Jump to content


Orumanam
Photo

திமுக, அதிமுக புறக்கணிப்பு - தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிருப்தி!


 • Please log in to reply
4 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 16 April 2012 - 01:44 PM

Posted Image
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்பிக்கள் குழு இன்று இலங்கை செல்கிறது. இந்த குழுவில், அதிமுகவை தொடர்ந்து திமுகவும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் பங்கேற்காதது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
"இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவிற்கு பாஜ கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமை வகிக்கிறார். காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவும் அதிமுகவும் அக்குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மொத்தம் 6 நாள் பயணத்தின் போது, தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிடுகிறார்கள். வீடு கட்டும் திட்டம், ரயில்வே பணிகள், துறைமுக மேம்பாட்டு பணிகளையும் பார்வையிடுகிறார்கள். இலங்கை எதிர்கட்சி தலைவர்கள், தமிழ் எம்பிக்கள் உள்பட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்கள். தமிழர் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்கள்."வ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
அதிமுகவும், திமுகவும் புறக்கணித்துள்ள நிலையில், சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு 21ம் தேதி வரை 6 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை எம்.பி.க்கள் சந்தித்து பேசுவார்கள். இலங்கை செல்ல உள்ள தமிழக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,457 posts
 • Location:அகண்ட வெளி

Posted 16 April 2012 - 02:00 PM

அதுதானே அப்பிடியே கொழுப்பில இருக்கும் ஒரு பண்சாலையில ஓசியா தன்சலவும் தராங்களாம் அப்பிடியே போய் நக்கிட்டு வாறது.
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 April 2012 - 02:40 PM

இந்த பிரயாண முடிவில், காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து மேலும் அந்நியப்படுத்தப்படும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 17 April 2012 - 03:39 AM

அதுதானே அப்பிடியே கொழுப்பில இருக்கும் ஒரு பண்சாலையில ஓசியா தன்சலவும் தராங்களாம் அப்பிடியே போய் நக்கிட்டு வாறது.


வாயை பாத்தால் இவன் பாண் விலையை இன்னொரு பத்து ரூபா ஏத்தாமல் வெளிக்கிடமாட்டான் போல கிடக்கு. 

நேரு குடும்பத்தின் எச்சில் இலையை நக்கும் நாய். 
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#5 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,684 posts

Posted 17 April 2012 - 06:56 AM

மேலும் இருவர் இலங்கைக்கு செல்லாமல் விலகி இருக்கிறார்கள். ஐக்கிய ஐனதாதளம் கட்சியைச் சேர்ந்த சிவானந்த திவாரி, திரிமூல் காங்கிரசின் சுதன்சு ரஞ்சன் - இன்று வெளியான தினந்தந்தி பத்திரிகை சென்னைப் பதிப்பகம்(பக்கம் 3)
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]