Jump to content


Tamil Star News
Photo

மஹா யாகம்


  • Please log in to reply
54 replies to this topic

#41 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,262 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 May 2012 - 06:30 AM

ஒன்னுமே புரியலீங்க . எனக்கு தெரிஞ்சு ஏகாதசி திதீல சிவபெருமானை ( ருத்திரனை ) ஃப்ரீதி செய்ய இப்புடியான யாகங்களை முன்னாடி செஞ்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேங்க . ஏங்க ஐயப்பன் ஆயத்தில செய்றாங்க ? யாராச்சும் கொஞ்சம் புரியவைங்களேன் பிளீஸ்
:) :unsure: :unsure: .


க்கும்...
ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.
அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.
பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......
போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#42 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,951 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 17 May 2012 - 09:12 AM

க்கும்...
ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.
அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.
பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......
போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...


கூல்,கூல் ......தமிழ்சிறி....
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#43 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,833 posts
  • Gender:Female
  • Location:North America

Posted 17 May 2012 - 11:42 AM

க்கும்...
ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.
அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.
பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......
போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...



ஏனுங்க டமிழ் உப்பிடி புறுபுறுக்கிறீங்க? சகோதரிங்க கேட்டதிங்கத சொல்லுங்க பிளீஸ்!

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#44 தமிழச்சி

தமிழச்சி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,272 posts

Posted 18 May 2012 - 03:42 AM

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்
  • அலைமகள் and யோக்கர் like this
தமிழச்சி

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்

பின்னே பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்

பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்

மானே வடுகாய் வரும்

#45 பாகன்

பாகன்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 54 posts
  • Gender:Male

Posted 18 May 2012 - 03:52 AM

பலே பலே தமிழச்சி- விழிக்குமா எம் இனம் இனியாவது

Edited by பாகன், 18 May 2012 - 03:52 AM.


#46 Volcano

Volcano

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 905 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 18 May 2012 - 07:14 AM

தமிழிச்சி உங்கள் கேள்விகள் நியமானவைதான், நான் இதில் ஒன்றைத்தான் செய்துள்ளேன். இன்னுமொன்றும் செய்துள்ளேன்- வாக்கு போட்டேன் :),, மற்றவை ஒன்றும் செய்யாதபடியால் அவர்களை பற்றி கதைக்க கூடாது என்றால் கதைக்காமல் விடுகிறேன். ஆனால் முள்ளி வாய்க்கால் நினைவாக பிராத்தனை நடத்துவது வேறு, அது தொடர்பாக யாகம் செய்வது வேறு; சிலவேளைகளில் பிராமணர்கள்தான் இரண்டும் ஒன்று என்று சொன்னார்களோ தெரியவில்லை. அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

#47 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 18 May 2012 - 01:11 PM

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்


முழங்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானா தமிழச்சி?

முதலில் நாடு கடந்த அரசாங்கம் தன் மீதான நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கட்டும், பின் மக்களின் பங்களிப்பு பற்றி கதைக்கலாம். நீங்கள் மேற் கூறிய விடயங்களைச் செய்வதற்கு முதலில் மக்களுக்கு நம்பிக்கைகள் வரட்டும். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும், உறுப்பினர்களுடனும் தொடர்புகளை நா.க. அ. இன் எந்த அமைப்புகளுடனும் தொடர்பில்லாத சாதாரண மக்கள் வைத்திருப்பதற்கு, அவர்களது செயற்பாடுகள் மீதான நம்பிக்கைகள் அவசியம். இங்கு மகா யாகம் போன்ற மக்களை ஏமாற்றும் நிகழ்வுகளைச் செய்யும் அமைப்பு மீதும், அதனை ஆதரிப்பவர்கள் மீதும் எந்த அடிப்படையில் நம்பிக்கை வைப்பது?

