Jump to content

ஆண்டவரின் எச்சங்கள் பாகம் 07


Recommended Posts

பருத்தித்துறைக் கோட்டை.

பருத்தித்துறைக் கோட்டை இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருந்த ஒரு கோட்டை. இது கடலுக்குள் நீண்டிருந்த பாறைப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. இது இதன் அமைவிடத்தின் வடிவத்துக்கும் அளவுக்கும் பொருந்துமாறு கட்டப்பட்டதால், சிறந்த முறையில் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக அமையவில்லை .

இதன் அமைவிடம் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால், கோட்டையும் அதே வடிவத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு செங்கோண முக்கோண வடிவத்தைக் கொண்டிருந்த இக் கோட்டையின் நீளமான பக்கம் வடக்குப் பக்கம் உள்ள கடலை நோக்கியதாக இருந்தது. இக் கோட்டையின் தரைப் பகுதியை நோக்கியிருந்த மூலையில் இதன் ஒரேயொரு கொத்தளம் அமைந்திருந்தது. இதன் அளவு, வடிவம் என்பன காரணமாக இதன் உட்பகுதியில் கட்டிடங்களையோ அல்லது அறைகளையோ அமைப்பதற்கான இடவசதி இல்லை . இதன் மூன்று பக்கங்களிலும் கற்சுவர்களுக்கு உட்புறமாக மண் நிரப்பப்பட்டிருந்தது. இதன் மேற்பகுதிக்குச் செல்வதற்கான படிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

ஒல்லாந்தர்காலத்தில் வரையப்பட்ட தளப்படங்களின் அடிப்படையில் இதன் நீளமான பக்கம் ஏறத்தாழ 80 மீட்டர் (240 அடி) நீளம் கொண்டதாகக் காணப்படுகிறது. ஏனைய இரண்டு பக்கங்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக 42 மீட்டர் (140 அடி) நீளம் கொண்டவை. கடலை நோக்கிய இதன் பக்கத்தில் பீரங்கிகளுக்கான துளைகளோ அல்லது கொத்தளப் பாதுகாப்போ கிடையாது. ஏனைய இரண்டு பக்கங்களிலும் தரையை நோக்கியபடி ஒவ்வொரு துளைகள் உள்ளன. தரையை நோக்கிய கொத்தளத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு துளைகளாக நான்கு துளைகள் உள்ளன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

இந்தக் கோட்டை சம்பந்தமான புகைப்படங்களை யாராவது இணைத்துவிட்டால் நன்றியுடையவனாக இருப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.