தமிழீழ தோழர்களுக்கும், நண்பர்களுக்கும்,
உடமைகளையும், உறவுகளையும், உரிமைகளையும் இழந்து, உயிரும் வெற்று உடலுமாக மட்டும் வாழ்க்கை நடத்திக்கொண்டு, வானம் வெளுக்காதா, கிழக்கு விடியாதா, வயிற்றுக்கு ஒரு பிடி அவல் கிடையாதா என்று நாளும் பொழுதும் ஏங்கியவண்ணம், வாழ்கை என்ற சிறைக்குள் அடைபட்டு வாடியிருக்கும் எம் பாசங்களுக்கு உதவ என்று ஆரம்பிக்கபட்டிருக்கும் “ போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவையானவர்களுக்கும், அனாதைகளுக்குமான புதிய சந்தர்ப்பங்கள்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) ஆன நமது புதிய அறக்கடளையிருந்து நான் சுபா சுந்தலிங்கம் மீண்டும் உங்களை வந்து சந்திப்பதில் மகிழச்சி அடைகிறேன். நான் உங்களுடன் இணந்து ஆரம்பித்திருந்த தன்னார்வ தொண்டு முன்னெடுப்பான “மிதி வண்டி வழங்கல்” நமது எதிர் பார்ப்புக்களுக்கு மேலே வெற்றியாக நிறைவேறியிருந்ததை நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். (அந்த செய்தியை காணக்கிடைக்கவில்லையாயின் அதன் இணைப்பு- http://tamilwin.com/...yGTZOWis3.html. உங்களின் பெரிய கனிவான உள்ளங்களால் இந்த சிறியசேவை நமக்கு சாத்திமானதை இட்டு உங்களுக்கு என் உணர்வு பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
செய்த செயலின் பயனை காணக்கிடைக்கும் இந்த படங்கள் வாழ்வின் பயனை அடைந்தது போன்று எனது மனதிற்கு ஒரு திருப்தியை கொடுக்கிறது. நீங்களும் நிச்சயம் அப்படி ஒன்றை உணர்வீர்கள் என்பது எனது நம்பிக்கை. அதைவிட பெருமையாக இருப்பது, பலதடவைகளில் பெற்றோர், தமது பிள்ளைகள், இதற்கு பணம் கொடுப்பதற்கு தாமே விரும்பி பகுதிநேர சிறுதொழில் வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்திருப்பதாகும். இதில் புலம்பெயர்ந்த நம்மவர்களின் பிள்ளைகள் பலவற்றை தெரிந்து கொள்ள அரிய சந்தர்ப்பமும் கிடைத்திருந்தது. நாமும் நிறைய கற்றிருந்தோம். நமது அன்பளிப்புக்கள் உரியவரை சேர்ந்தடைய, நமது உண்மைத்தோழனும், கிளிநொச்சியின் பா.உ மான, திரு சிவஞானம் சிறீதரன், ஆற்றிய சேவை மெச்சப்பட வேண்டியது. அவருக்கும் எனது நன்றியை மறக்காமல் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நம்மை நாம் ஊக்கப்படுத்த சில மகிழ்வான சொற்கள் பரிமாறுவது தேவையாக இருந்தாலும், அடுத்து நாம் மேற்கொள்ளவிருக்கும் உதவியின் பரிமாணம், பணத்தாலும், பரிமாறத்தேவையான மூலதனத்தாலும், நாம் போகவேண்டிய பாதையின் நெடும் தூரத்தை நினைவுபடுத்தும் அதன் அச்சுறுத்தல்தான் என் நினைவில் வந்து தங்குகிறது. போனதடவையே, நாம் எமது அடுத்த நடவடிக்கை, வசதி இல்லாத மட்டக்களப்பு மாணவர்களுக்கு என்று அறிவித்திருந்து உண்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு 4000 பட்டதாரிகள் தொழில் அற்று இருக்கிறார்கள். எந்தக்குழந்தைக்கும் அதற்கு தேவையான அடிப்படை பாட உபகரணங்கள் வரவேண்டிய இடங்களில் இருந்து வருவதாக இல்லை. அதனால்த்தான் 3300 மணவர்களுக்கு அடிப்படை தேவைகளான பேனை, பென்சில், கொப்பிகள் போன்ற உபகரணங்களை வினியோகிப்பதற்கு இந்து இளைஞர் சங்கத்துடன்(YMHA) கூட்டு சேர்ந்திருக்கிறோம். ஒரு மாணவருக்கு 3 அமெரிக்க டொலர் வரையில் தான் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் இந்த வருட பள்ளி படிப்பில் நிறைய மாற்றங்களை செயத்தக்கது. மேலும் யோகேஸ்வரன் சீனித்தம்பி, மட்டக்களப்பு பா.உ எமக்காக இந்த வினியோகத்தை மேற்பார்வை செய்ய முன் வந்திருக்கிறார். முன்னயது மாதிரி இதையும் வெற்றிகரமாக்குவது உங்கள் கைகளில் உள்ள மந்திரகோல்.
