Jump to content

Orumanam
Photo

ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு

 • Please log in to reply
15 replies to this topic

#1 meerabharathy

meerabharathy

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 88 posts
 • Gender:Not Telling
 • Interests:தியானம் /பிரக்ஞை /அரசியல் /சமூகமாற்றம்

Posted 13 April 2012 - 01:04 PM

நட்புடன்....
நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது....மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர தேசிய வாதிகளும் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகளை புரிந்து: கொள்வது அவசியமானது என்றே கருதுகின்றேன்...
இதுவே நாம எழுந்தமானமாகவும ;தன்னியல்பாகவும ;செயற்படாது சரியான திசைவழி நோக்கி செயற்படுவதற்கான பாதையை உருவாக்கும்...

இந்தவகையில் அண்மையில் சேரன் அவர்கள் ஐ.நா வும ;புலம் பெயர்ந்த தமிழ ;பேசும் மனித்ரகளின ;போராட்டம் தொடர்பாகவும ;எழுதிய கட்டுரை முக்கியமானது என்றே ;நினைக்கின்றேன்....
இதற்கு ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் மதிக்கப்படலாம் ஆனால் வெறுமனே தேசியவாத அடிப்படையிலான ;தர்க்கம் மட்டுமே;....
நேற்றைய கலந்துரையாடல் தொடர்பாக குறிப்பு எழுத ;விருப்பம் ஆனால் நேரம் போதாமையும் மற்றது தவறாக எழுதக் கூடாது எ;னபதால் ஒரு தயக்கம்....
நன்றி
நட்புடன் மீராபாரதி

ஒவ்வொரு மனிரும் பிரக்ஞையுடன் செயற்படும் பொழுது நமது செயற்பாடுகள் முழுமையாகவும் பொறுப்புதன்மையுடனும் நடைபெறும். இதுவே கூட்டுப்பிரக்ஞையான ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆகவே நம் எல்லாவிதமான செயற்பாட்டிற்கும் சமாந்தரமாக , நம் பிரக்ஞையை வளர்ப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்வோம்.
நன்றி.
நட்புடன்
மீராபாரதி
பிரக்ஞை
http://meerabharathy.wordpress.com/

ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 01:47 PM

மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.சீனாவோ இல்லை உருசியாவோ இல்லை கியூபாவோ கூட தமிழர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கலாம். ஆனால், எமது மக்கள் அமெரிக்காவின் செய்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றனர். காரணம் எம்மைப்பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களில் அவர்கள் அழித்தவர்களுக்குள் மேலானவர்களாக தெரிகின்றார்கள்.

மேற்குலகம் மீது ஒரு சேற்றை பூசினால் சோசலிச நாடுகள் மீது நூறு சேற்றை பூசலாம்.

Edited by akootha, 13 April 2012 - 01:48 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 01:55 PM

இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர தேசிய வாதிகளும் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகளை புரிந்து: கொள்வது அவசியமானது என்றே கருதுகின்றேன்...

இதுவே நாம எழுந்தமானமாகவும ;தன்னியல்பாகவும ;செயற்படாது சரியான திசைவழி நோக்கி செயற்படுவதற்கான பாதையை உருவாக்கும்...அயர்லாந்தில் இருந்து பல நல்ல கருத்துக்களை முன்வைக்கும் லால் பெர்னாண்டோவை விட இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பலரும் இவ்வாறானவர்களுடன் இணைந்து சில செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடும்.
 • meerabharathy likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#4 உடையார்

உடையார்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,694 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 13 April 2012 - 03:02 PM

சந்திரிக்காவின் மாமன் Dr Brain Seneviratna இளையோர் அமைப்பை உருவாக்கி பல அலுவல்கள் செய்து கொண்டிருக்கிறார்,

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#5 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,593 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 13 April 2012 - 04:46 PM

தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்தமையால் சிறிலங்காவுக்கு செல்ல முடியாமல் இந்தியாவில் தங்கி இருக்கும் நிமல்கா பெர்னாண்டோஉணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#6 meerabharathy

meerabharathy

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 88 posts
 • Gender:Not Telling
 • Interests:தியானம் /பிரக்ஞை /அரசியல் /சமூகமாற்றம்

