இந்திய போர்க்குற்றத்தை வெளிக்கொண்டுவர வெளிக்கிட்ட திரி
இறுதியில் எம்மை யார் யார் என விலாசம் கேட்டு வெளிக்கொண்டு வருவதில் வந்து நிற்கிறது.
இதுவும் அவர்களின் வெற்றியோ?
Posted 20 May 2012 - 04:21 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

Posted 20 May 2012 - 04:37 PM
Posted 20 May 2012 - 06:36 PM
இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிநPosted 20 May 2012 - 08:05 PM
வணக்கம் கலைஞன்,
உங்கள் கேள்விக்கு நன்றி.
ஒற்றை வரியில் சொல்வதானால் புறக்கணிக்க முடியவில்லை என்பதல்ல, புறக்கணிக்கத்தேவையில்லை.
1. எனது பார்வையில் என்னை ஆத்திரப்படுத்தியவர்களின் பிரசுரங்களை வாசிக்கமாட்டேன் என்பது தீக்கோளித்தனமானது.
2. புறக்கணிப்பு என்பது எம்மீது நாமாக இட்டுக்கொள்ளும் ஒரு சுதந்திர மறுப்பு. நான் என்னத்தை எப்போது வாசிப்பேன் என்பதை பிறிதொரு மனிதன் நிர்ணயிக்க அனுமதிப்பதைப் பலவீனமாகக் கருதுகிறேன்.
3. அலெக்சாண்டர் பிளெமிங் ஒரு அயோக்கியன் என்றும் அதை எனது பூட்டன் அன்றே அறிந்திருந்தார் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளின், பிளெமிங் அயோக்கியன் என்று தெரிந்தும் எனது பூட்டன் 1940ம் ஆண்டில் பெனிசிலின் பாவித்தமை அபத்தம் என்று கூறுவதிலோ அல்லது பெனிசிலினையோ அல்லது அக்கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக இற்றைவரை உருவாக்கப்பட்டுவிட்ட மருந்துகளையேர் நான் பாவிக்கமாட்டேன் என்று கூறுவதிலோ, நான் மேற்படி மருந்துகளைப் பாவிப்பது மேற்படி அயோக்கியங்களிற்கு வருமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்கும் என்று கூறுவதிலோ எனக்கு உடன்பாடில்லை.
4. அறிவிக்கப்பட்ட புறக்கணிப்புக்களும் பொருளாதாரத் தடைகளும் கள்ளச் சந்தைகளை உருவாக்குவதோடு தடைசெய்யப்பட்ட பொருட்களிற்கான சக்திவாய்ந்த விளம்பரங்களுமாக எதிர்மறை விளைவுகளை உருவாக்குவது தவிர்க்கமுடியாதது.
5. எதிரி ஒற்றைக் குழல் ஏவகணையினைக் கண்டுபிடித்துப் பாவிக்கிறான், அவனது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எனது அறிவைச் சேர்த்து என்னால் பல்குழல் ஏவுகணை உற்பத்தி செய்து பாவிக்கமுடியும் என்றால், கோவக்காறனின் கண்டுபிடிப்பில் இருந்து என்னண்டு நான் என்ர கண்டுபிடிப்பை வளர்ப்பது என்று சிந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நானறிந்தவரை, உலகின் வெற்றிபெற்ற சக்திகள் எவையும் அவ்வாறு சிந்தித்துமில்லை.
இப்பிடிச் சொல்லிக்கொண்டே போகலாம்....
எனது பார்வையில், குறித்த ஒரு விடயத்தை வெளிப்படையாகப் புகழாதிருப்பது என்பது வினைத்திறன் மிக்க அங்கீகார மறுப்பு. உலகின் வெற்றிபெற்ற சக்திகள் நாளாந்தம் கடைப்பிடிக்கும் சர்வசாதாரணமான அரசியல்.
உலகின் கணிசமான யுத்தங்கள் மனவெளிகளிலேயே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
Edited by ரதி, 20 May 2012 - 08:07 PM.
Posted 20 May 2012 - 08:48 PM
ரகுநாதன் ,
தங்கராசா மாஸ்டர் எனதுவீட்டிற்கு முன்பாக தான் தினமும் பாடசாலை செல்வார் .எனது அக்கா இருந்தது லதா தியேட்டர் தாண்டி இன்னமும் உள்ளுக்குள்ள வர முன்னால் அசோகா மரங்கள் நின்றவீடு .அந்த வீட்டிற்கு முன்னால் முன்னாள் இலங்கை சீ.ஐ .டி யும் மனைவியும் இந்தியன் ஆமியால் சுடப்பட்டு இறந்தார்கள் ,இவர்களின் மகன் செல்வன் பின்னர் புலிகளில் சேர்ந்தார் .
