Jump to content


Tamil Star News
Photo

அடிமைத்தனங்களில் இருந்து விடுதலைபெறப் போராடும் இனங்களின் தோழன் பிறந்த நாள் இன்று...


  • Please log in to reply
10 replies to this topic

#1 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,952 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 13 June 2012 - 11:52 PM

உலகெங்கும் தம் விடுதலைக்காகப் போராடும் அடக்கப்பட்ட இனங்களுக்கெல்லாம் எழுச்சியின் அடையாளமாய்,விடுதலையின் குறியீடாய்,மனவலிமையைக் கொடுக்கும் மந்திரமாய் இருக்கும் சேகுவேராவின் பிறந்தநாள் இன்று... எங்கள் உன்னததலைவனின் உள்ளத்தில் என்றும் நீங்காது வீற்றிருப்பவன்,அந்ததலைவனுக்கு துயரங்களிலும்,துன்பங்களிலும்,தோல்விகளிலும்,துரோகங்களிலும் வலிமை கொடுக்கும் வரலாறாய் இருந்தவன் சே..அந்த உன்னத போராளிக்கு இன்று பிறந்தநாள்...

1928 ஜூன் 14 , ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தன் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.

ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.

“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.

விடுதலைக்கான முழக்கம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் இவனும் இருப்பான் என்றும்....

சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது :

இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின் முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.

துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும் இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.

அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.
நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன். என்று சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது ஒரு போராளி என்பவன் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்கப்படுகிறான் என்கிற கூற்று சே குவேராவின் வாழ்வில் உண்மையான ஒன்றாகும் அதற்குச் சான்று இக்கூற்றேயாகும்.

மரணம் என்பது சிலருக்கு தன் வரலாற்றை தன் கொள்கையினை பிறருக்கு உணர்த்தும் கருவியாக அமையும். இவர் கீதோபதேசங்களையோ, கடவுளின் செய்திகளையே மக்களுக்காக கூறியரல்ல. மாறாக தன் வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக விட்டுச் சென்றவர். எங்கேயெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் சே குவேராவின் வாழ்க்கை புரட்டிப் பார்க்கப்பட வேண்டிய அவசியமாகிறது.
அடிமைத்தனத்திலிருந்து போராடி மேனிலையாக்கம் பெற்றுச் சிம்மாசனத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் கீழ்நிலைக்காக குரல் கொடுத்தும் கொடுக்காமலும் இருந்த வரலாற்றினை அறிந்தவகையில் கீழ்நிலைமையின் தேவைக்காக மீண்டும் சிம்மாசனத்திலிருந்து கீழ்நிலைக்கு வந்த வரலாறென்பது சே குவேராவின் வரலாறு மட்டுமேயாகும். தனது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டததை நாடு, மொழி, இனம் என்று குறுகிய வட்டங்களுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளாதவர்.

39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவராய் இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பெருந்தலைவருக்கும் சளைத்தவரல்ல. அப்பேர்ப்பட்ட உலகத் தலைவர் மீதும், அவரது போராட்டத்தின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏவல் படை (சி.ஐ.ஏ) மூலம் சேற்றை வாரி வீச நினைக்கிறது.

இந்த உதாரண புருஷன் இறந்த பின்னும் அவர் மீதும் ஆதிக்க சக்திகளுக்கு இருக்கும் பயம் மட்டும் இன்னும் விலகவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே வரலாற்றைத் திருத்தும் வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இனியும் இது போன்ற ஒருவர் தோன்றக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. அதற்கான பணிகளில் அது எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கிறது. மாதவராஜின் மொழியில் சொன்னால் மனித குல விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்
சே குவேராவின் உடலை சல்லடையாக துளைத்த பின்னரும், அவரது தோற்றம் விசுவரூபம் எடுத்து உலகை வியாபித்து விடுமோ என்ற பயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிம்மதி குலைக்கும் கொடுங்கனவென பரந்து கிடக்கிறது. அந்தப் பயத்தின் விளைவாகவே அவரது சரித்திரத் தோற்றத்தையும் சிதைக்க முயல்கிறது.

சி.ஐ.ஏ சற்று சாதுர்யமாகவே இதைச் செய்கிறது வெறுமனே சே குவேரா தோற்றுப் போனார் என்று கூறாமல், அவரது கோட்பாடு தோற்றது அவரது வழிமுறைகள் தவறு என்று கூறுவதன் மூலம் பின்வரும் சந்ததியினர் யாரும் சே குவேராவின் வழியைப் பின்பற்ற விடாமல் செய்யப் பார்க்கிறது.

