Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 15 June 2012 - 08:13 AM
சீனாவில், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள, அபராதம் செலுத்தாத காரணத்தால், இளம் பெண்ணுக்கு, ஏழாவது மாதத்தில் அரசு அதிகாரிகள், கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி பெற்றுக் கொண்டால் கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம் சீனாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர், பெங் ஜியாமி. முதல் குழந்தை உள்ள நிலையில், இந்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உருவானது. இதை கேள்விப்பட்ட சுகாதார மைய அதிகாரிகள், அவரை அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். பெங்கின் கணவர் டெங் ஜியுவான். இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்பட்ட டெங், அபராதம் கட்ட முயற்சித்தார். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள, 6300 டொலர் அபராதம் கட்ட வேண்டும். உரிய காலத்தில் அவர் இந்த அபராதத்தை கட்டாத காரணத்தால், கடந்த 2ம் தேதி, உள்ளுர் சுகாதார அதிகாரிகள், பெங்கை, வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு பிரசவ ஊசி போட்டு, ஏழு மாத சிசுவை வெளியே எடுத்தனர். சிசு வெளியே வந்ததும், அதன் தலையில் ஊசி போட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவத்தை கண்டு பெங் கதறி அழுதார். இந்த சம்பவத்துக்கு சீன மனித உரிமை இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளிநாட்டு மனித உரிமை அமைப்பினர் குறிப்பிடுகையில், "ஹிட்லர் காலத்தில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை' என்றனர். http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]