இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப் பரப்புக்கள் சிறிலங்காஅரசினால் அதி வேகமாக அபகரிக்கப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் 18880 சதுர கிலோ மீற்றர் தாயக நிலத்தில் இதுவரையில் 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு இராணுவம் அபகரித்துக் கொண்டது. நில அபகரிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
எதிர்வரும் 26ம் திகதி திரு முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி வேறுபாடுகளை மத வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களும் அரசியற் கட்சிகளும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து குரல் எழுப்பியுள்ள நிலையில், கனடாவில் எதிர்வரும் 26ம் திகதி இலங்கை தூதுவராலயத்தின் முன்பாக ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒத்துழைப்பும் ஆதரவும் தரும்படி சகல தமிழ் பேசும் உறவுகளையும் அமைப்புக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
புலத்திலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அமைப்பு வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, எமது மண்ணுக்காக குரல் கொடுக்க வாரீர்.
சர்வதேசரீதியில் ஏற்படுத்தப் படவுள்ள இந்தமாபெரும் கவன ஈர்ப்பில் கனடியத்தமிழர்களின் குரலும் இணையவேண்டும்.
அங்குதமிழீழத்தில் 26ம் திகதி ஒங்கி ஒலிக்கும் நீதிக்கான குரல் 36 Eglinton Avenue WestToronto, ON M4R 1A1 வில் எதிரொலிக்கவேண்டும்.
26ம் திகதி பி. ப 2:30 மணியில் இருந்து பி.ப 6:00 வரை
36 Eglinton Avenue WestToronto, ON M4R 1A1 ( Yonge & Eglinton Sub way )
தொடர்புகட்கு: 647-209-4100, 416-888-1128, 647-822-8062
முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான கனடியத்தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
Started by
குண்டன்
, Jun 26 2012 02:44 PM
No replies to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















