மறுமணம் வெற்றி தருமா?
#1
Posted 03 July 2012 - 03:55 PM
ஏற்கனவே செய்த திருமணத்தில் ஏற்பட்ட கசப்புகள், "மறுமண வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. ஆனால் மறுமணத்தில் அதே கசப்புகள் இல்லை என்றாலும், வேறுவிதமாக கசப்புகள் ஏற்படும்போது அதை முழுமையாக மறுமணத் தம்பதிகள் சகித்துக் கொள்கின்றனர்.
ஏனென்றால், மீண்டும் மண முறிவுக்கு உள்ளானால், சமுதாயம் அவர்களை கேலி பேசும் என்ற பயம்தான் அதற்குக் காரணம். "இவனு(ளு)க்கு மறுமணம் செய்வது தொழிலாகிவிட்டது" என்று மற்றவர்கள் கேலி பேசுவார்கள் என்ற எண்ணத்தினால், மறுமணத்தை கடும்பாடுபட்டு கட்டிக் காத்துக் கொள்கிறார்கள்.
அதையும் தாண்டி பிரிகிறவர்களும் உண்டு. முதல் திருமண வாழ்க்கையிலேயே அதே சகிப்புத் தன்மையோடு இருந்திருந்தால், பிரிவினை ஏற்பட்டு இருக்காதே? எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும், கெட்ட குணமும் கலந்துதான் இருக்கும். பல கெட்ட குணங்கள், அந்தந்த வயதுக்கு ஏற்றாற்போல் மறைந்துவிடும்.
எனவே முதிர்ச்சி வரும்போது, அதற்கேற்றபடி மனிதன் தன்னை மாற்றிக்கொள்வான். அதுவரை தம்பதிகள் பொறுத்திருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையின் துரோகம் மற்றும் கடுமையான குற்ற செய்கையினால் சிலர் வாழ்க்கைத் துணையை பிரிகின்றனர். இப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் உயிர்போகும் அளவுக்கு பிரச்சினை எழும் என்று உணர்பவர்களிடம் சகிப்புத்தன்மை பற்றி பேச நான் விரும்பவில்லை.
அப்படி உணர்ந்தால் அவர்கள் பிரியட்டும். அதிலும் பிரியாமல் இருந்து குடும்பத்தை நடத்தி வரும் பெண்களும் உண்டு. உடல் கோளாறுகள், வியாதி போன்றவை கூட இன்று பிரச்சினைக்குரியவை அல்ல. இந்த உலகில் எதைத் தொலைத்தாலும் அதற்கு மாற்றானதை பெறமுடியும். மலட்டுத் தன்மையிருந்தால்கூட பல நவீன சிகிச்சை முறைகள் மூலம் குழந்தைகளை பெறலாம்.
எனவே முதல் துணையை பிரிவதற்கு எளிதான காரணங்கள் எதையும் முன்வைக்காமல், சகிப்புத் தன்மையை மட்டும் வளர்ப்பது அவசியம்.
குழந்தைகளை பெறுவதற்கு முன்பாகவே சிலர் பிரிந்துவிடுகின்றனர். இளமைக் காலம் வீணாக கடந்துபோவதை அவரும் அவரது குடும்பத்தினரும் பொதுவாக விரும்புவதில்லை. எனவே அவர்களுக்கு மறுமணம்தான் அதற்கு அருமருந்தாக அமைகிறது. வாழ்க்கைத் துணை இறந்துபோனாலும் அவர்கள் மறுமணம் செய்யட்டும். ஆனால் முதல் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பெற்றவர்கள், மறுமணம் செய்வதை தவிர்க்கலாம். ஏனென்றால், மறுமணத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான் அதிகம்.
http://www.paristami...jAxNzM3MDUy.htm

#2
Posted 03 July 2012 - 04:40 PM
அத்துடன் தேவையிலாத தலையீடும் இருக்க கூடாது. பலருக்கும் நான் 'ப்ரியசகி' சினிமாவை பாருங்கள் என கூறுவதுண்டு.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 03 July 2012 - 05:19 PM
மறுமணம் வெற்றி தருமா? - இதற்கு பதிலும் இந்த கட்டுரையிலேயே உள்ளது, அது "சகிப்புத்தன்மை'.
