Jump to content

Tamil Star News
Photo

நான் வே**.. அவள்..??!

  • Please log in to reply
43 replies to this topic

#21 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,522 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 05 June 2012 - 12:28 AM

முகப்புத்தகம்
முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D (பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen: :D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

Advert

#22 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,812 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 June 2012 - 07:38 AM

முகப்புத்தகம்
முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :) :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#23 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,715 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 05 June 2012 - 09:03 AM

உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி நெடுக்கு
ஆனால் இதை வேறு ஒருவர் பதிந்திருந்தால்
இந்தளவுக்கு கருத்துக்களில் காரம் வந்திருக்காது என்பது எனது கருத்து.
அந்தளவுக்கு பெண்கள் பற்றிய கருத்துக்களில் நெடுக்கு தாழ்வடைந்துள்ளது தெரிகிறது.
ஆனாலும் அவரது கருத்துக்கள் சமூக நன்மை கருதி எழுதப்படுவதால் சிலவற்றை சகிக்க முடியாவிட்டாலும் ஏற்கவேண்டியுள்ளது.
எனக்கும் அம்மம்மா
அம்மா
அக்கா
தங்கை
மனைவி
மருமக்ககள்
பிள்ளைகள்......... என்று இருப்பதால் அதற்கு இருக்கும் வரம்புக்குள்தான் நானும் நிற்கமுடியும். எழுதமுடியும்.
அந்த வகையில் நெடுக்கு வெளியில் நிற்கிறார். அவ்வளவுதான்.

அது அவரது சுதந்திரம்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

#24 ராஜவன்னியன்

ராஜவன்னியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,563 posts
  • Gender:Male
  • Location:மதுரை, தமிழர்நாடு
  • Interests:தமிழ், கணணி, பழைய பாடல்கள், புன்னகை.

Posted 05 June 2012 - 09:19 AM

இணையதளங்களில், 'சாட்' என்ற ஆபத்தான வலையில், சில விபத்துக்களும், அதிர்ச்சிகளும் அடிக்கடி ஏற்படுவதை கேள்விப்பட்டுள்ளேன்...

அவற்றில் கீழே இணைத்துள்ள காணொளி மாதிரியும் அமைய சந்தர்ப்பங்கள் உண்டு..! :icon_idea:

கவனம்!...கவனம்!! :lol:

.

#25 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 05 June 2012 - 09:49 AM

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D (பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen: :D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

முகப்புத்தகத்தைத் தான் குறிப்பிட்டேன்...
சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.
பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :) :icon_idea:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?
  • கிருபன் likes this
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#26 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,522 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 05 June 2012 - 10:16 AM

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நானும் add பண்ணுவதை தான் குறிப்பிட்டேன். பிரபலம் என்று சொன்னவுடன் A.R.Rahman ரேஞ்சுக்கு நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. :lol:
நான் யாழ்களத்தில் இருக்கும் சில பிரபலங்களையும் :D எம் நாட்டின் சில பிரபலங்களையும் சொன்னேன். அவர்களை like செய்யும் option இல்லாத போது add பண்ணி தான் வைத்திருக்கிறேன்.

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

ஆம் அது கண்டபடி chat க்கான அழைப்பை தடுக்க உதவும்.
ஆனால் நண்பர்களாக இணைத்தபின் message போடுவதை தடுக்க வழியில்லை என்று நினைக்கிறேன். எனவே தவறான message கிடைத்தால் உடனேயே block பண்ணுவது சிறந்தது.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.
பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

ஆம். நிச்சயம் இயற்பெயரில் உள்ளபோது இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்தல் நலம். :)
நான் புனைபெயரில் தான் add பண்ணியிருக்கிறேன். :)
என்னை பொறுத்தவரை பெண்கள் இயற்பெயரில் facebook account வைத்திருப்பதையோ அல்லது அதில் தமது படங்களை share பண்ணுவதையோ தவிர்ப்பது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்லது. :rolleyes:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

இக்கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். :)
எனவே தான் கண்டவர்களையும் add பண்ண கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். :rolleyes:

Edited by காதல், 05 June 2012 - 10:31 AM.

#27 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,812 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 June 2012 - 10:40 AM

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :) :icon_idea:

Edited by nedukkalapoovan, 05 June 2012 - 10:41 AM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#28 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,522 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 05 June 2012 - 10:56 AM

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:
friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப்பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து.

அது மட்டும் நடவாத காரியம். :lol:
ஏனென்றால் இதை கட்டுப்படுத்த இன்னொரு முறை கொண்டுவந்தால் அந்த முறையை பயன்படுத்தியே பாதக நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு விசகிருமிகளுக்கு technic தெரியும். :D

#29 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,812 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 June 2012 - 11:06 AM

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:
friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

அது சமூக வலையை குறுக்கிவிடுமே..! பிறகு அதே தெரிந்த கூட்டத்தோடு அவர்கள் கதைக்கும் அதே விடயங்களைத் தான் மீண்டும் மீண்டும்.. பேசிக்கிட்டு.. பிரதிபலிச்சுக்கிட்டு இருக்கனும். ஒரு கட்டத்தில்.... சமூக வலை சுவாரசியம் இழந்திடும்..!

அதேவேளை.. ஊர்.. உலகம் பூரா பல்லின மக்களும் நல்ல சமூகத்தவர்களாக இருந்தால்.. சமூக வலை.. சுவராசியமாக இருப்பதோடு.. பல்வேறு ஆக்கங்கள்.. கருத்துக்கள்.. விடயங்களை பரந்து விரிந்து தெரிந்து கொள்ள முடியும் தானே..!

