Jump to content


Tamil Star News
Photo

கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை!


  • Please log in to reply
8 replies to this topic

#1 தயா

தயா

    Thala (தல)

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,167 posts
  • Gender:Not Telling

Posted 01 July 2012 - 07:19 AM

கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை!
ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST )

சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:

சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்கவேண்டும் ஆனால் எரிப்பதற்கான மரங்களை வெட்டி எடுத்து வருவது யார்?

கிராமத்தில் மக்கள் அமைதியாக ஒரு இடத்தில் கூடியிருந்தபோது பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக சுட்டித் தள்ளியுள்ளனர். இதில் 20 பேற் பலி. அதுவும் முதல் 5 வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் 5 பேர் இதில் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் பதின்ம வயது சிறுமிகளை கற்பழிக்க முயன்றதாகவும் கிராம்த்தினர் குற்றம்சாட்டினர்.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் அன்று அந்த கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் ஒருவரும் இல்லை என்றார். விதைவிதைப்பதற்கு முன்னர் விதை திருவிழா பற்றி பேச நாங்கள் ஒன்று கூடினோம். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதே என்றார் அந்த கிராமத்து மனிதர்.

கூட்டம் பல மணிநேரங்கள் நீடித்தபோது திடீரென தங்களை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்தததாக அவர் தெரிவித்துள்ளார்.

"எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் ஓட முயன்றோம் அப்போது பலரது கால்களில்ல் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. பலரது முதுகு மற்றும் மார்புகளிலும் குண்டுகள் பாய்ந்தது. இட்யில் காகா சரஸ்வதி என்ற 12 வயது சிறுமி கொல்லப்பட்டதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

பல சடலங்களில் தலை மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்த அடையாளங்கள் தெரிந்ததாக அங்கு சென்று விசாரித்த நிருபர் தெரிவித்துள்ளார்.

17 வயது சப்கா மிது என்பவரின் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் பல உடல்கள் கிழித்து, கீறி காயப்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கௌள்டன் இருந்தது தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்ட்கள் யாரும் இல்லாதபோது போலீஸ் காரர்கள் 6 பேர் காயமடைந்தது எப்படி என்று அந்தப் பழங்குடி மக்கள் அதிசயித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே சுட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

கொலைவெறித் தாக்குதலை முடித்து விட்டு ட்ராக்டரை வரவழைத்து சில உடல்களை எடுத்துச் சென்றனர். அப்போது ஒரு சிறுமியை தரதரவென்று இழுத்துச் சென்று அடித்து உதைத்து உடைகளைக் கிழித்து கற்பழித்து விடுவதாக மிரட்டப்பட்டுள்ளார். இதே போல் வேறு 3 சிறுமிகளுக்கும் நிக்ழ்ந்தது என்று அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

படைகள் மறுநாள் காலை வரை அந்தக் கிராமத்தில் இருந்தனர். அப்போது ரமேஷ் என்ற ஒரு நபர் வீட்டிலிருந்து வெளியே கழிப்பிடம் செல்ல வந்தபோது போலீசார் சுடப்பட்டார். அவர் அம்மாஅ என்று அலறியபடியே வீட்டை நோக்கி வந்தபோது அவரைத் துரத்தி வந்த பாதுகாப்புப் படையினர் தாயின் முன்னாலேயே மகனை சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை தாயார் இர்பா ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீட்டிற்குள் புகுந்து ரூ.5,000 திருடியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. கிராமத்தினர் விழாக்கள் குறித்து விவாதிக்க கூட்டம் கூட்ட்ம்போது சில வேளைகளில் மாவோயிஸ்ட்களும் அழைக்கப்படுவதுண்டு.

மாவோயிஸ்ட்கள் இந்தப் படுகொலை போலி என்கவுண்டர் என்றும் கொல்லப்பட்டது அப்பாவி பழங்குடியினர் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள பாதுகாப்புப் படையோ நாங்கள் தற்காப்புக்காகவே சுட்டோம் என்றும், நாங்கள் நினைத்திருந்தால் இந்த கிராமம் முழுதையுமே காலி செய்திருக்க முடியுமே என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினரைக் கொன்ற பாதுகாப்புப் படையினர், போலீஸ் இவர்கள் மீது நடுநிலையான விசாரணை நடத்தி உச்சபட்ச தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

http://tamil.webduni...120701001_1.htm
என்னையும் என் குடும்பத்தையும் போராட அழைக்க கூடாது... நெருக்கடியான காலங்களில் நிதி எல்லாம் கேட்க்க கூடாது...
மற்றும்படி எனக்கு தனி நாடு தமிழீழம் எல்லாம் வேண்டும்...