அத்துடன் தேவையிலாத தலையீடும் இருக்க கூடாது. பலருக்கும் நான் 'ப்ரியசகி' சினிமாவை பாருங்கள் என கூறுவதுண்டு.
ஆம். முதல் துணையுடன் சகிப்பு தன்மையை கொண்டிராதவர் கூட மறுமணத்தின் பின் விரும்பியோ விரும்பாமலோ சகிப்பு தன்மையை கொண்டிருந்தால் அது வெற்றியளிக்கும்.
"ப்ரியசகி" படத்தில் சதாவிற்கு தாயின் தலையீடு இருந்தது. இறுதியில் அதை மீறி மாதவன், சதா ஒன்று சேர்ந்து விடுவார்கள்.(விவாகரத்து தருமாறு கேட்டு ஒரு வருடத்தில்)
- தேவையற்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது -
Edited by துளசி, 05 July 2012 - 01:49 AM.
#4
Posted 12 July 2012 - 06:43 AM
.
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்,
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதியென்னும் காற்றில் பறிபோவதல்ல...
- புங்கையூரன் likes this
#5
Posted 12 July 2012 - 01:32 PM
இணைத்த பாடல் நன்றாக இருக்கிறது. எனது பாடல் திரியில் இணைக்கிறேன். நீங்கள் இணைத்த பாடல் என்று குறிப்பிட்டபடி....
- ஈசன் likes this
#6
Posted 12 July 2012 - 02:12 PM
- தப்பிலி likes this
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#7
Posted 12 July 2012 - 02:34 PM
அப்படி... மறுமணம் செய்தாலும், ஒன்றில் கணவனோ.. மனைவியோ மரணமைடைந்த நிலையில்... குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்காகவே இருக்கமுடியும். அதனையும் தவிர்க்கமுடியாத சூழ்நிலையிலேயே... செய்வர். ஆனால் குறட்டை விடுவதற்காக விவாகரத்து பெறுபவரும், எலிசபெத் டெய்லர் மாதிரி எட்டுமுறை திருமணம் செய்பவர்களுக்கும் திருமணம் என்பதே... தேவையில்லாதது. அவர்களுக்கு பிரச்சினை வேறு எங்கோ உள்ளது.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#8
Posted 12 July 2012 - 04:37 PM
தாயார் சுகவீனம் அடைய மீண்டும் நாடு திரும்பினார்.பெரியப்பா தனக்கு தெரிந்த விவாகரத்து செய்த ஒருவரை அப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இருவருக்கும் வயதாவதால் திருமணம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாலும் இருபக்க பெற்றோருக்கும் இருவரையும் இணைப்பதில் கஸ்டம் இருக்கவில்லை.இருவருக்கும் பணத்தையும் படிப்பையும் தவிர எந்த ஒற்றுமையும் இருக்கவில்லை.ஆனால் ஒரு பிள்ளைக்கு பெற்றோராகி வாழ்கிறார்கள்.
நிச்சயமாக இருவரும் பல விட்டுகொடுப்புக்களுடன் தான் வாழ்கிறார்கள்.
#9
Posted 12 July 2012 - 04:41 PM
தெரிந்த ஒரு நண்பி கல்லூரி நாட்களில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதென முடிவாகியது. பெண்ணின் தந்தை பையன் படித்து முடிக்கவில்லை,பணக்காரனும் இல்லை என தட்டிக்களித்து படிப்பு, பணம், என தனது அந்தஸ்த்துக்கு ஏற்றால் போல ஒருவரை பிடித்து திருமனம் செய்து வைத்தார்கள்.புது மாப்பிளையின் லீலைகள் காலப்போக்கில் நண்பியால் கண்டு பிடிக்கப்படவே விவாகரத்தில் முடிந்தது.ஏராளமான பணமும் மனகசப்பும் ஏற்பட்டது.பெண் தந்தையின் பணச்செருக்கு தான் தனது வாழ்க்கையின் சின்னாபின்னத்துக்கு காரணம் என கூறி லண்டனில் போய் பெரியப்பாவுடன் வாழ்ந்தார்.