நான் முன்னர் சொன்னது மாதிரி NOWWOW ஒரு அறக்கட்டளை நிறுவனம். நாம் எடுக்கும் ஒரு முயற்சி வெற்றியோ தோல்வி என்பதை கணக்கு பார்க்காமல் எமது அடுத்த நடவடிக்கைக்கான பூர்வாங்க நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எமது அடுத்த நடவடிக்கை சம்பந்தமான சில அறிவிப்புக்களை நான் உங்களுக்கு தர முடியும். அடுத்த முயற்சி, அங்கு வேலைவாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை தனிபட்ட போதகர்களாகப் பயன்படுத்தி மேல்மட்ட நிலைகளில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பள்ளிப்பாடங்கள் போதிக்க வசதிகள் செய்யவிருக்குறோம்.
நமது இப்போதைய ஆர்வம் பள்ளிப்பாட உபகரணங்களே. தயவுசெய்து தயங்காது முன் வந்து இந்த சவாலை ஏற்று, தாளாரமாக உதவுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமது கோரிக்கைக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு என் முன்கூட்டிய நன்றி.
சுபா சுந்தரலிங்கம்
பாடசாலை உபகரணங்களுக்கான உதவி
Started by
suba.suntharalingam
, Jun 16 2012 11:52 PM
5 replies to this topic
#1
Posted 16 June 2012 - 11:52 PM
- eelapirean and akootha like this

#2
Posted 13 July 2012 - 05:33 PM
அன்பான உறவுகளே,
கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆவணி மாதத்தில் நிறைவு செய்யத் தீர்மானித்திருப்பதால், உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறேன். உங்களால் இயலுமான உதவித்தொகையை பின்வரும் முறையில் வழங்கலாம்.
1. Paypal மூலமாகவோ (Please visit nowwow-us.org)
2. காசோலை மூலமாகவோ
3. அல்லது direct deposit மூலமாகவோ
உதவமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
சுபா சுந்தரலிங்கம்
நன்றி
s.suba@tgte.org
கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆவணி மாதத்தில் நிறைவு செய்யத் தீர்மானித்திருப்பதால், உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறேன். உங்களால் இயலுமான உதவித்தொகையை பின்வரும் முறையில் வழங்கலாம்.
1. Paypal மூலமாகவோ (Please visit nowwow-us.org)
2. காசோலை மூலமாகவோ
3. அல்லது direct deposit மூலமாகவோ
உதவமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
சுபா சுந்தரலிங்கம்
நன்றி
s.suba@tgte.org
#3
Posted 14 July 2012 - 05:45 PM
அக்கா, உங்கள் முயற்சி முழுவெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.
அத்துடன் எனது சிறு தொகை பங்களிப்பை சற்று முன்னர் PayPal ஊடாக செலுத்தி உள்ளேன்.
நன்றி.
அத்துடன் எனது சிறு தொகை பங்களிப்பை சற்று முன்னர் PayPal ஊடாக செலுத்தி உள்ளேன்.
நன்றி.
'There are three sides to every story; your side, my side and the truth'
'Either write something worth reading or do something worth writing'
'Either write something worth reading or do something worth writing'
#4
Posted 15 July 2012 - 02:27 AM
வணக்கம் கஜேன், உங்களது உதவித்தொகை கிடைத்தது. உங்களது வாழ்த்துக்கும், பண உதவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நன்றி
சுபா
நன்றி
சுபா
#5
Posted 14 August 2012 - 09:10 AM
வணக்கம்,
பாடசாலை எதிர்வரும் புரட்டாதி மாதம் விடுமுறைக்குப் பின் தொடங்க இருப்பதால், 3300 மாணவர்களுக்கான உதவியை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதனைப் பூர்த்தி செய்ய இன்னும் 3000.00 USD தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்புவோர் விபரங்களுக்கு nowwow-us.org என்ற இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
சுபா
பாடசாலை எதிர்வரும் புரட்டாதி மாதம் விடுமுறைக்குப் பின் தொடங்க இருப்பதால், 3300 மாணவர்களுக்கான உதவியை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதனைப் பூர்த்தி செய்ய இன்னும் 3000.00 USD தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்புவோர் விபரங்களுக்கு nowwow-us.org என்ற இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
சுபா
#6
Posted 06 October 2012 - 02:05 PM
யாழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். விதவையானவர்களுக்கும், அனாதைகளுக்குமான புதிய சந்தர்ப்பங்கள்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War, எமது முதலாவது காலாண்டு செய்தி இதழினை வெளியிட்டுள்ளோம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
http://www.nowwow-us...ter-Q3-2012.pdf .
ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எங்களது facebook இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.
http://www.facebook.com/nowwowcharity
நன்றி
சுபா சுந்தரலிங்கம்
NOW-WOW
http://www.nowwow-us.org
http://www.nowwow-us...ter-Q3-2012.pdf .
ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எங்களது facebook இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.
http://www.facebook.com/nowwowcharity
நன்றி
சுபா சுந்தரலிங்கம்
NOW-WOW
http://www.nowwow-us.org
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]