Posted 13 April 2012 - 05:04 PM

சில குறிப்புகள்.
முதலாவது "நீங்கள் சிறிலங்கனா" என யாராவது கேட்டால்" ...
" சிறிலங்கள் பாஸ்போட் வைத்திருப்பவர்?"
என்ற பதிலையே கூறுவேன். ஏனனில் என்னை சிறிலங்கனாக அடையாளம் காணுவது என்பது....
இந்த அடையாளத்தினால் அடக்கப்பட்டுப் பாதிக்கப்படுகின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரானதாகவே இருக்கும்....
ஏனெனில் "சிறி" என்ற சிங்கள சொல் லங்கா அல்லது இலங்கை என்ற நாட்டை சிங்கள நாடாக அடையாளப்படுத்துகின்ற ஒரு சொல்.
இப்பொழுது புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்கள் தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளா....அல்லது அதன் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களா எவ்வாறு எம்மை நாம் அடையாளப்படுத்துவோம்?)

இரண்டவாது
(ஒரு நண்பர் குறிப்பிட்டதுபோல் இது இலங்கையில் நடைபெற்றது இனக் கலவரம் அல்ல...தமிழினத்தின் மீதான தாக்குதல்கள்...தமிழின அழிப்பு ....என்பதே சரியானதாகும்) இவ்வாறு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடைபெற்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரான கலவரங்களின் போதெல்லாம் இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மனிதர்களை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குத்தான் கப்பல்களிலும் புகையிரதங்களிலும் அனுப்பினார்கள்....அப்படி எனின் வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம் தானே.....இவ்வாறான உணர்வை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த ;தமிழர்களுக்கும் ஊட்டியது சிங்கள இனவாத அரசுகள் தனே.....இவ்வாறு ஒரு தமிழர் தன்னிடம் கூறியதிலிருக்கின்ற உண்மைத்தன்மையை எடுத்துக் கூறினார்.

மூன்றவாது....
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப ;பார்வையிட வந்த அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற இத் துறைமுகத்ததை அவர்களை; அழிப்பதன் மூலமே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற முன்மொழிவை ;வைத்ததாக குறிப்பிட்டார்.

நான்காவது
முள்ளிவாய்க்காளின் இறுதிநேரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதற்குப ;பதிலாக தாம் கேடயங்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை விடுவிக்க கோருகின்ற தீர்மானத்தையே ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததாக குறிப்பிட்டார்...
மக்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்கு நாடுகள் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தன....

சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை.....ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.

அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்.....ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது......

இக் குறிப்புகளை எனது மதிய இடைவேளiயின் பொழுதே எழுதுகின்றேன்.....
ஒவ்வொரு மனிரும் பிரக்ஞையுடன் செயற்படும் பொழுது நமது செயற்பாடுகள் முழுமையாகவும் பொறுப்புதன்மையுடனும் நடைபெறும். இதுவே கூட்டுப்பிரக்ஞையான ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆகவே நம் எல்லாவிதமான செயற்பாட்டிற்கும் சமாந்தரமாக , நம் பிரக்ஞையை வளர்ப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்வோம்.
நன்றி.
நட்புடன்
மீராபாரதி
பிரக்ஞை
http://meerabharathy.wordpress.com/

#7 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 05:40 PM

பகிர்வுக்கு நன்றிகள்.

சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை.....ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.அரபுநாடுகளில் நடந்த/நடக்கும் படுகொலைகள் ஒரு இனமே தனது இனத்தை அழிப்பது. சிங்கள இனமோ அழித்தது தமிழினத்தை.

அரபுநாட்டு மக்களுக்காக பேச பல அரபுநாடுகள், அரபு லீக் உள்ளன. அதனால் அரபு மக்கள் வீதியில் இறங்கி போராடும் தேவை இல்லை. எமக்காக ஒரு நாடும் இல்லை.

அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்.....ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது......சின் பெய்ன் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்படவில்லை. மேலும், பல அமெரிக்க அரசியல்வாதிகள், சானாதிபதிகள் (கிளிண்டன், ரீகன்) என பலம் கொண்ட வலையமைப்பை ஐரிஸ் மக்கள் கொண்டுள்ளனர்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#8 meerabharathy

meerabharathy

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 88 posts
 • Gender:Not Telling
 • Interests:தியானம் /பிரக்ஞை /அரசியல் /சமூகமாற்றம்

Posted 13 April 2012 - 09:08 PM

மேலும்...
தாம் எவ்வாறு சிங்கள தேசிய வாதிகளாக வளர்க்கப்பட்டார் என்பதையும் எவ்வாறு தம் ஆழ்மனங்களிலில் பதியவைத்த கருத்துக்களை கொண்டு அப்பபப்ப தமது இனவாத செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முன்னெடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக இன்னுமொன்றையும ;குறிப்பிட்டார் தமிழ் மக்களின சுயநிர்ணையத் திற்கான விடுதலைப் போராட்டத்தில் வெற்றியினல் தான் சிங்கள மக்களின ;ஜனநாயக சமூக விடுதலையும ;தங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டார்.
இறுதியாக மிகவும் தாழ்மையாக ஆனால் உறுதியாக புலம பெயர்ந்த தமிழ் பேசும ;மக்களின் ஜெனிவா பிரகடனம் தொடர்பான ஆதரவு செயற்பாட்டை விமர்சித்தார்.
ஜெனிவா பிரகடனம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
மாறாக ;சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதமான ஒரு செயற்பாடே என்றார்.

இந்த இடத்தில்தான் புலம் பெயர்ந்த அமைப்புகளின் உணர்ச்சிகரமான போரடங்கள் தொடர்பான விமர்சனம் எனக்கும ;தனிப்பட உண்டு. இது இப்பொழுது நடந்த ஐ.நா ;ஆதரவுப் போராட்டங்களாயினும் சரி 2009 களில ;மேற்கொள்ளப்பட்ட புலிக் கொடியுடனான போராட்டங்களாயினனும் சரி அவை அரசியல்; அடிப்படையற்ற போராட்டங்களே.
நாம் மீண்டும் மீண்டும் நமது அரசியல ;கோரிக்கைகளை முன்னிநறுத்தாது மேலெழுந்தமானமாக போராட்டங்களை முன்னெடுப்பது நமது எதிர்மறையான விளைவுகளையெ கொண்டுவருகின்றன என்பதை நாம் புரிவதில்லை.

இந்தடிப்படையில்தான் ஆபிரிக்க தலைவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அவர்கள் புலம் பெயர் தேசங்களில் புலிக்கொடி மற்றும் புலிகள் சார்பு போராட்டங்களுக்கு மாறாக மக்களினதும் மற்றும் அரசியல ;கோரிக்கைகளையும ;முதன்மைப் படுத்தி போராடும் படி கேட்டுள்ளார்கள். ஆனால் ஈழததில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில ;அக்கறையற்ற புலம ;பெயர்ந்த தமிழ தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறான நிலையில ;தமக்கு ஒன்றும ;செய்ய முடியாது என ஆபிரிக்க ;தலைவர்கள் கூறியதாக நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்றார்கள்.ஆகவே புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம் இயக்க கட்சி சார்பு அரசிலை கொஞ:சம் புறம் தள்ளிவதை;து விட்டு தமிழ ;மக்களின் அரசியல ;அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தே புலம பெயர் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும ;என்பது எனது அபிப்பிராம்.