உங்கள் கேள்விகள அனைத்தும், இந்த திரியில் சொல்லப்பட்ட எந்த அடிப்படைக் கருத்துகு பதில் தரவில்லை, மாறாக எம்முடன் இணைந்திருந்தால் மட்டுமே எம்மை கேள்வி கேட்க முடியும் என்ற திமிர்த்தனமாக மேட்டுக்குடி மனப்பாங்கு தான் தெரிகின்றது.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#48 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,096 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 18 May 2012 - 04:18 PM

உந்த வண்டி கரை சேராதென்று நாங்கள் சொல்லுகின்றோம்,நீங்கள் என்னடா என்றால் ஒருக்கா ஏறிப்பாருங்கோ என்கின்றீர்கள்.
ஈ பி டி பி யில் இருக்கும் ஒருவரும் உதே மாதிரி சொல்லலாம் .எங்களோடு முதலில் வந்து சேர்ந்து பாருங்கள் என்று .

#49 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,732 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 18 May 2012 - 05:19 PM

தமிழிச்சியின் அத்தனை கேள்விகளுக்கும் எனது பதில் ஆம்.
(அவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் உட்பட)
(முள்ளிவாய்க்கால் நினைவு நாளை மட்டும் புறக்கணித்திருந்தேன்.)

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#50 பாகன்

பாகன்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 54 posts
  • Gender:Male

Posted 18 May 2012 - 05:55 PM

பலே பலே! தமிழச்சி உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது - நீங்கள் என்ன நாடு கடந்த அரசாங்க உறுப்பினரா?

நிற்க, எழுதியிருக்கும் மற்றவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

தந்தை செல்வாவிற்கு இருக்கவில்லை ஜி.ஜி ல் நம்பிக்கை
ஜி.ஜி க்கு இருக்கவில்லை செல்வாவில் நம்பிக்கை
இவர்கள் வழி வந்த அமிருக்கிருக்கவில்லை பிரபாவில் நம்பிக்கை
பிரபாவிற்கு இருக்கவில்லை அமிரிலும் உமாவிலும் நம்பிக்கை

இவ்வாறு இந்த நம்பிக்கையீன டி.என்.ஏ. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இதில் எழுதும் மற்றவர்களிடமும் வந்துவிட்டதா?

அல்லது இவர்களிடம் தன்னம்பிக்கையே இல்லையா? - ஏங் கேக்கிறேன்னா தன்னம்பிக்கை என்னு ஒண்ணு இருந்தாத்தாங்க மத்தவங்க மேலயும் அவங்க பண்ற காரியங்க மேலயும் நம்பிக்கை வரும்

ஒருவர ஒருவர் சீண்டிறத உட்டிட்டு இனியாவது கொஞ்சம் புரிஞ்சுக்க பாருங்க ஜனங்களே! புரிஞ்சுக்குவீங்களா? - அப்படி புரிஞ்சுப்பீங்கன்னா நம்ம இனம் உருப்படும்.

#51 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 18 May 2012 - 06:27 PM

முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்தமிழ் மக்களுக்காக, கோவில்களில் பூசைகள் நடக்கிறது. அங்கே மாண்டுபோன மக்களுக்காக ஆத்மசாந்திப் பூசைகள் நடக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் யாகம் நடக்கிறதே அது தான் ஏன் என்று தெரியவில்லை ! கனடாவில் தம்மை நாடு கடந்த அரசின் பிரமுகர்கள்...

என்று கூறிக்கொள்வோர் சிலர், முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்காக ருத்திர மகா யாகம் ஒன்றை நடத்தியுள்ளனர் என்ற செய்தி பரவலாக அடிபடும் விடையங்களில் ஒன்று. அது சரி இதில் என்ன பிழை இருக்கிறது என்று நீங்கள் கேட்க்கலாம். சைவநெறியில், வரங்களை அல்லது யோகங்களை வேண்டி நடத்தப்படுவதே யாகம் என்று அழைக்கப்படுகிறது.

