Jump to content


Tamil Star News
Photo

ஒவ்வொரு புல்லையும்....


  • Please log in to reply
6 replies to this topic

#1 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 10 April 2012 - 07:41 AM

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்...


கவிஞர் இன்குலாப்

http://yazhinimunusa...og-post_27.html

Edited by சொப்னா, 10 April 2012 - 07:43 AM.

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .


Advert

#2 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,313 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 10 April 2012 - 12:51 PM

இணைப்புக்கு நன்றி, சொப்னா.

கவிஞர் இன்குலாப் ஆழமான கவி வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#3 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 April 2012 - 03:56 PM

பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்



நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்


கவிஞர்கள் வரிசையில் இன்குலாப் எனது றோல் மொடல்களில் ஒருவர் . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் சொப்னா .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#4 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 11 April 2012 - 06:08 AM

இணைப்புக்கு நன்றி, சொப்னா.

கவிஞர் இன்குலாப் ஆழமான கவி வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



நன்றீங்க தமிழரசு அண்ணா உங்க கருத்துக்கு .

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .


#5 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 11 April 2012 - 06:14 AM

பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்



நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்


கவிஞர்கள் வரிசையில் இன்குலாப் எனது றோல் மொடல்களில் ஒருவர் . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் சொப்னா .



ஐச்சோ............... ரெம்ப வெலாவாரிய அனுபவிச்சு கருத்து போட்டிருகீங்க கோமகன் அண்ணா . உங்க கதைங்கள் எல்லாம் உங்க வலைப்பூவில வாசிச்சுக்குவேன் .ரெம்பவே நன்னாயிருக்குமுங்க . ரெம்ப நன்றீங்க .

Edited by சொப்னா, 11 April 2012 - 06:15 AM.

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .


#6 poet

poet

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,014 posts
  • Gender:Male

Posted 13 April 2012 - 05:47 AM

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
எனக்கும் பிடித்த கவிதை சொப்னா. எழுதிய தோழர் இன்குலப்புக்கும் இணைத்த உங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்
poet
v.i.s.jayapalan

#7 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 22 April 2012 - 05:42 AM

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
எனக்கும் பிடித்த கவிதை சொப்னா. எழுதிய தோழர் இன்குலப்புக்கும் இணைத்த உங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்



மிக்க நன்றீங்க பொயட் அண்ணா .

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]