Jump to content

Tamil Star News
Photo

கொண்டைக் கடலைச் சுண்டல்

  • Please log in to reply
18 replies to this topic

#1 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 03:49 PM

பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது.

கொண்டைக் கடலைச் சுண்டல்

Posted Image

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை- 500g
வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1
பச்சை/ செத்தல் மிகளாய்-2
கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10
கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப
இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவைகேற்ப
தேசிக்காய்ப் புளி- தேவைகேற்ப
எண்ணெய்- 3 மேசைக் கரண்டி

செய்முறை:

1) சூடான சட்டியில், சிறிதாக வெட்டியா வெங்காயத்தை எண்ணியில் போட்டு தாழிக்கவும்.
2) அதனோடு உப்பு, கருவேப்பிலை, மிளகாய், கடுகு, சீரகம், இஞ்சி, உள்ளி இவற்றையும் கலந்தது 1 நிமிடம் குறைந்த வெப்பத்தில் விட்டு தாழிக்கவும்.
3) கொண்டைக் கடலையை கலவையுடன் சேர்த்து
2 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கலந்து இறக்கவும்.
4) இறுதியில், தேசிக்காய்ப் புளி, மல்லி இலை இவற்றைச் சேர்க்கவும்.

(ஊரில் அம்மா செய்யும் போது தேங்காய்த் துண்டுகளும் சேர்த்து செய்வதுண்டு... இங்கே தேங்காய்த் துண்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளது... :()
  • நிழலி and தமிழ் சிறி like this
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

Advert

#2 சுஜி

சுஜி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,939 posts
  • Gender:Female
  • Location:london

Posted 15 April 2012 - 03:52 PM

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி
நட்புடன்
சுஜி

#3 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,843 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 15 April 2012 - 03:58 PM

குட்டி,
கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.

#4 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 04:10 PM

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...
சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#5 சுஜி

சுஜி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,939 posts
  • Gender:Female
  • Location:london

Posted 15 April 2012 - 04:14 PM

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...
சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..
நட்புடன்
சுஜி

#6 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 04:21 PM

குட்டி,
கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

அக்கா, ஊரில் கொண்டைக் கடலை என்று தான் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன்.. ஒரு வேளை இது பேச்சு வழக்காக கூட இருக்கலாம் என்று இணையத்தில் தேடினேன்..
http://ta.wikipedia....i/கொண்டைக்_கடலை

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி சேர்த்துப் பாருங்க, வாமிட் வாராது சுஜி... :lol:
சரி சரி நீங்கள் இஞ்சியைத் தவிர்த்து செய்து பாருங்கள்.. :)

Edited by குட்டி, 15 April 2012 - 04:18 PM.

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#7 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,024 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 15 April 2012 - 04:42 PM

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#8 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 04:59 PM

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:

ரதி எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை குறைவு... ^_^
நீங்கள் சொல்வது போல் தேங்காய்ச் சொட்டு சேர்த்தல் நன்றாகத் தான் இருக்கும்! :)

கடலைவகைகளை சரியாக ஊற வைக்காமல்/அவிக்காமல் சாப்பிட்டால் அதில் நச்சுத்தன்மை ஊறுமென கேள்விப் பட்டுள்ளேன்.

red kidney beans ல் நச்சுத் தன்மை அதிகம் இருப்பது என்பது உண்மை..

http://www.foodrefer...npoisoning.html

கறுப்பி இப்போ இதைவிட திறமான கடலை போடுவார்... ச்சீ!!! சாப்பிடுவார்... :D
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#9 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,316 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 15 April 2012 - 05:32 PM

இணைப்புக்கு நன்றி குட்டி,
நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

Posted Image

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
#10 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 05:53 PM

இணைப்புக்கு நன்றி குட்டி,
நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

Posted Image

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)

கருத்துக்கு நன்றி தமிழரசு :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#11 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,657 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 15 April 2012 - 06:12 PM

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#12 சுஜி

சுஜி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,939 posts
  • Gender:Female
  • Location:london

Posted 15 April 2012 - 06:35 PM

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு..:icon_mrgreen: :icon_mrgreen:

Edited by சுஜி, 15 April 2012 - 06:39 PM.

நட்புடன்
சுஜி

#13 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 15 April 2012 - 06:38 PM

குட்டி
butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

#14 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 15 April 2012 - 06:47 PM

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு.. :icon_mrgreen: :icon_mrgreen:

பாசப் பறவைகளின் ரவுசு தாங்க முடியலடா சாமி... :lol: :D

குட்டி
butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

இன்று வரை butter beans ல் செய்து பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுகிறேன், உங்கள் கருத்திற்கும் நன்றி தப்பிலி! :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#15 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,675 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 15 April 2012 - 11:49 PM

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"

#16 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,251 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 16 April 2012 - 02:31 AM

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#17 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,317 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 16 April 2012 - 02:36 AM

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.
இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.
இணைப்பிற்கு நன்றி குட்டி.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#18 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 16 April 2012 - 07:18 PM

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

ஊரில் இருக்கும் போது பின்னேரப் பொழுதில் தேநீரோடு அம்மா செய்வதுண்டு... ஆரம்பத்தில் தினமும் கேட்டுச் சாப்பிடுவோம் :wub: எங்கட வீட்டில attached பாத்ரூம் இருந்ததால அடிக்கடி அம்மா கடலை செய்வதை குறைச்சிட்டா... :lol: :D

உங்கள் கருத்திற்கும் நன்றி கு.சா அண்ணா :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#19 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 16 April 2012 - 07:34 PM

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

உண்மை தான் நுணா... எமது குடும்ப நண்பர்கள் நவராத்திரி 9 நாளும் அவர்கள் வீட்டில் உள்ள சிறிய கோவிலில் பூசை செய்வார்கள். பின்னேரம் இரண்டு மணியில் இருந்தே அக்கம் பக்கத்தில் இருக்கும் அன்டிமார் எல்லாரும் வந்து எல்லாவிதாமா பலகாரங்களும் செய்வார்கள் பூசை முடிய அதனைப் பகிர்ந்து எல்லார் வீட்டிற்கும் அனுப்புவார்கள்.. அதில் எனக்கு கடலையும், மோதகமும் தான் பிடிக்கும்... அதன் ருசியே தனி! :wub: ஒரு தடவை அந்த அன்டி பிள்ளையார் மோதகம் என்று ஒன்று எனக்கென்று தந்தவ.... :D உங்கள் கருத்திற்கும் நன்றி நுணா! :)

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.
இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.
இணைப்பிற்கு நன்றி குட்டி.

நானும் வேறு இடங்களில் கடலை சாப்பிடுள்ளேன், இஞ்சி உள்ளி இருந்ததாகத் தெரியவில்லை... ஆனால் இங்கட இம்சை தாங்க இல்லாமல் தான் அம்மா இஞ்சி உள்ளி சேர்த்தாவோ தெரியாது... நன்றாக அரைத்துப் போடவேண்டும், அப்போது தான் கடிபடாது...உங்கள் கருத்திற்கும் நன்றி சிறி அண்ணா! :)

Edited by குட்டி, 16 April 2012 - 07:35 PM.

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]