Jump to content


Tamil Star News
Photo

ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012


  • Please log in to reply
169 replies to this topic

#161 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,213 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 29 June 2012 - 03:03 PM

சுப்பர் மரியோ


Posted Image


Balotelli மைதானத்தில் மேலாடையை கழற்றியமைக்காக... மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
நேற்று நடந்த விளையாட்டில் ஜேர்மனிக்கு ஒரு மஞ்சள் அட்டையும், இத்தாலிக்கு 4 மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது.

ஜேர்மன்காரருக்கு இத்தாலியிலை கோபமில்லை....உந்த கறுவல்லைதான் பயங்கர இறுள்ளை இருக்கிறாங்கள். :D

நாங்களும் கவனமாய்... இருக்கோணும்,
கறுவல் எண்டு நினைச்சு... இருட்டடி விழுந்தாலும்... விழலாம். :D :lol: :icon_mrgreen: :icon_idea:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#162 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,149 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 29 June 2012 - 04:54 PM

சுவாரசியமான செவ்வி.




உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#163 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,853 posts
  • Gender:Male

Posted 30 June 2012 - 02:28 AM

கு.சா, தமிழ்சிறி, வாத்தியார் எல்லாருக்கும் அனுதாபங்கள். சரி போகட்டும், ஒலிம்பிக்ஸில் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஜேர்மனி, போர்த்துக்கல் நாடுகள் ஒலிம்பிக்கில் விளையாடவில்லையே.

http://www.london2012.com/football/event/men/timetable/index.html

#164 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,213 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 01 July 2012 - 06:57 AM

Posted Image


யாருக்கு யூரோ கோப்பை... இன்று இறுதி.. வரலாறு படைக்க போராடும் ஸ்பெயின்-இத்தாலி!


கீவ்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் சாம்பியனான ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் இன்று மோதும் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
ஸ்பெயின் அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்ஸல் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். நடப்பு யூரோ கோப்பை தொடரில் இதுவரை அவர் ஒரு கோல் மட்டுமே வாங்கியிருக்கிறார். அவரைத் தாண்டி கோலடிப்பது என்பது எதிரணியான இத்தாலிக்கு கடும் சவாலாகவே இருக்கும். ஸ்பெயின் அணியில் அலோன்ஸயூ, செர்ஜிகோ ரேமோஸ், பேப்ரிகஸ், பெர்னாண்டோ டோரஸ், ஜோர்டி ஆல்பா, ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா ஆகியோர் மிகவும் பலமானவர்களாக இருக்கின்றனர்.
இத்தொடரில் இத்தாலி அணி தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. 1982, 2006-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இத்தாலி அணி மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. ஆனால் அந்த இருமுறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோன்று இந்த முறையும் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதனால் இந்த முறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வெல்லும் என இத்தாலி ரசிகர்கள் நம்புகின்றனர்.
இத்தாலி அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் மரியோ பலோடெல்லி. தொடர்ச்சியாக தலையால் முட்டி கோலடித்து வருகிறார். அவர் ஸ்பெயின் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்
நடப்பு 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்தும் உக்ரைனும் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் சி பிரிவில் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1௧ என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதுவரை இவ்விரு அணிகளும் 31 முறை சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இத்தாலி 10 முறையும், ஸ்பெயின் 8 முறையும் வெற்றி கண்டுள்ளன.
1968-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி, 2000-ம் ஆண்டில் இறுதிச்சுற்றில் பிரான்ஸிடம் தோற்று, கோப்பையை இழந்தது. கடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 2௧ என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பதால் இத்தாலி மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.
உலக சாம்பியனும், யூரோவின் நடப்புச் சாம்பியனுமான ஸ்பெயின், இந்த ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கலாம்.
நன்றி தற்ஸ்தமிழ்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#165 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,627 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 01 July 2012 - 06:43 PM

நாங்களும் கவனமாய்... இருக்கோணும்,
கறுவல் எண்டு நினைச்சு... இருட்டடி விழுந்தாலும்... விழலாம். :D :lol: :icon_mrgreen: :icon_idea:

மன்னிக்கோணும் சிறித்தம்பி! உந்தவிசயத்திலை நான் வெகுதூரம்.....என்னை நேரை பாத்தியளெண்டால் மயங்கி விழுந்து போவியள்......கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி நானிருப்பன் :lol: :lol: :D

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#166 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 01 July 2012 - 06:49 PM

மன்னிக்கோணும் சிறித்தம்பி! உந்தவிசயத்திலை நான் வெகுதூரம்.....என்னை நேரை பாத்தியளெண்டால் மயங்கி விழுந்து போவியள்......கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி நானிருப்பன் :lol: :lol: :D



குமாரசாமி அண்ணை
'ரோஜா' அரவிந்தசாமி மாதிரியா? :D
அல்லது லேட்டஸ்ட் ஆ



#167 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,627 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 01 July 2012 - 06:56 PM

ஜேர்மனி இறுதி ஆட்டத்திற்கு வரும்போலை இருக்கின்றது. இப்பவே லீவுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் :D

வாத்தியார் சொன்னதுக்காக லீவு போட்டுட்டு வேறை ஆர்ற்ரையும் விளையாட்டை பாக்கவேண்டியதாய்ப்போச்சு :D :lol:

குமாரசாமி அண்ணை
'ரோஜா' அரவிந்தசாமி மாதிரியா? :D
அல்லது லேட்டஸ்ட் ஆ

எனக்கு பொய்சொல்ல பிடிக்காது.....லேட்டஸ்ட்.....லேட்டஸ்ட்ட்.. :D

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#168 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,336 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 01 July 2012 - 08:33 PM

முதலாவது கோல் : 14
கோல் முதலாவது : 41


இறுதிப்போட்டியில் இரண்டாவது அரைவாசி நேரத்தில் பல இத்தாலி வீரர்களும் தாம் விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள் .

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#169 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,149 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 July 2012 - 08:56 PM

உலக சாம்பியனும், யூரோவின் நடப்புச் சாம்பியனுமான ஸ்பெயின், இந்த ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கலாம்.


3ஆவது முறையும் ஸ்பெயின் சாம்பியனாது. இத்தாலி 0 ஸ்பெயின் 4.

பிளாற்றினி சாம்பியன் மாலையை அணிவிக்கிறார்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#170 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,915 posts
  • Gender:Male

Posted 01 July 2012 - 09:26 PM

ஸ்பெயின் இறுதியாட்டத்தில் இத்தாலியை 4:0 என்ற வித்தியாசத்தில்
வெற்றிபெற்று சாதனையை படைத்துள்ளது.
தொடர்ந்து மூன்றுமுறை கிண்ணத்தைக்கைப்பற்றிய(ஐரோப்பாக்கிண்ணம்2008,உலகக்கிண்ணம் 2010,ஐரோப்பாக்கிணணம் 2012) நாடுகளுடன் ஸ்பெயினும் சேர்ந்து கொள்கின்றது.
இதற்கு முதல் ஜேர்மனி இந்த சாதனையைப் புரிந்தது குறிப்பிடத்தக்கது.



வாழ்த்துகள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]