Jump to content


Tamil Star News
Photo

மைக்ரோசொப்டின் புதிய டாப்லெட்


  • Please log in to reply
5 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 19 June 2012 - 10:55 AM

சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,317 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 19 June 2012 - 11:01 AM

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 19 June 2012 - 12:55 PM

எப்போது வரும் : விண்டோஸ் 8 வந்ததன் பின்னரே வரும்.
விலை : இன்னும் கூறப்படவில்லை
கண்ணாடியின் அளவு : 10.6 "

இது தொழில் அதிபர்கள், வர்த்தகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுகின்றது. கைத்தொலைபேசியில் வர்த்தகர்களை கவர்ந்த பிளாக்பெரியின் டாப்லெட்டான ப்லேபுக் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மைக்ரோசொப்ட் அந்த இடைவெளியில் புக எண்ணியுள்ளது.

Edited by akootha, 19 June 2012 - 10:36 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 19 June 2012 - 10:38 PM

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D


முதலில் டப்லேட்டுக்கள் பெரிதாக மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது என்ற மைக்ரோசொப்ட் இப்பொழுது தானும் இறங்கியுள்ளது.
தொழில்நுட்பம் இது போன்றது. இந்தப்பழம் புளிக்கும் என ஒதுக்கினால் அது நம்மை ஒதுக்கிவிடும் :D

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 June 2012 - 12:59 AM

Posted Image


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 June 2012 - 11:32 AM

டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐ பேட்டாகும்.

கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.

பிளக்பெரி வெளியிட்ட 'பிளே புக்' டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.

இவ்வாறு டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு 'சேர்பேஸ்' எனவும் பெயரிட்டுள்ளது.


மைக்ரோசொப்ட் பொதுவாக மென்பொருள் தயாரிப்புத்துறையிலேயே ஜாம்பவானாகத் திகழ்கின்றது.

எனினும் நீண்டநாட்களாக டெப்லட் சந்தையில் நுழைய மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது டெப்லட்டினை மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ளது.


மைக்ரோசொப்டின் மேற்படி டெப்லட்டானது 2 மாதிரிகளாக வெளியாகவுள்ளன.

விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows RT) , விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் தனித்தனியான தொழில்நுட்ப அம்சங்கள் இதோ

Surface for Windows RT

Processor: NVIDIA-made ARM chip
Weight: 676 grams
Thickness: 9.3 millimeters
Display: 10.6-inch ClearType HD capactive touchpanel
Battery: 31.5Wh
I/O: microSD, USB 2.0, Micro HD Video, 2×2 MIMO antennae
Software: Windows RT + Office Home & Student 2013 RT
Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand
Capacity: 32GB / 64GB
Availability: “Around” the Windows 8 launch (fall 2012)

Surface for Windows 8 Pro

Processor: Intel Core i5 (Ivy Bridge)
Weight: 903 grams
Thickness: 13.5 millimeters
Display: 10.6-inch ClearType Full HD (1080p) capacitive touchpanel
Battery: 42Wh
I/O: microSDXC, USB 3.0, Mini DisplayPort, 2×2 MIMO antennae
Software: Windows 8 Pro
Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand, Pen with Palm Block
Capacity: 64GB / 128GB
Availability: “Three months after” the Windows 8 launch this fall

குறித்த டெப்லட்களானவை கீபோர்ட் மற்றும் நிறுத்திவைக்கக் கூடியவகையில் ஸ்டேன்ட் ஒன்றையும் கொண்டுள்ளமையானது சிறப்பம்சமாகும்..

இவற்றின் ஆரம்ப விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் மற்றைய டெப்லட்களுக்கு சமமாக போட்டித்தன்மையான விலையைக் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.



அடுத்த சில வருடங்களில் டெப்லட்களின் விற்பனை பல மடங்காக அதிகரிக்குமென சந்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே மைக்ரோசொப்டும் டெப்லட் சந்தையில் களம் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

ஐபேட்டினை விட சிறப்பான வசதிகள் சிலவற்றை சேர்பேஸ் கொண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியாது. எனினும் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும் ஐபேட்டின் சாதனையை சேர்பேஸ் முந்துகின்றதா அப்பிளை விடத் தானே சிறந்தவன் என மைக்ரோசொப்ட் நிரூபிக்கின்றதா என!


http://www.virakesar...asp?key_c=38849

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]