அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம...் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது.
நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்டுக்கு நீ எப்படி உரிமை கொண்டாடலாம் என்று சட்டையை பிடித்திருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாத சுரேஷ், அய்யப்பனை தேடிப்பிடித்து லாட்டரி சீட்டை கொடுத்ததுடன் அந்த சீட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுந்த விபரத்தையும் சொன்னாராம். பணமே தரவில்லை. அதற்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அய்யப்பன் மறுக்க, இல்லையில்ல... அது உனக்குதான் சொந்தம் என்று சுரேஷ் இறுக்க, திகைக்க திகைக்க அங்கே ஒரு சென்ட்டிமென்ட் காட்சி நடந்திருக்கிறது.
இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் பார்த்திபன், எர்ணாகுளத்திலிருக்கும் சுரேஷை எட்டு பேர் கொண்ட குடும்பத்தோடு சென்னைக்கு தனது செலவிலேயே பிளைட்டில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசும் கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினார். சுரேஷுக்கு சிறந்த மனிதநேயர் பட்டமும் வழங்கினார்கள்
via facebook
மனிதாபிமானம்-ஒரு கோடிரூபாய்
Started by
அபராஜிதன்
, Apr 04 2012 10:09 AM
3 replies to this topic
#1
Posted 04 April 2012 - 10:09 AM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......

#2
Posted 04 April 2012 - 11:00 PM
இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!
சுரேஷின் மனிசிக்குத் தெரிந்திருந்தால், அவரை வறுத்தெடுத்திருப்பார்!
சுரேஷின் மனிசிக்குத் தெரிந்திருந்தால், அவரை வறுத்தெடுத்திருப்பார்!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#3
Posted 04 April 2012 - 11:48 PM
நல்ல இதயம்,
நன்றி அபராஜிதன் பகிர்வுக்கு
நன்றி அபராஜிதன் பகிர்வுக்கு
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#4
Posted 05 April 2012 - 03:04 AM
என்னுடைய மனநிலை உடையவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைக்க பெருமையாய் உள்ளது.
நம்பமாட்டிங்கள் என்றால் லாட்டரி சீட்டை வாங்கி என்னிடம் தந்து பாருங்கள்.... இந்த வெள்ளிக்கிளமை சுப்பர் மாக்ஸ் 30 மில்லியன் டொலர்கள்.
நம்பமாட்டிங்கள் என்றால் லாட்டரி சீட்டை வாங்கி என்னிடம் தந்து பாருங்கள்.... இந்த வெள்ளிக்கிளமை சுப்பர் மாக்ஸ் 30 மில்லியன் டொலர்கள்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]