.
ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில்கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தைஅமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்டஅந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது.
உலகில் பன்முக இனங்களையும் பலவித கலாச்சாரங்களையும் மிக அதிகளவில் கொண்ட தேசங்களில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).
ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.
Edited by akootha, 04 July 2012 - 01:24 AM.

















