Jump to content


Orumanam
Photo

இந்தியா, அமெரிக்காவிற்கு பயணமாகிறது கூட்டமைப்பு!


 • Please log in to reply
2 replies to this topic

#1 chinnavan

chinnavan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,714 posts
 • Gender:Male

Posted 15 April 2012 - 05:49 AM

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வ தேசத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள் வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங் களை மேற்கொள்ளவுள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் பயணங்களாக இந்தப் பயணங்கள் அமையும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.கூட்டமைப்பின் குழுவினர் தலைவர் சம்பந்தன் தலைமையில் மே மாத இறுதி யில் இந்தியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு அவர்கள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்தித்து இலங்கை இனப்பிரச் சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகளில் ஈடுபடவுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சி னைக்கான தீர்வை விரைவுபடுத்துவது தொடர்பில் இந்தப் பேச்சுகளில் ஆராயப் படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இலங்கை அரசின் இழுத்தடிப்புகளால் சின மடைந்துள்ள கூட்ட மைப்பு இந்தியத் தலை மைகளுட னான சந்திப் பின்போது இலங்கை அரசு மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு இந்தியாவிடம் கோரும் எனவும் கூறப்படுகிறது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்திப்பதாக உள்ளபோதும் அவர்கள் அங்கு யார் யாரைச் சந்திப்பர் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதும் தமிழரசுக் கட்சியின் மாநாடு மட்டக்களப்பில் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் கூட்டமைப்பின் குழு மீண்டும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறது. அங்கு அமெரிக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்படப் பலரை இவர்கள் அங்கு சந்தித்துப் பேசுவர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இனப்பிரச்சினை விடயத்தில் அது தொடர்ந்தும் ஒரு இழுத்தடிப்புப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதுகுறித்துக் கூட்டமைப்பின் தலைமை அரசிடம் பல தடவைகள் வற்புறுத்தியபோதும் அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. இதனை அடுத்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் முதற் கட்டமாக கூட்டமைப்பின் குழு மே மாத இறுதியில் இந்தியாவுக்கும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கும் பயணமாக உள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறின.

http://thaaitamil.com/?p=15739

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
 


ninaivu-illam

#2 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,454 posts
 • Location:அகண்ட வெளி

Posted 15 April 2012 - 06:49 AM

ஜுன் ஜூலையில் ஒரு பயணம் பினர் அக்டோபர் நவம்பரில் ஒரு பயணம், அத்தோடு இன்னொரு ஆண்டு பூர்த்த்யாகிடும்.

இப்பிடியே இழுத்துக்கொண்டு போனால் சம்பந்த்ரையாவும் போச்செர்ந்திடுவார்... தமிழருக்கு தீர்வு கிடைக்காமலே போய்விடும்.


**********செய்வதை இன்றே செய் அதை நான்கே செய்*********
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 April 2012 - 02:36 PM

சிங்களத்துடன் பேசுவதை விட இவ்வாறான நகர்வுகள் கூடுதல் பலனை தமிழர் தரப்பிற்கு தரும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]