சரவணபவன் மரக்காலை வைத்திருந்தது அப்பாவின் தம்பியாரின் காணி ,அதை இப்போ கனடாவில் இருக்கும் ஒரு நகைக்கடை முதலாளி(அவரும் கோண்டாவில்தான்) வாங்கி தனது இந்தியாவில் படித்து டாக்டர்களான பிள்ளைகளுக்காக பெரிய நேர்சிம்கோம் கட்டப்பபோவதாக அறிந்தேன் .
இராசரத்தினம் குடும்பம் அனைவரையும் எனக்கு தெரியும் ,சிலர் கனடாவிலும் இருக்கின்றார்கள் .
Posted 21 May 2012 - 01:24 AM
எனது மாமா ஒருத்தர் கொழும்பிலிருந்து யாழுக்கு வந்து வீட்டின் அறையில் உடை மாற்றிக்கொண்டிருக்கும்போது ஜன்னலூடாக சுட்டுக்கொல்லப்பட்டார்.. காரணம் இந்திய ராணுவம் விரட்டிக்கொண்டு வந்த புலி தப்பிவிட்டது.. கண்ணில் பட்ட இவரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள்..!
அவரவர் தங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.. தமிழ்ப்பைத்தியத்திற்கு ஓரளவு புரிய வைக்கலாம்..
Posted 21 May 2012 - 01:27 AM
Posted 21 May 2012 - 01:35 AM
தும்ஸ்.. நீங்கள் குறிப்பிட்டவரும், நான் குறிப்பிட்டவரும் ஒருவரே என நினைக்கிறேன்.. எனது அப்பாவின் நல்ல நண்பர்.. சொந்தமல்ல.. ஆனால் மாமா என்றே கூப்பிடுவோம்..
Posted 21 May 2012 - 11:51 AM
Posted 21 May 2012 - 08:04 PM


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
Posted 06 July 2012 - 06:32 PM
எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது! வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு. என்போலவே பலரும் அன்று முழுவதும் மன உளைச்சலுடன்,தூக்கம் தொலைந்து அவதிப்பட்டிருக்கலாம். இந்திய அமைதிப்படை குறித்த ஜெயமோகனின் கட்டுரை அது!
இந்திய அமைதிப்படை தமிழ்ப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது என்ற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் தமிழ் நாட்டில் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழர்களுக்கு உண்மையிலேயே பேரழிவு வந்தபோது வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொள்ளக் காரணமாக அமைந்தது - என்பதே அதன் சாராம்சம்.
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் எதையும் கேட்டேயறியாத, யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய, ஒன்றுமே தெரியாத ஒரு நல்ல அதிகாரி இதுபற்றி ஜெயமோகனிடம் கேட்கிறார். எண்பது வயதுப் பாட்டியையும் தங்கள் சகாக்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் செய்த விசாரணை பற்றிக் கூறி, அப்படியெதுவுமே நடக்கவில்லை என உறுதிப்படுத்துகிறார் இன்னொரு அதிகாரி. அதுவரை சங்கடத்துடன் நான்கு மாதங்கள் வெளியிடாமல் வைத்திருந்த இந்தக் கடிதங்களை சரியாக மே-16 ஆம் திகதி வெளியிட்டிருந்தார் ஜெயமோகன்.
மேலும் இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் - என்று அக்கால கட்டத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரையைக் கூட ஜெமோ இப்போது மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை என நினைக்கிறாராம்.
"உலகிலுள்ள எல்லா இராணுவமும் ஒரே மாதிரியானதே" எனும் ஜெமோ, மனிதனின் கும்பல் மனநிலை பற்றிக்கூறி, இராணுவம் என்பது ஆயுதமேந்திய ஒரு கும்பலே எனத் தெளிவாகச் சொல்கிறார். ஆனாலும் இந்திய ராணுவம் மட்டும் அந்தக் கும்பல் மனநிலையை விட்டு காந்தீய வழியில் நடந்துகொண்டிருக்கும் என நம்பியது வேடிக்கையானதே!