யாகம் என்றால் தீ மூட்டி மந்திரங்களை ஜெபித்து, ஒரு கடவுளை வேண்டி நடத்தப்படுவது என்று பொருள். இதனைச் செய்வதன் மூலம் ஒருவர் வேண்டும் பலன் கிட்டும் என்பது ஐதீகம். இறந்த மனிதர்களுக்கு பிண்டம் வைத்து, அவர்களுக்கான பிதுர் கடன் கழிப்பது, இல்லையேல் மோச்ச அரிச்சனை செய்வதும் ஒருவகை.


இல்லாது போனால் ஆத்மசாந்திப் பிரார்த்தனை- பூஜைகள் நடத்தி இறந்தவர்கள் சொர்க்கம் செல்லவேண்டும் எனப் பூஜிப்பது இந்து சமய வழிமுறையாகும். ஆனால் இறந்த மனிதர்களுக்கு யாகம் நடத்துகிறோம், அதுவும் ஏகாதச உருத்திர யாகம் என்பது வரைமுறையில் இல்லாத ஒன்று. ருத்திரா என்றால் சிவன் என்று பொருள்படும்.

ஆனால் இங்கே ருத்திரா என்று நாடு கடந்த தமிழீழ அரசு எதனைக் குறிப்பிடுகிறது என்று தான் எனக்குத் தெரியவில்லை. யாகம் நடத்தினால் வரங்கள் கிடைக்கும் ! யோகங்கள் கிடைக்கும் ! மழை வரும் ! அரக்கர்கள் கூட யாகம் செய்து அழியா வரம் பெற்றனர் ! ஆனால் தற்போது யாகம் செய்தால் சர்வதேச சுயாதீன விசாரணை வருமா ? அது தான் கேள்வியாக உள்ளது ! இறந்த மக்களுக்கு ஆத்மசாந்திப் பூஜைகளை நடத்தினால், அதுவே நன்மை பயக்கும்.

அதை விடுத்து ருத்திர யாகம் நடத்தினோம், ஏகாதச யாகம் நடத்தினோம் என்று அறிக்கை விடுவதன் மூலம் சைவப் பெருமக்களையும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் தம்பக்கம் இழுக்க நாடு கடந்த அரசு மேற்கொள்ளும் முயற்சியாக இது இருக்கிறது என்ற சந்தேகமே வலுக்கிறது. இதனையே சுட்டிக்காட்ட நாம் விரும்புகிறோம்.

மதத்தின் பெயரால் இல்லையேல் கடவுளின் பெயரால், சாதாரண மனிதர்களை தம்வசப்படுத்துவது ஈனர்கள் செய்யும் செயலாகும். அதிலும் ஆகமங்கள் போதிக்கும் தர்மங்களை விடுத்து, சைவசமயத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இறந்த மக்களுக்கு யாகம் செய்தோம் என்று இவர்கள் தெரிவிப்பது படு முட்டாள் தனமான காரியம் ஆகும்.

இது கடவுளுக்கே அடுக்காத காரியம் என்று நான் கருதுகிறேன். ஒரு இடத்தில் கூட்டம் வைத்தால் அதில் மக்கள் அதிகம் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தால், ஒரு நமீதாவையோ இல்லை புன்னகை அரசி சினேகாவையோ அழைத்து கூட்டத்தை களைகட்ட வைப்பது இல்லையா ! அதுபோல தமது பெயர் ஓங்கவேண்டும் என்பதற்காக சைவநெறிகளை மீறிச் செயல்படும் எவரை நான் கண்டிக்கத் தயங்குவதே இல்லை.