Advert

#2 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,183 posts

Posted 01 July 2012 - 08:41 AM

இந்திய பாதுகாப்புப்படையினர் பெரும்பாலும் அப்பாவிகளைத்தான் கொன்றுவிட்டு வீரம் கதைப்பார்கள். ஈழத்தில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம்.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,877 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 01 July 2012 - 12:22 PM

இந்து நாளிதழ் சொல்லிவிட்டால் போதுமா?? :unsure: இவர்கள் மாவோயிஸ்டுகளே.. ஏனென்றால் இந்திய அரசாங்கமே சொல்லிவிட்டது.. :icon_idea:

இறந்தவர்கள் மாவோயிஸ்டுகள் இல்லை என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்..! :rolleyes:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,410 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 01 July 2012 - 12:24 PM

இந்து நாளிதழ் சொல்லிவிட்டால் போதுமா?? :unsure: இவர்கள் மாவோயிஸ்டுகளே.. ஏனென்றால் இந்திய அரசாங்கமே சொல்லிவிட்டது.. :icon_idea:

இறந்தவர்கள் மாவோயிஸ்டுகள் இல்லை என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்..! :rolleyes:

:rolleyes: :rolleyes: :icon_idea:
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#5 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,581 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 July 2012 - 03:55 PM

வழமையான இந்திய படையின் பொய், புரட்டுக்கள் யாவரும் அறிந்ததே.அதென்ன ஐ.நா ,கனடிய அரசு,அம்னெஸ்ரி எல்லாம் புலிகள் செய்த பிழைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.சொந்த அப்பாவி மக்களை கொல்லும் இந்திய படை பற்றி இவர்கள் அறிக்கை விடமாட்டார்களா?. அர்ஜுனின் பாசையில் சொன்னால் புலிகள் மூ**** பெய்ததை கூட உலகம் நன்கே அறிந்து வைத்ததாம் அப்போ இந்திய ராணுவம் மூ***** பெய்வதில்லையா?? :D :D

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#6 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,158 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 01 July 2012 - 04:08 PM

வழமையான இந்திய படையின் பொய், புரட்டுக்கள் யாவரும் அறிந்ததே.அதென்ன ஐ.நா ,கனடிய அரசு,அம்னெஸ்ரி எல்லாம் புலிகள் செய்த பிழைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.சொந்த அப்பாவி மக்களை கொல்லும் இந்திய படை பற்றி இவர்கள் அறிக்கை விடமாட்டார்களா?. அர்ஜுனின் பாசையில் சொன்னால் புலிகள் மூ**** பெய்ததை கூட உலகம் நன்கே அறிந்து வைத்ததாம் அப்போ இந்திய ராணுவம் மூ***** பெய்வதில்லையா?? :D :D



புலிகளுக்கு நீளளளளளளளளளளளளமான (வால்?) இருந்ததால் கண்டு பிடித்திருக்கலாம்.
அர்யூனின் குறி தப்பியதில்லை.
அவர் சர்வதேச அளலில் மேல் மட்டங்களுடன் மட்டுமே தொடர்புபு வைத்திருப்பவர்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#7 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 06 July 2012 - 01:25 AM

இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைகூலிகளை இங்கு இன்னமும் காணவில்லை!

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 


#8 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 17,003 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 11 July 2012 - 12:50 PM

India police 'killed tribals, not Maoists' in Chhattisgarh

Posted Image

A villager shows his injuries to rights activists in Kottaguda village

Rights activists in India say 17 people killed by paramilitary police in Chhattisgarh state in June were local tribespeople and not Maoist rebels.

In a new report, the activists said tribals who had gathered for a meeting unarmed had been "slaughtered".

Among those killed were a 12-year-old girl, a 15-year-old boy and two 16-year-old school students.

Police now admit civilians were killed - but say they died in crossfire and were used by rebels as human shields.

To begin with, police had said all 17 people killed in an overnight clash on 29 June in rebel-dominated Bijapur district had been rebels.

Six personnel of the paramilitary Central Reserve Police Force (CRPF) were also wounded, they said.

But within hours, BBC correspondent Salman Ravi in Raipur, Chhattisgarh's capital, reported that locals had held a protest contesting the police claim. They alleged that most of those killed were villagers, not insurgents.

'Without warning'

Posted Image

Ramaiah's daughter Saraswati, 12 , was among those killed

The report, compiled by the Coordination of Democratic Rights Organisations, was released on Wednesday in the Indian capital, Delhi.

The activists visited the three villages of Sarkeguda, Kottaguda and Rajpenta last week and spoke to the villagers extensively about the incident.

"All those in the gathering were adivasi [tribal] residents of the three villages and [they were] unarmed," the report said.

The villagers told the activists that they were fired upon "without any warning". "And those who did not die from bullet wounds were killed by the police with axes," they said.

Initially the CRPF said all 17 people killed were Maoist rebels.

But, correspondents say, questions have been raised in the past few days after local media reports accused the security forces of extra-judicial killings.
Subsequently, officials said only seven of the dead were Maoists.

Last week, the Chhattisgarh government announced a judicial inquiry into the incident.

In a statement, Chief Minister Raman Singh said the aim was "to ascertain the chronology of the events, the reasons behind the firing and the identities of those killed".

The Maoists are active in more than a third of India's 600-odd districts. They say they are fighting for the rights of poor peasants and labourers.

Prime Minister Manmohan Singh has described the rebels as the biggest internal security challenge facing India.

http://www.bbc.co.uk...-india-18792575

Edited by nedukkalapoovan, 11 July 2012 - 12:52 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#9 ukkarikalan

ukkarikalan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 216 posts
  • Gender:Male

Posted 13 July 2012 - 09:23 PM

இதுபற்றி நடை பெற்ற விவாதம்







Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]