இராணுவ நடவடிக்கையின்போது, ஒரு பிரதேசத்தை தாக்குதல் படையணி போரிட்டு, முன்னகர்ந்து கைப்பற்றும். புதிதாக ஒரு பிரதேசத்துக்குள் நுழையும் தாக்குதல் படையணியிடம் இருக்கும் மனிதநேயம், மூர்க்கம், ஆவேசம் எல்லாவற்றையும் அவர்கள் போரின்போது சந்தித்திருக்கும் எதிர்ப்புக்கள், இழப்புக்களே தீர்மானிக்கும்.கைப்பற்றிய இடத்தைத் தக்கவைக்க, கண்காணிப்பு, ரோந்து என்பவற்றிற்கு இன்னொரு படையணி. இந்த அணி அப்பிரதேச மக்களுடன் சுமுகமாக, நல்லுறவுகளைப் பேணும் வகையில் நடந்துகொள்ளும். அப்படியே அறிவுறுத்தப்படும் - ஆனால் திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் இது மாறுபடலாம்!
யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரை இலங்கை இராணுவத்தை விட மிக மோசமான அனுபவங்களைப் பெற்றது இந்திய ராணுவத்திடமிருந்தே. இதை இரண்டு சூழ்நிலைகளிலும் வாழ்ந்த யாரைக் கேட்டாலும் யோசிக்காமலே கூறிவிடுவார்கள். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை படைகள் கைப்பற்றும்வரை அங்கிருந்த பெரும்பான்மையான மக்கள், ஒரு குறிப்பிட்ட இளைய தலைமுறையினர் சிங்கள இராணுவத்தினரை நேரில் பார்க்காதவர்களாகவே இருந்தனர். அதுவரை சந்தித்த உயிர் இழப்புகள், அவலங்கள் எல்லாமே விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களாகவே இருந்தன.
இலங்கை இராணுவம் செய்த ஒரு படுகொலையை நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவு! ஆனால் இந்திய இராணுவம் பற்றிச் சொல்வதற்கு அந்தக் காலப்பகுதியில் என்போலவே குழந்தைப் பருவத்திலிருந்தவர்களுக்கும், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லோரிடமும் ஒரு பயங்கரமான அனுபவம் இருந்தது.
சிங்கள இராணுவம் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரி. யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றினால், என்னவெல்லாம் நிகழுமோ என்ற மிதமிஞ்சிய அச்சஉணர்வு எல்லோரிடமும் இருந்தது. ஏற்கனவே இந்திய அமைதிப்படையிடம் பெற்ற அனுபவமும் இதை அதிகப்படுத்தியது! ஆனால் மக்கள் இராணுவத்தைச் சந்தித்தபோது அவர்கள் நடந்துகொண்டமுறையில், இராணுவம் குறித்த பயம் குறைந்து, படிப்படியாக அற்றுப்போனது. இதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.
இந்திய அமைதிப்படை (IPKF - Indian Peace Keeping Force) தமிழர்களின் நண்பனாக, பாதுகாவலனாக வந்தது. அது ஒரு மதிய நேரம். வானில் தொடர்ச்சியாக இடி உறுமுவது போல ஒரு வித்தியாசமான அதுவரை கேட்டிராத ஒலி! யன்னல் கதவுகளின் கண்ணாடிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் தெரிந்தது இலங்கை வான் பிராந்தியத்தில் நுழைந்து, இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளை போட்டுச் சென்றது (ஒப்பரேசன் பூமாலை)
எங்கும் இதே பேச்சு. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி. எந்த ஆதரவுமின்றித் தவித்துப் போயிருந்த மக்களுக்கு புத்துணர்ச்சி கொண்டார்கள் எங்களுக்கு இந்தியா இருக்கு! யாரும் எதுவும் செய்ய முடியாதென்ற நம்பிக்கை. முதன்முதல் IPKF யாழ்ப்பாணம் வந்தபோது கொடுத்த வரவேற்பு அடைந்த ஆரவாரம் அப்படியிருந்தது. ஆனால் சில மாதங்களில் IPKF - Innocent People Killing Force ஆக மாறிப்போனது!
