பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி
ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம் என்று மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதனால் எங்கள் ஆதரவு யாருக்கு அளிப்பது என்று இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதிமுக செயல்படாது.
இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியடும் பிரணாப் முகர்ஜியை மதிமுக ஆதரிக்காது.
பாஜக கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர் பி.ஏ.சங்மா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர். எனவே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கலந்து ஆலோசித்த பின்பு எங்களது நிலையை அறிவிப்போம் என்றார் அவர்.
http://tamil.oneindia.in/news/2012/07/01/tamilnadu-mdmk-will-vote-against-pranab-mdmk-156794.html
பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி
Started by
புரட்சிகர தமிழ்தேசியன்
, Jul 01 2012 07:24 PM
2 replies to this topic
#1
Posted 01 July 2012 - 07:24 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

#2
Posted 01 July 2012 - 07:42 PM
காங்கிரசை எந்த தமிழனும் தமிழர் கட்சிகளும் ஆதரிக்ககூடாது.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 01 July 2012 - 07:50 PM
காங்கிரசை எந்த தமிழனும் தமிழர் கட்சிகளும் ஆதரிக்ககூடாது.
சென்னையில் பிரணாப் முகர்ஜி- கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னைக்கு இன்று மாலை 4.15 மணியளவில் வந்தடைந்த பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்ம் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் பிரணாப் முகர்ஜியை வரவேற்றனர்.
பின்னர் நேராக திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு பிரணாப் முகஜ்ரிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க வரவேற்கப்பட்ட பிரணாப் முகர்ஜி கருணாநிதியிடம் திமுகவின் ஆதரவை கோரினார்.
பிரணாப் முகர்ஜியை வரவேற்று சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கருணாநிதியின் வீடு, சத்தியமூர்த்தி பவன் ஆகியவற்றில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 35,536 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://tamil.oneindia.in/news/2012/06/30/tamilnadu-pranab-mukherjee-chennai-presidential-poll-campaign-156785.html
டிஸ்கி:
தோழர் மண்டைமார் எம்பி எம்.எல்.ஏக்கள் எல்லாம் அவாவுக்குத்தான் ஒட்டு போடுவார்கள். இது மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அல்ல...
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