2008/09 களில் புலம் பெயர் தேசம் சரியான அரசியல ;கோரிக்கைகளையும் இலங்கை அரசை மட்டும்ல்ல புலிகளையும் போரை ;நிறுத்தக ;கூறி மட்டுமல்ல ஆயுதப ;போர்hட்டத்தை நிறுத்துப் படி வேண்டுகோள் விடுத்திருந்தோம என்றால் சிலவேளைகளில் பல ;நன்மைகள் கிடைத்திருக்கலாம். ஆனால ;நாம் தொடர்ந்தும ;பாடம் படிக்காது அரசியல ;தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றோம் என்பது நமது விடுதலைப் போராட்டத்தில் துர்ப்பாக்கிய நிலையாகும்.
ஒவ்வொரு மனிரும் பிரக்ஞையுடன் செயற்படும் பொழுது நமது செயற்பாடுகள் முழுமையாகவும் பொறுப்புதன்மையுடனும் நடைபெறும். இதுவே கூட்டுப்பிரக்ஞையான ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆகவே நம் எல்லாவிதமான செயற்பாட்டிற்கும் சமாந்தரமாக , நம் பிரக்ஞையை வளர்ப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்வோம்.
நன்றி.
நட்புடன்
மீராபாரதி
பிரக்ஞை
http://meerabharathy.wordpress.com/

#9 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 10:54 PM

இறுதியாக மிகவும் தாழ்மையாக ஆனால் உறுதியாக புலம பெயர்ந்த தமிழ் பேசும ;மக்களின் ஜெனிவா பிரகடனம் தொடர்பான ஆதரவு செயற்பாட்டை விமர்சித்தார்.
ஜெனிவா பிரகடனம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
மாறாக ;சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதமான ஒரு செயற்பாடே என்றார்.அப்படியானால்,
ஏன் அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது? ஏன் இராஜாங்க செயலாளர் உட்பட பல அமெரிக்க பிரதிநிதிகள் தீர்மானத்திற்கு ஆதரவு சேர்க்க ஜெனீவா வந்தனர்?

ஏன் இந்தியா ஆதரவாக வாக்களித்தது?
ஏன் சிங்களம் தீர்மானத்தை தொடர்ந்து கடும்போக்குடன் நடக்கின்றது?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#10 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 11:11 PM

ஆனால் ஈழததில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில ;அக்கறையற்ற புலம ;பெயர்ந்த தமிழ தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறான நிலையில ;தமக்கு ஒன்றும ;செய்ய முடியாது என ஆபிரிக்க ;தலைவர்கள் கூறியதாக நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த நம்பத்தகுந்தவர்கள் ஆபிரிக்க தலைவர்களுக்கு அங்குள்ள உண்மை நிலைமையை எடுத்துக்கூறவேண்டும். அங்கே பெரும்பான்மை இனமே அரச ஒடுக்குமுறை உள்ளது எனக்கூறுகின்றது. இதுவரை இந்த ஆண்டில் 60 - 2 = 58 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பினர் தென்னாபிரிக்க காங்கிரஸ் நூற்றாண்டு விழாவுக்கு சென்றதால் சிங்கள அரசு அதை புறக்கணித்தது.கூட்டமைப்பினர் புலிகள் போல நடப்பதாக அரசு கூறுகின்றது. ஒரு வருடத்திகு மேலாபேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் ஒன்றும் ஆகவில்லை.தமிழர் பிரதேசத்தில் எந்த விதமான தொழில்சார் நடவடிக்கையும் இராணுவ தலையீடு இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலைமையே உள்ளது. அதையும் மீறி தாயக உறவுகள் செய்தால், புலி இல்லை பயங்கரவாத முத்திரை. அத்துடன் பசிலுக்கு பத்துவீத கப்பம் மேலும் ஒட்டுக்குழுக்கள் தொல்லை.

யாரால் எப்படி உதவ முடியும் சிங்கள ஆட்சியில் மாற்றம் இல்லாமல்??

அந்த நம்பத்தகுந்தவர்கள் ஆபிரிக்க தலைவர்களுக்கு அங்குள்ள உண்மை நிலைமையை எடுத்துக்கூறவேண்டும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#11 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 April 2012 - 11:50 PM

ஆகவே புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம் இயக்க கட்சி சார்பு அரசிலை கொஞ:சம் புறம் தள்ளிவதை;து விட்டு தமிழ ;மக்களின் அரசியல ;அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தே புலம பெயர் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும ;என்பது எனது அபிப்பிராம்.இங்கே சிக்கல் என்னவென்றால் உங்கள் கருத்துப்படி நீங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்து எடுக்கும் முயற்சிகளை இன்னொருவர் அது இயக்க கட்சி சார்பு அரசியல் என்பார்.

