சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஊவா மாகாண சபையின் முதலமைச்சருமான ஷசிந்திர ராஜபக்ஷவைத் தவிர,ஏனைய அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களையும் மாற்றுவதற்கு மகிந்தர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்துவரும் மகிந்த , அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கு மிகவும் விசுவாசமான முதலமைச்சர் சிலரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி தென் மாகாண முதலமைச்சராக சஜின் வாஸ் குணவர்தனவை நியமிக்க மகிந்த தற்போது இறுதித் தீர்மானம் எடுத்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றத் தான் தயார் என துறைமுக சேவைகள் பிரதியமைச்சர் ரொஹித்த அபேகுணவர்தன நாமல் ராஜபக்ஷவிற்கு கடந்தவாரம் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் நடைபெறவுள்ள வடமத்திய மாகாண சபைக்கும், சப்ரகமுவ மாகாண சபைக்குமான தேர்தலில் ஆளும் கூட்டமைப்பின் சார்பாக முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளர்களைப் பெயரிடாது, நாமல் ராஜபக்ஷவின் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரை முதலமைச்சர்களாக நியமிக்க மகிந்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
மகிந்த பிள்ளையானுக்கும் ஆப்பு – முதலமைச்சர்கள் நீக்கப்படுகின்றனர்.
Started by
chinnavan
, Jun 14 2012 10:41 AM
2 replies to this topic
#1
Posted 14 June 2012 - 10:41 AM
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

#2
Posted 14 June 2012 - 07:25 PM
பிள்ளையான் தன்னுடைய கடந்த கால தவறுகளுக்கு மனம் வருந்தி வெம்பி சொம்பி மீண்டும் தமிழ் மக்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரவேசித்திட அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது..
டிஸ்கி:
அவர மீண்டும் யால்ரா அடிப்பாரா.. அல்லது அவரின்ட குருநாதரை பாலோ செய்து சுதந்திரமில்லா தேசிய கட்சியில் அடிமையாக இருப்பாரா..?
டிஸ்கி:
அவர மீண்டும் யால்ரா அடிப்பாரா.. அல்லது அவரின்ட குருநாதரை பாலோ செய்து சுதந்திரமில்லா தேசிய கட்சியில் அடிமையாக இருப்பாரா..?
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#3
Posted 14 June 2012 - 07:40 PM
சுழற்சிமுறையில் பதவி அளிக்கும் மகிந்தர்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