அதனால் அதிர்வுக்கு இக் கடிதத்தை எழுதுகிறேன். இதனைப் பிரசுரிக்குமாறு வேண்டி நிற்கிறேன். சைவச் சித்தர்கள், புரோகிதர்கள் இல்லையேல் ஆகமம் தெரிந்தவர்கள் நான் எழுதியது பிழை என்று நினைத்தால், இல்லையேல் கருத்து வேறுபாடுகள் இருந்தால் என்னை கீள் காணும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பின் குறிப்பு:

யாகங்கள் 21 வகைப்படும்:

அவையாவன , அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசம், வாசபேயம், அத்திசாத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிதோத்திரம், தரிசுபூரணமாசம், சாதூர்மாசியம், நிரூடபசுபந்தம், ஆக்கிரணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிரார்த்தம், சிரவேணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆசுவயசு என்னும் இருபத்தொன்றுமாம். இதில் ருத்திர யாகம் என்று உண்மையில் ஒன்றும் இல்லை. இல்லாத யாகத்தை ஏன் நடத்தவேண்டும் ?


இவ்வன்: ஸ்ரீல ஸ்ரீ சங்கர நந்தித சுவாமிகள்(அடையார்- சென்னை)

No 2 First Street, Bhaktvatsalam Nagar, Adyar, Chennai.600020. இங்கே நந்தித சுவாமிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள். சைவநெறிகள் தெரிந்த சுவாமிகளின் கருத்தை நாம் பிரசுரித்துள்ளோம்.

http://eutamilar.eu/tamils/index.php/3725-2012-05-15-03-25-55

நன்றி : ஈ யூ தமிழர் . ஈ யூ .
  • நிழலி and யாயினி like this

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#52 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,951 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 19 May 2012 - 08:11 AM

போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு!
பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.

சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள். மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.

சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.


பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?
சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.

சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.

எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.

சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.

•முற்றும்

_____________________________________________________

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1
நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2
நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3
நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4
நித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காராரா? பாகம் 5
போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம்
6http://www.vinavu.com/2012/05/18/nithyananda-madurai-pontiff-issue-6/
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#53 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,951 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 19 May 2012 - 08:16 AM

தலைவருக்கும் எண்ணிலடங்காத மாவீர்களுக்கும்,எனைய ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும் யாகம் செய்து ஈழம் எடுக்கலாம் என்று தெரியாமல் போய்விட்டது....
  • குமாரசாமி, வல்வை சகாறா, நிழலி and 1 other like this
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#54 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,985 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 19 May 2012 - 10:44 AM

இவற்றில் இருந்து என்ன அறியக் கூடியதாக இருக்கிறது... பாதிக்கபட்ட மக்களின் பெயரைப் பாவித்து இல்லாதவற்றை புகுத்தியாவது தங்கள் பெயர்களில் சுயலாபங்களை தேடிக்க கொள்ள முயற்சிக்கிறார்கள் அவ்வளவு தான்..

Edited by யாயினி, 19 May 2012 - 10:45 AM.

  • வல்வை சகாறா and நிழலி like this

 

நட்புடன்......யாயினி.

 


#55 பாகன்

பாகன்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 54 posts
  • Gender:Male

Posted 23 May 2012 - 04:08 AM

யாகம் செய்வது சரியா தவறா என்று விவாதிப்பதை விடுத்து அநியாயமாகவும் மிலேச்சத்தனமாகவும் கொல்லப்பட்ட எம் மக்களின் ஆன்ம சாந்திக்கான ஒரு பிரார்த்தனை என்று அதனைப் பார்க்கலாமே!

எங்கள் குடும்பத்தில் ஒருவர் தவறி விட்டால் இவ்வாறான ஆன்ம சாந்திப் பிரார்த்தனைகளில் நாம் ஈடுபடுவதில்லையா?

ஓரிருவரின் மரணத்திற்கே ஆன்ம சாந்திப் பிரார்த்தனைகள் செய்யும் நாம், ஒரே நேரத்தில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட இலட்சக் கணக்கான ஆன்மாக்கள் சாந்தியடைவதற்கு யாகம் செய்து பிரார்த்திப்பதில் என்ன தவறைக் கண்டு விட்டீர்கள்.

நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள் என்றால் அவர்கள் நாத்திகர்களாகத் தான் இருக்க வேண்டுமா?

Edited by பாகன், 23 May 2012 - 05:00 AM.

  • குண்டன் likes this




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]