திடீரென ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. எல்லோரும் வீடுகளை விட்டு பக்கத்திலுள்ள கோவிலுக்குப் போய்த்தங்கிக் கொள்ள வேண்டும். அந்த வீட்டிற்கு வருகிறது இந்திய ராணுவம். அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த மகனை நோக்கிச் சென்ற ஒரு இராணுவ வீரன் தன் கத்தியை அவன் நெச்சில் சொருகி அடிவயிறு வரை இழுக்கிறான். தாய், தந்தை, அண்ணன்கள், தங்கைகள் கதற அவர்கள் கண்முன்னால் துடித்து இறந்து போகிறான். உடலைக் கொண்டுசெல்லவோ, வீட்டில் வைக்கவோ அனுமதிக்கப்படவில்லை. வீட்டு முற்றத்திலேயே எரித்துவிட்டுக் கண்ணீருடன் சென்றது அந்தக்குடும்பம். சம்பவம் இடம்பெற்றபோது அயல் வீட்டிலிருந்தவர் இருபது வருடங்களுக்கு முன்னர் விவரித்தபோது அவர் குரலிலிருந்த துயரம் , நடுக்கம் இப்போதும் நினைவில்.
இதுபோல ஏராளம்! கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் தன் சிறுவயதில் உறவினரோடு பலரை ஒன்றாகச் சேர்த்துப் புதைத்ததை விவரித்த நண்பன். பிரம்படி, நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்ற படுகொலைகள். வீதியில் வரிசையாகப் பலரைப் படுக்கவைத்து யுத்த டாங்கியினால் ஏற்றிக் கொல்லப்பட்டவர்களில் தந்தையை இழந்தவன் எனப் பலர். இப்படி எல்லோரிடமும் ஏதோவொரு அனுபவமாவது இருந்தது.
இதை நேரடியாக அனுபவித்தவர்கள் கூறும்போது, அந்த வலி, உணர்வு கலந்தே இருக்கும். இதுகூட ஜெமோவிற்கு மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டாகத் தோன்றியிருக்கலாம்! இதற்குப் பின்னணியில் அரசியல் இருந்ததும், அதற்கு பெருமளவு இந்திய ராணுவம் பலிகொடுக்கப்பட்டதும் உண்மை! ஆனால் ராணுவம் செய்த கொடுமைகளை ஒரேயடியாக மறுதலித்து, அவையெல்லாம் பொய்ப்பிரச்சாரம் என்று திரித்ததில்தான் தெரிகிறது ஒரு எழுத்தாளனின் தேசபக்தி!
இந்திய அமைதிப்படையும் உலகிலுள்ள ஏனைய இராணுவங்கள் அந்நிய நாட்டில் எப்படி நடந்துகொள்ளுமோ அப்படியேதான் நடந்துகொண்டது! இவையெல்லாம் நடக்கவேயில்லை என்று கூறிய ஜெமோ இப்போது "நான் அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் ஆக்கிரமிக்கும் மண்ணில் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே கொடுமைகளைச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன்" என்று சப்பைக்கட்டு கட்டி இறுதியில்...
தான் எழுதிய கட்டுரைக்கு ஈழத்தமிழர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல் ஒரு முடிவைக் கூறிவிட்டார் "எழுத்தாளனின் குரல் எங்கும் அறத்தின் குரலாகவே இருக்கும்" - எனக் கூறிக்கொள்ளும் ஜெயமோகன்!
இதையெல்லாம் விடப் பெரிய கவலை சிலருக்கு! யார் சொல்வதைக்கேட்டு ஜெமோ தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஜெமோவின் கட்டுரையை விட இதுதான் சகித்துக் கொள்ள முடியாத பெரிய கவலையாக இருக்கிறது அவர்களுக்கு!
ஷோபாசக்தி! - ஒரு புலி எதிர்ப்பாளர். புலி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்களாக இருக்க முடியாது என்பது நம்மவரின் ஆழ்ந்த நம்பிக்கை. மாற்றுக்கருத்துச் சொல்பவர் - இவர்கள் தேசத்துரோகிகளாகவே இருப்பது வழமை! தேசத்துரோகிகள் கூறுவதெல்லாம் பொய்தான். இதை நிறுவுவதற்குக் காரணங்களைத் தேடும்போது, மாற்று அரசியல் என்பதைப் புலி எதிர்ப்பு அரசியலாகவே செய்துவரும் ஷோபாசக்தி அசட்டையாக சில தகவல் பிழைகளை எழுத்தில் செய்வார். யாழ் கோட்டைச் சமரில் புலிகள் ஆட்டிலறி அடித்ததுபோல! புலிகளிடம் அட்டிலறி இல்லாத காலத்தில் அவர்கள் அட்டிலறி அடித்ததாகப் பொய் கூறியிருக்கிறார். ஆகவே ஷோபாசக்தி கூறுவதெல்லாம் பொய்!