துளியும் களங்கமற்று இருந்த பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா நட்பு மீதும் அமெரிக்க நிச்சயமாக கறை ஏற்படுத்த முயல்கிறது. தனது ஏகாதிபத்தியத்திற்கு அடங்கி நடக்கும் பொலிவிய அரசின் துணையோடு சே குவேராவை அமெரிக்கா சுட்டுக் கொல்கிறது. கொன்ற பின்பு சே குவேராவின் உடல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நினைவுச் சின்னமாக மாறி விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. பின்பு அவரது உடலை யாரும் காணாமல் ஒரு மறைவிடத்தில் புதைக்கிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உளவுத் துறையின் ரகசியக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சி.ஐ.ஏ. கட்டமைக்க விரும்பும் பொய் பிம்பம் அதற்கடுத்ததாக உண்மை நிலையை எடுத்துரைக்கும் வரலாற்று ஆதாரங்களை அடுக்கடுக்காக விவரித்துப் போகையில் சி.ஐ.ஏ.வின் உலகளாவிய கபடத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சி.ஐ.ஏ எந்த வேலையில் இறங்கியதோ அதற்கு நேர்மாறான விளைவே இப்போது மக்களிடம் படிந்து வருகிறது. ஆம் சே குவேரா புதைக்கப்பட்ட இடத்தின் அருகே எழுதப்பட்டிருந்ததைப் போலவே அவர்கள் நினைத்தது போலில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் '"சே"....சொல்லப்போனால் இன்னும் பிரகாசமாக...

இந்த உன்னத போராளியின் பிறந்த நாளில் இன்னுமின்னும் ஓர்மமாக உரைப்போம் இறுதி மூச்சு உள்ளவரை எங்கள் சுதந்திரக்காற்றை தேடி நாங்கள் எப்பொழுதும் ஓய்ந்துபோய்விடாமல் பயணித்துக்கொண்டே இருப்போம் என்று...

Posted Image

Posted Image


Posted Image

Posted Image

Edited by சுபேஸ், 13 June 2012 - 11:56 PM.

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

Advert

#2 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,952 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 14 June 2012 - 12:14 AM

சேகுவேராவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#3 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,235 posts
  • Gender:Male

Posted 14 June 2012 - 11:23 AM

என்னால் என்றைக்குமே, மறக்க முடியாத, ஒரு மனிதன்!
எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள், அவனுக்கு!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 Manivasahan

Manivasahan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,806 posts
  • Gender:Male
  • Location:CANADA
  • Interests:Literature

Posted 14 June 2012 - 02:35 PM

உலகில்அனைவரும் சம உரிமை பெற்றவர்களாக சுதந்திரக்காற்றைச் சவாசிக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாவீரன் புகழ்வாழவேண்டும் என்பதுடன் அவன் இலட்சியமும் நிறைவேற வேண்டும்.
அநீதியை கண்டு உன் மனம் துடித்தால் நீயும் எனக்குத் தோழனே.

#5 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,952 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 14 June 2012 - 03:30 PM

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே'...


Posted Image




“கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!” தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய ‘சே’வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.
‘சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்’ இதுவே எர்னெஸ்டோ ‘சே’குவேராவின் முத்திரைகள்.
உலக வரலாற்றில் ‘சே’வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை,அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை.இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் “ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்”என சவாலிட்டார்.’அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை’என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.
‘சே’வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது.கியூபா விடுதலையை கண்டதே ‘சே’வின் புரட்சியால் தான்.
“சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !” என்ற ‘சே’மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.
இப்படியான ‘சே’ஒரு மருத்துவர்.ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.
‘மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை’ என்பதே ‘சே’வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே,அவர்களது மரணமும் மர்மமானதே.ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல,எண்ணத்தால் - செயல்பாட்டால் – மனிதத்தால் முடிசூடப்படுவது.
இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.’சே’வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது ! இப்படி தன் 40 வயதிலேயே விதைக்கப்பட்ட ‘சே’ பிறந்த நாள் இன்று.
இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? ‘எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள்,நாங்கள் ‘சே’வை போல் இருப்போம்’ என்பதுவே !
நாமும் ‘சே’வைப் போல் இருப்போம் மனிதனாக…நல்ல தோழனாக.


நன்றி - http://youthful.vika...?nid=111#cmt241
- மகா.தமிழ்ப் பிரபாகரன்
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#6 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 444 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 14 June 2012 - 04:18 PM

பதிவிற்கு மிக்க நன்றி சுபேஸ்

#7 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,952 posts
  • Gender:Male

Posted 14 June 2012 - 04:50 PM

அடக்குமுறை எங்கு ஓங்கியிருக்கின்றதோ

அங்கே அதற்கெதிராக

சேகுவாராவின் பெயரும் ஓங்கி ஒலிக்கும்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#8 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,564 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 14 June 2012 - 07:03 PM

பகிர்வுக்கு நன்றி சுபேஸ் அண்ணா.


சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர் சே குவேரா.


''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” - சே குவேரா


Posted Image

- மூலம்: முகநூல் -

Edited by காதல், 14 June 2012 - 07:08 PM.


#9 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,024 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 14 June 2012 - 07:10 PM

பதிவிற்கு நன்றி சுபேஸ்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#10 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,793 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 June 2012 - 07:15 PM

''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” - சே குவேரா

அந்த வகையில் நான் உங்கள் தோழன் நண்பரே
நீர் இன்றும் வாழ்ந்திருக்கணும்.
உம்மை நினைவு கூறுகின்றோம்.
எவன் அடக்கப்பட்டாலும் அவன் தங்களை நினைவு கூறுவான்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#11 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 14 June 2012 - 09:43 PM

பிரான்சின் நெப்போலியன் பெனார்பார்ட்டும் , பதினாறாம் லூயி மன்னரும் இன்று தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள் .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]