Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 ஊடகவியலாளர் நாடு கடத்தல்: சிறீலங்காவின் ஜனநாயக விரோத வெறியாட்டம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..!

ஒரு சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???!

சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..!

Channel-4 journalist deported

Tuesday, 05 June 2012 13:10

shirani.jpg

Shirani Sabaratnam, who works at the London-based Chennel-4 TV Station as an editor and a presenter, arrived in Sri Lanka on Sunday. On arrival she was detained at the airport by Sri Lankan law enforcement authorities and later deported to Britain, informed sources said.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

நாட்டின் உள்ளே செல்லவிட்டு அதன்பின்னர் கடத்தாமல், வாசலிலேயே பிடித்து நாடு கடத்தியது நல்ல விடயம்தானே.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் - 4 தொலைக்காட்சி சேவையின் ஆசிரியரும் தொகுப்பாளருமான சிராணி சபாரட்னம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, அவர் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறிய அந்த வட்டாரங்கள், பிரித்தானியாவிலிருந்து டுபாய் ஊடாக பிரித்தானிய கணவருடன் இவர் இலங்கைக்கு வந்ததாகவும் கூறியுள்ளன. இவரின் பெயர் கறுப்புப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இவர் தடுத்துவைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கையின் வடபகுதிக்கு யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்களில் இவர்கள் இருவரும் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக புலனாய்வாளர்களின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தை கடுமையான விமர்சிக்கும் மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காகவே இக்கணவனும் மனைவியும் இலங்கைக்கு வந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பிறந்த இவர்;, சனல் - 4 இன் பணிப்பாளர்களில் ஒருவரான ஸ்ருவார்ட் கொஸ்குறோவை திருமணம் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் இவர் பிரதான பங்கேற்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக கூறப்படும் சிராணி சபாரட்னத்தின் கணவரான ஸ்ருவார்ட் கொஸ்குறோவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

http://www.tamilmirr.../42260--4-.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக கூறப்படும் சிராணி சபாரட்னத்தின் கணவரான ஸ்ருவார்ட் கொஸ்குறோவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வழக்கம் போல, றாலைப் பிடித்த அரசு, சுறாவை விட்டுட்டுது போல! :D

ஆனாலும், சிராணி சபாரத்தினம் துணிந்தவர்!

இந்தச் சம்பவத்தையே சிங்களத்தை நோக்கி, எய்யும் அம்பாக உபயோகிக்கட்டும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக அடக்குமுறை இலங்கையில் கொடிகட்டிப்பறக்கின்றது.

அதற்கான ஒரு சாட்சியாக சிராணி அவர்கள் செயற்படவேண்டும்

சனல் நான்கு இதற்கான விளக்கத்தை இலங்கை அரசிடம் கேட்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஊடக அடக்கு முறையை ஸ்ரீலங்கா அரங்கேற்றி உள்ளது ....

Edited by தமிழரசு

சனல் நாலை பழிவாங்கும் எண்ணத்தில் சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.

உண்மையைக்கூறிய ஒரு ஊடகத்தை சார்ந்தவர்களை அவர்களின் உறவுகளை பழிவாங்கும் சிங்களத்துடன் எவ்வாறு தமிழர்களை இணைந்து வாழ இந்த உலகம் கேட்கமுடியும்??

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகத்தினதும்,ஊடகவியலாளனதும் பலம் இன்னும் மகிந்தவின் கொள்கைவகுப்பாளர்களுக்கு புரியவில்லை என்பது எங்களுக்கு சாதகமான விடயம்...இது தொடர வேண்டும்....அப்பொழுதுதான் இன்னுமொரு அப்ரைசிங் உலக ஊடகங்களில் தொடர்ச்சியாக் வரும்....

சிங்களத்துக்கு மீண்டும் ஒருமுறை பாராட்ட வேண்டும்! ... இப்படியாவைகள் தொடர்ச்சியாக சிங்களம் செய்யட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.