அமைதியும்,இனிமையும் பெற்று ஆயிரம் காலம் வாழ் வாழ்த்துகிறேன்....
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#10
Posted 12 July 2012 - 05:02 PM
ஆம்.மறுமணத்தின் வெற்றியை நிர்ணயிப்பது ,குறிப்பிட்ட நபரின் மறுமணத்திற்குரிய காரணியே [காரணம்]
![]()
அதே நேரம் சிலர் சிறு காரணத்தை வைத்தும் பிரிய முடிவெடுப்பார்கள். அப்படியானவர்கள் மறுமணத்தின் பின் சகிப்புத்தன்மையுடன் வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
குழந்தை பெற முன்னரே விவாகரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்ய முயற்சிப்பார்கள். அல்லது குழந்தை பெற்ற பின் விவாகரத்து பெற்ற ஆண்கள் பொதுவில் குழந்தைகளை வளர்க்க ஒரு பெண் தேவை என்று நினைத்து மறுமணம் செய்யும் சந்தர்ப்பம் உள்ளது.சாதாரண மக்களில் மறுமணம் மிகவும் அரிதாகவே... காணப்படும்.
அப்படி... மறுமணம் செய்தாலும், ஒன்றில் கணவனோ.. மனைவியோ மரணமைடைந்த நிலையில்... குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்காகவே இருக்கமுடியும். அதனையும் தவிர்க்கமுடியாத சூழ்நிலையிலேயே... செய்வர். ஆனால் குறட்டை விடுவதற்காக விவாகரத்து பெறுபவரும், எலிசபெத் டெய்லர் மாதிரி எட்டுமுறை திருமணம் செய்பவர்களுக்கும் திருமணம் என்பதே... தேவையில்லாதது. அவர்களுக்கு பிரச்சினை வேறு எங்கோ உள்ளது.
தமது துணையின் குறட்டை சத்தம் கேட்கமுடியாமல் விவாகரத்து வாங்குவோர் வெளிநாட்டில் தான் உள்ளனர்.
எட்டு முறை திருமணம் செய்பவர்கள் திருமணம் செய்யாமல் girlfriend வைத்துக்கொண்டு திரியலாம்.
தெரிந்த ஒரு நண்பி கல்லூரி நாட்களில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதென முடிவாகியது. பெண்ணின் தந்தை பையன் படித்து முடிக்கவில்லை,பணக்காரனும் இல்லை என தட்டிக்களித்து படிப்பு, பணம், என தனது அந்தஸ்த்துக்கு ஏற்றால் போல ஒருவரை பிடித்து திருமனம் செய்து வைத்தார்கள்.புது மாப்பிளையின் லீலைகள் காலப்போக்கில் நண்பியால் கண்டு பிடிக்கப்படவே விவாகரத்தில் முடிந்தது.ஏராளமான பணமும் மனகசப்பும் ஏற்பட்டது.பெண் தந்தையின் பணச்செருக்கு தான் தனது வாழ்க்கையின் சின்னாபின்னத்துக்கு காரணம் என கூறி லண்டனில் போய் பெரியப்பாவுடன் வாழ்ந்தார்.
தாயார் சுகவீனம் அடைய மீண்டும் நாடு திரும்பினார்.பெரியப்பா தனக்கு தெரிந்த விவாகரத்து செய்த ஒருவரை அப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இருவருக்கும் வயதாவதால் திருமணம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாலும் இருபக்க பெற்றோருக்கும் இருவரையும் இணைப்பதில் கஸ்டம் இருக்கவில்லை.இருவருக்கும் பணத்தையும் படிப்பையும் தவிர எந்த ஒற்றுமையும் இருக்கவில்லை.ஆனால் ஒரு பிள்ளைக்கு பெற்றோராகி வாழ்கிறார்கள்.
நிச்சயமாக இருவரும் பல விட்டுகொடுப்புக்களுடன் தான் வாழ்கிறார்கள்.
நன்றி நுணா அண்ணா. அவர்கள் நல்லபடி வாழ நானும் வாழ்த்துகிறேன்.
Edited by துளசி, 12 July 2012 - 05:03 PM.
#11
Posted 13 July 2012 - 08:55 AM
Edited by SUNDHAL, 13 July 2012 - 08:56 AM.
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....