கொண்டைக் கடலைச் சுண்டல்

தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை- 500g
வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1
பச்சை/ செத்தல் மிகளாய்-2
கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10
கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப
இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவைகேற்ப
தேசிக்காய்ப் புளி- தேவைகேற்ப
எண்ணெய்- 3 மேசைக் கரண்டி
செய்முறை:
1) சூடான சட்டியில், சிறிதாக வெட்டியா வெங்காயத்தை எண்ணியில் போட்டு தாழிக்கவும்.
2) அதனோடு உப்பு, கருவேப்பிலை, மிளகாய், கடுகு, சீரகம், இஞ்சி, உள்ளி இவற்றையும் கலந்தது 1 நிமிடம் குறைந்த வெப்பத்தில் விட்டு தாழிக்கவும்.
3) கொண்டைக் கடலையை கலவையுடன் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கலந்து இறக்கவும்.
4) இறுதியில், தேசிக்காய்ப் புளி, மல்லி இலை இவற்றைச் சேர்க்கவும்.
(ஊரில் அம்மா செய்யும் போது தேங்காய்த் துண்டுகளும் சேர்த்து செய்வதுண்டு... இங்கே தேங்காய்த் துண்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளது...

