'முறிந்த பனை' (Broken Palmyrah) என்ற நடுநிலைமையான (இதற்கு புலிகளிடம் தன் உயிரைக்கொடுத்து நிரூபித்திருந்தார் ரஜனி திரணகம)ஆவணத்தை ஷோபாசக்தி முன்வைத்ததை கண்டுகொள்ளாமல்,ஷோபாசக்தியின் கருத்தை கேட்டு ஜெமோ தன் கருத்தை மாற்றியதாக நம்மவர்கள் வருத்தம் கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை!
தமிழர்கள் கொண்டாடும் எந்த ஆளுமைகள் குறித்தும் எதிராகவும், கட்டுடைத்தும் தொடர்ந்து எழுதிவரும் ஜெமோ அவ்வப்போது மலையாளிகளின் மேன்மையான பண்புகள் (இதுகுறித்து மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் நன்கறிவர்) கண்டு அடிக்கடி நெகிழ்ந்து, கண்ணீர்விட்டு, தொடர்ந்து போற்றிப் புகழ்வது வழக்கம்.
உலகின் எந்தவொரு பிரச்சினைக்கும் சளைக்காமல் கருத்து சொல்வதும், முல்லைப்பெரியாறு அணை பற்றிய கேள்விக்கு மட்டும் அதுபற்றி நிபுணர்கள்தான் கூறவேண்டும், எழுத்தாளன் என்பவன் எல்லாப்பிரச்சினை பற்றியும் பேச வேண்டியதில்லை என நாசூக்காகத் தவிர்த்துவிடுவதும் தெரிந்ததே!
ஆனால் ஒரு பெருந்துயரை, அதற்குச் சாட்சியாக லட்சக்கணக்கானோர் உலகெங்கும் இருக்க, அதுகுறித்த நியாயமான குறைந்தபட்ச தேடலின்றி, அப்படியெதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிடும் அளவிற்கு உலகில் எந்த மூலையிலும் தமிழர்களின் சுரணையுணர்வு ஒரேயளவானது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் என்று ஷோபாசக்தியைப் புறக்கணிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகள், ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்துக்குமே எதிராக தொடர்ந்து தன்தளத்தில் எழுதிவரும் ஜெமோவை அழைத்து, விருது கொடுத்து மகிழ்வதும், அவரோ இவர்கள் சொல்லும் கருத்துக்களை வெறும் ஒற்றைப்படையான கசப்புடன் கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் என்றே எடுத்துக் கொள்வதும் இனியும் தொடரும்!
தவிர, ஜெமோ இப்போது சிங்களவர்களின் தரப்பு நியாயம்(?!) குறித்துக் கவலைப்படுவதாகத் தெரிகிறது. "சிங்களவர்களின் தரப்பே பேசப்படாமல் இங்கே ஒலிக்கும் ஆவேசங்கள் நியாயமானவைதானா என்ற ஐயம் உண்மையிலேயே எனக்குள்ளது" - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜெமோ இல்லாதது பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு! இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்களின் தரப்பு நியாயம் பற்றி பேச ஒரு அறம் சார்ந்த எழுத்தாளன் அவர்களுக்கு கிடைக்காதது துரதிருஷ்டமே!
ஆக விரைவில் இப்படியொரு கேள்வி பதில் ஜெமோ தளத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அன்புள்ள ஜெ!
நான் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போரில் பங்குபற்றியவன். அங்கு திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. நான் அப்படி ஒரு சம்பவத்தையும் பார்க்கவில்லை. இதுபற்றி கோத்தாபாய ராஜபக்சேவிடம் கேட்டபோது அவரும் இதையே தெரிவித்தார். நான் இந்த பிரச்சினையில் நீங்கள் தலையிடவேண்டும்(?!) என்று சொல்லவில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறேன்.
- டென்சில் கொப்பேகடுவ
இந்த கோரிக்கையின் உண்மையை(?!) நான் ஏற்கிறேன். முள்ளிவாய்க்கால் குறித்து எனக்கும் பல குழப்பங்கள்! நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் அதுபற்றிக் கூறும்போது மிகவும் கசப்பான, ஒற்றைப்படையான #@%$%#...
http://umajee.blogspot.com/
Edited by அபராஜிதன், 06 July 2012 - 06:36 PM.
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
Posted 06 July 2012 - 07:46 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
Posted 06 July 2012 - 11:31 PM
(Source: Sooriyan - March 21, 2004)
Posted 06 July 2012 - 11:41 PM
Posted 07 July 2012 - 02:59 AM
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
"எனக்கு இந்த டீல் பிடிச்சு இருக்கு" ![]()