Jump to content


Tamil Star News
Photo

சுவையான மைதா அல்வா


  • Please log in to reply
4 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 28 June 2012 - 09:31 AM

சுவையான மைதா அல்வா

Posted Image

வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேச‌ரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
உருக்கிய நெய் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8

செய்முறை:
முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த மாவை கரைத்துக் கொண்டு, மேலே இருக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
மறுபடியும் அந்த மாவில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
மீண்டும் அந்த மாவில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் மறுபடியும் ஊற்றிக் கொள்ளவும். இப்போது 1 1/2 லிட்டர் மைதாப் பால் கிடைத்திருக்கும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது கொதித்து நுரைநுரையாக வரும் போது, தீயைக் குறைத்து அதில் மைதாப் பாலை ஊற்றி நன்கு கிளர வேண்டும்.
இவ்வாறு ஒரு 5 நிமிடம் கிளரியதும், பின் அதில் கேசரி பவுடர், நெய் சேர்த்து கெட்டியாக கிளரவும். அல்வா பதம் வந்ததும், அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளரி இறக்கவும்.
இப்போது சுவையான மைதா அல்வா ரெடி!!!
http://tamil.boldsky...lwa-001456.html
  • அலைஅரசி likes this
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 அலைஅரசி

அலைஅரசி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 830 posts
  • Gender:Female
  • Location:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.
  • Interests:எதிலும் தமிழனாக இருப்பது

Posted 29 June 2012 - 11:14 AM

இதென்ன கிட்டதட்ட மஸ்கட் செய்கிரமாதிரிஎல்லோ இருக்கு :D

இணைப்புக்கு நன்றி தமிழரசு அண்ணா .
உங்களில் ஒருத்தி அலைஅரசி.

#3 sudalai maadan

sudalai maadan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 261 posts
  • Gender:Male

Posted 29 June 2012 - 04:44 PM

மைதா அல்வா இந்த பெயரை சொல்லக்குள்ள அதை சாபிடோனும் போல இருக்கு .
எங்கட இடத்திலை இது ஒன்றும் செய்ய மாட்டாங்க . வெறும் அல்வா மட்டுதான் . ஒரு முறை எங்கட அக்கா அல்வா செய்து அல்வாவில இருந்த ஆசையும் போய்ட்டுது . கடிச்சால் கடிச்சதுதான் பிறகு இரண்டு பல்லும் அல்வாவில இருந்து களராது. அந்த விரக்தியிலே நான் இருபது வருசமா அல்வா சாப்பிட இல்லை .
ஆனால் நீங்கள் குறிப்பிட்டதும் , நான் சொன்னதும் வேற ,வேற அல்வா என்று நினைக்கிறேன் .
யாராவது கேரளா பெண்ணை திருமணம் செய்தால் இதெல்லாம் சாத்தியம் .
நன்றி உங்கள் பகிர்வுக்கு தமிழரசு அண்ணா .

#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 29 June 2012 - 06:13 PM

மைதா அல்வா இந்த பெயரை சொல்லக்குள்ள அதை சாபிடோனும் போல இருக்கு .
எங்கட இடத்திலை இது ஒன்றும் செய்ய மாட்டாங்க . வெறும் அல்வா மட்டுதான் . ஒரு முறை எங்கட அக்கா அல்வா செய்து அல்வாவில இருந்த ஆசையும் போய்ட்டுது . கடிச்சால் கடிச்சதுதான் பிறகு இரண்டு பல்லும் அல்வாவில இருந்து களராது. அந்த விரக்தியிலே நான் இருபது வருசமா அல்வா சாப்பிட இல்லை .
ஆனால் நீங்கள் குறிப்பிட்டதும் , நான் சொன்னதும் வேற ,வேற அல்வா என்று நினைக்கிறேன் .
யாராவது கேரளா பெண்ணை திருமணம் செய்தால் இதெல்லாம் சாத்தியம் .
நன்றி உங்கள் பகிர்வுக்கு தமிழரசு அண்ணா .

:lol: :lol: :lol: :lol:
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#5 ராஜவன்னியன்

ராஜவன்னியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,563 posts
  • Gender:Male
  • Location:மதுரை, தமிழர்நாடு
  • Interests:தமிழ், கணணி, பழைய பாடல்கள், புன்னகை.

Posted 29 June 2012 - 06:35 PM

நன்றி பகிர்வுக்கு...

"அல்வா" என்றால் தமிழகத்தில் ஞாபகத்திற்கு வருவது "நெல்லை"


Posted Image


இது திருநெல்வேலியின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் உள்ள இருட்டுகடை அல்வா என்ற பலகாரக் கடை.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர்.மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். கடைக்குள் ஒளி தர சாதரண எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான்.

கடை இருட்டாக இருக்கலாம், ஆனால், அல்வாவின் ருசியும் மணத்தால் கவரப்பட்டு எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது.

Posted Image


"இருட்டுகடை அல்வா" வாங்க மக்கள் வரிசை!




Posted Image


"இருட்டுகடை அல்வா"


  • ஈசன் likes this




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]