விசக்கிருமிகளை கட்டுப்படுத்த நாம் அவர்களின் செயற்பாடுகள்.. ஊடுருவல்கள்.. பற்றிய.. விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். விசக்கிருமி ஒன்றை இனங்கண்டால்.. அதனைப் பற்றிய எச்சரிக்கைகளை நண்பர்களுக்கு தெரிவிக்கும் முறையையும் கொண்டு வர வேண்டும். அத்தோடு.. அந்த விசக்கிருமி நண்பர்களின் நட்பு வட்டத்தில் இருந்தும் நீக்கிவிட வசதி செய்யப்படின் விசக்கிருமிகளின் ஊடுருவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்..! :) :icon_idea:

Edited by nedukkalapoovan, 05 June 2012 - 11:08 AM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#30 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,913 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 05 June 2012 - 11:07 AM

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.
பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

#31 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,928 posts
  • Gender:Male

Posted 05 June 2012 - 11:48 AM

முகநூலில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும்வரை அங்கு சீர்கேடுகள்
நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும்.
அதுவரை முகநூலின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கும்
சமூகத்தின் விழிப்புணர்விற்காக இந்ததிரியை
ஆரம்பித்த நெடுக்ஸிற்கு நன்றி.

முகநூல் என்னிடம் இல்லை.ஒருவிதத்தில் நன்மையே.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#32 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 05 June 2012 - 11:56 AM

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

உலகெங்கும் சிதறி தொலை தூரத்தில் இருக்கும் உறவுகள்/ நட்புகளுடன் தினமும் கதைத்து நடப்பவைகளை அறிய நேரம் போதாமையால் இப்படி செய்யக் கூடும்..

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

இதனையும் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உங்கள் படங்கள்/ சுவரில் எழுதும் விடையங்களை மட்டுப்படுத்தக் கூடிய வகையில் option இருக்கே.. உங்கள் நண்பர்களின் பட்டியலையும் ஏற்கெனவே/ புதிதாகச் சேரும் நண்பரிடமிருந்து மறைக்க முடியும்.

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

உங்கள் கருத்து நியாயமானது நெடுக்ஸ், பெரும்பாலானோர் விரும்புவதும் அதுவே.. இருப்பினும் இதனை நடைமுறைப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை...
எனது சுவரில் எம்மின விழிப்புணர்வு நிகழ்வுகள்/ காணொளிகள்/ கட்டுரைகள் இணைப்பது வழக்கம். அண்மையில் சனல் 4 கின் கொலைக்களம் இணைந்திருந்தேன், அதனை பார்த்த வேலை இடத்தில் உள்ள வேற்று இன நண்பன் ஒருவன் தனது சுவரில் பகிர்ந்திருந்தார்.. அவரது நண்பர் பட்டியலில் இருந்த ஒரு சிங்களவன் (அவனும் வேலை செய்யுமிடத்தில் தெரிந்தவன்) தன்னை இணைக்கும் படி கேட்டிருந்தான்.. அவன் பொதுவாக நல்லவன், ஆனால் அவனின் உண்மையான முகம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை, அதனால் சொந்தச் செலவில் சூனியம் வைக்க மறுத்துவிட்டேன்..
.

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :) :icon_idea:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D :) :icon_idea:

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...? :rolleyes: :D
ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#33 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,522 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 05 June 2012 - 11:59 AM

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...?
ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:

:lol: :lol:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D

:lol: :lol: :lol: :lol: :lol:

#34 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 05 June 2012 - 12:41 PM

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

தெரியாமத்தான் கேட்கிறேன், இவங்களுக்கு 'முகப் புத்தகம்' தாண்டி மனிதர்களோடு பழக வேறு வழியில்லையா? :D

#35 காட்டாறு

காட்டாறு

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 799 posts

Posted 06 June 2012 - 04:19 AM

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்
ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

  • வாத்தியார் likes this
உலகத் தமிழினமே எண்ணிப்பார். நீ உறங்கினால் வரலாற்றில் யாருன்னை மன்னிப்பார்?

#36 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,812 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 07 June 2012 - 08:18 PM

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்
ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

முகநூலில் 3 ஆயிரம் தொடர்பும் வைச்சிருக்கலாம்.. ஆனால் அவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்வது தான் கூடாது..! நண்பர்களாக தெரிவு செய்ய நிறைய செய்ய வேண்டி இருக்கும். சமூக வலையில்.. 3000 பேர் என்ன 5000 பேரை வைச்சிருக்கிறது தப்பில்ல..! பேஸ் புக்கே மில்லியன் கணக்கா வைச்சிருக்குது.. எல்லாம் அதன் நண்பர்களா என்ன..??! ஆனால் அதற்கு அது முதலீடு..! :) :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#37 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,522 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 07 June 2012 - 09:29 PM

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

அந்த இருவரும் இவர் கருத்தை கவனிச்சுக்கொள்ளுங்கப்பா... :lol: :lol:

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

:lol: :lol:

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:
அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol: :icon_idea:

Edited by காதல், 07 June 2012 - 09:30 PM.

#38 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,842 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 10 June 2012 - 12:24 PM

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen: <_<

மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.

#39 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,992 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 10 June 2012 - 12:50 PM

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen: <_<

அக்கா நெடுக்ஸ் பெட்டையின் படத்தைப் போட்டியிருந்ததால் வந்தவர் நினைத்தார் நெடுக்ஸ் பெண் என்று :lol:
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#40 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,842 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 10 June 2012 - 12:59 PM

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...
:lol: :D

மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]