Edited by akootha, 13 April 2012 - 11:51 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#12 meerabharathy

meerabharathy

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 88 posts
 • Gender:Not Telling
 • Interests:தியானம் /பிரக்ஞை /அரசியல் /சமூகமாற்றம்

Posted 14 April 2012 - 10:46 AM

akootha "இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர்"

தங்களின் இக் கூற்று மிக முக்கியமானது....உடன்படுகின்றேன்....இதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேக்காவிற்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக விக்கரமபாகுவிற்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என எழுதியிருந்தேன். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தலைவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டுமல்ல நமது அரசியல் கோரிக்கைக்கான அடிப்படையை மேலும் உறுதியாக்கி இருக்ககலாம்...
ஆனால் பொன்சேக்காவிற்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ; தேசிய அரசியலின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி விட்டனர்.
 • கிருபன் likes this
ஒவ்வொரு மனிரும் பிரக்ஞையுடன் செயற்படும் பொழுது நமது செயற்பாடுகள் முழுமையாகவும் பொறுப்புதன்மையுடனும் நடைபெறும். இதுவே கூட்டுப்பிரக்ஞையான ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆகவே நம் எல்லாவிதமான செயற்பாட்டிற்கும் சமாந்தரமாக , நம் பிரக்ஞையை வளர்ப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்வோம்.
நன்றி.
நட்புடன்
மீராபாரதி
பிரக்ஞை
http://meerabharathy.wordpress.com/

#13 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 14 April 2012 - 11:26 AM

akootha "இலங்கையில் இருந்து நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரத்னா போன்றவர்கள் உயர்வாக தெரிகின்றனர்"

தங்களின் இக் கூற்று மிக முக்கியமானது....உடன்படுகின்றேன்....இதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேக்காவிற்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக விக்கரமபாகுவிற்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என எழுதியிருந்தேன். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தலைவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டுமல்ல நமது அரசியல் கோரிக்கைக்கான அடிப்படையை மேலும் உறுதியாக்கி இருக்ககலாம்...
ஆனால் பொன்சேக்காவிற்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ; தேசிய அரசியலின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி விட்டனர்.

நான் விக்கிரமபாகு அவர்களை ஒப்பிட்டது பெர்னாண்டோவுடன் மட்டுமே. கூட்டமைப்பின் முடிவானது, அதாவது பொன்சேகாவை ஆதரித்தமை மூலம் மகிந்தாவை தோற்கடிக்க விரும்பினர். விக்கிரமபாகு அவர்களை ஆதரிப்பது மூலம் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் காலம் கனியவில்லை, காரணம் சிங்களவர்களே அங்கே பெரும்பான்மை மக்கள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#14 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 April 2012 - 01:22 AM

Posted Image

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#15 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 April 2012 - 02:59 AM

Sinhala academic blames US-UK axis for genocide in Tamil homeland

Dr. Fernando reminded the audience that the conflict in the island is a “modern human made product of colonialism and imperialism and therefore if it is human made it can also be unmade” and that “the struggle for justice amongst the Tamils will determine the outcome of democracy amongst the Sinhalese.Dr. Fernando declared that it is the helplessness of the Tamil nation in the North-East today that gives the Diaspora moral and political power. Instead of trying to align itself with international powers, the Diaspora must stand on its own two feet and say that the aspirations of the Tamils uncompromisingly remain the same based on the principles of nation, homeland, and self-determination.http://tamilnet.com/...=13&artid=35097

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#16 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,593 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 16 April 2012 - 03:20 AM

Since the Sri Lanka's State was founded, the Tamil people's fight for their rights has been incessant. Jude Lal Fernando, althought he's sinhalese (the biggest etnia in the island and the only one who has been always in power), he defends the Tamil people's rights. He has been forced to leave Sri Lanka and move to Ireland because of his political activism. Nowadays he's a professor in the University of Dublin.

http://www.beranduegi.tv

http://www.argia.com

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]