Jump to content

Tamil Star News
Photo

உங்க, லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம்!

  • Please log in to reply
37 replies to this topic

#1 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,284 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 04 April 2012 - 07:33 AM

Posted Image

உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம்!

உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். முதன்முறையாக லிப்ஸ்டிக் உபயோகிக்கப்போகிறீர்களா? இதோ லிப்ஸ்டிக் போடும் முறை பற்றி ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
நிறத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக்.
தற்போது இளஞ்சிவப்பு முதல் பிரவுன், வைலெட் மற்றும் கறுப்பு வரை பல்வேறு வர்ணங்களில் கடைகளில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. நம்முடைய நிறத்திற்கு எந்த நிறம் பொருந்துமோ அதற்கேற்ப வர்ணங்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும்.
முதலில் அவுட் லைன் வரைந்து விட்டு பின்னர் லிப்ஸ்டிக் போடலாம். அப்பொழுதுதான் உதடுகளின் வடிவத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக் பொருந்தும்.
நீண்டநேரம் நீடிக்க...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் ஐஸ்களால் ஒத்தடம் கொடுத்தால் லிப்ஸ்டிக் நீண்டநேரம் இருக்கும்.லிப் பேஸ் பூசிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் போட்டாலும் நீண்டநேரத்திற்கு இருக்கும்.
உதடுகளுக்கு மேக் அப் போடும் முன் முதலில் பவுண்டேசன் போட்டுவிட்டு பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் நீண்டநேரத்திற்கு கலையாமல் இருக்கும்.
கவனம் தேவை
லாங்லாஸ்டிங் பூசினால் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.
திரவ வடிவில் இருக்கும் லிக்விடை சிறிய பிரஷ் கொண்டு உதட்டில் பூசலாம் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்துவிடுவதால் உதடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
உதடு உலர்வதை தடுக்க.
மெட்டாலிக் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது. அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.
ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்°டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது. உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.
பளபளப்பான லிப் கிளாஸ்.
லிப் கிளாஸ் இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.
லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் அலர்ஜி ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் பல வர்ணங்களில் கிடைக்கும் வாஸலின்களை உபயோகிக்கலாம். அதேபோல் லிப் கிளாஸ் போடலாம்.
லிப் பென்ஸிலால் உதடுகளில் அவுட்லைன் பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும். லிப் பென்ஸில் உதடுகளின் வடிவத்தை எடுத்துக்காட்டி மேலும் அழகாக்குகிறது .
லிப் கிரீம் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம். உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.
உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குகளை நீக்க பேஷ்வாஸ் அல்லது தேங்காய் எண்ணெயை தடவலாம்.
நன்றி தற்ஸ்தமிழ்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

Advert

#2 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,250 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 04 April 2012 - 08:15 AM

தமிழ் சிறி நன்றி பகிர்வுக்கு, இயற்கை உதடுகளை சுவைத்தால்தான் தேனாக இருக்கும், லிப்பஸ்டிக் அடிக்கிறம் என்று அப்பி வைத்துள்ளவர்களை பார்த்தால் என்னவோ மாதிரி இருக்கும்
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#3 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,284 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 04 April 2012 - 08:27 AM

தமிழ் சிறி நன்றி பகிர்வுக்கு, இயற்கை உதடுகளை சுவைத்தால்தான் தேனாக இருக்கும், லிப்பஸ்டிக் அடிக்கிறம் என்று அப்பி வைத்துள்ளவர்களை பார்த்தால் என்னவோ மாதிரி இருக்கும்

Posted Image

உடையார்... அதிலும் சிலர், கறுப்பு லிப்ஸ்டிக் அடித்திருப்பார்கள். பார்க்க... பயமாக இருக்கும்.
அடிக்கிற லிப்ஸ்டிக்கை சிவப்பு, பிங்க், நாவல் நிறத்தில் அடித்தால்... கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#4 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 04 April 2012 - 08:55 AM

இணைப்பிற்கு நன்றி சிறி.
எனக்கு இந்த 'லிப்ஸ்டிக்' பிடிப்பதில்லை. பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் மெய்மறந்திருக்கும் தருணத்தில் அதன் சுவை ஒரு நெருடலை ஏற்படுத்தும். பிசுபிசுப்பில்லாமல் சுவையற்ற 'லிப்ஸ்டிக்' பாவனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னதான் இருந்தாலும் இயற்கை இதழின் சுவைக்கு ஈடாகாது.
  • Thumpalayan likes this

#5 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,010 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 04 April 2012 - 12:00 PM

இந்த லிப்ஸ்டிக்கின் தரம் சம்மந்தமாக அதைப் போடும் பெண்களை விட அந்தப் பெண்களோடு சம்மந்தப்பட்ட ஆண்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் :D
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#6 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,835 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 04 April 2012 - 02:52 PM

இணைப்பிற்கு நன்றி சிறி.
எனக்கு இந்த 'லிப்ஸ்டிக்' பிடிப்பதில்லை. பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் மெய்மறந்திருக்கும் தருணத்தில் அதன் சுவை ஒரு நெருடலை ஏற்படுத்தும். பிசுபிசுப்பில்லாமல் சுவையற்ற 'லிப்ஸ்டிக்' பாவனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னதான் இருந்தாலும் இயற்கை இதழின் சுவைக்கு ஈடாகாது.

ஏதோ சிக்கின் 65 சாப்பிட்ட கணக்கா ரசிச்சு.. ருசிச்சு எழுதிறாங்கப்பா..! எதுக்கும் கவனமா இருங்கோ.. அளவுக்கு அதிகமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு.. நோய் கீய் வராமல் இருந்தால் சரி..! :lol: :D

Edited by nedukkalapoovan, 04 April 2012 - 02:53 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#7 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 04 April 2012 - 08:32 PM

ஏதோ சிக்கின் 65 சாப்பிட்ட கணக்கா ரசிச்சு.. ருசிச்சு எழுதிறாங்கப்பா..! எதுக்கும் கவனமா இருங்கோ.. அளவுக்கு அதிகமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு.. நோய் கீய் வராமல் இருந்தால் சரி..! :lol: :D

எப்படி நோய் வரும்? :rolleyes:

அதில் கொலஸ்ட்ரோல் இல்லை. உடலை உற்சாகமாக இயங்கவைக்கக் கூடிய சுரப்பிகள் சுரக்கின்றன. அந்த நேரத்தில் கொஞ்சம் சுருதி கூடி, இரு இதயங்களும் டப்பு...டப்பு.... என்றடிப்பதால் வலது சோனையறை இடது சோனையறை பகுதிகள் நன்றாகச் சுத்தமாக்கப்படுவதுடன்.
வாயால் சுவாசிப்பது தடைப்படுவதால், சீரான சுவாசம் ஏற்பட்டு நுரையீரல் சுத்தமாக்கப்படும் என நினைக்கிறேன். :lol:

#8 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,835 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 04 April 2012 - 10:24 PM

எப்படி நோய் வரும்? :rolleyes:

அதில் கொலஸ்ட்ரோல் இல்லை. உடலை உற்சாகமாக இயங்கவைக்கக் கூடிய சுரப்பிகள் சுரக்கின்றன. அந்த நேரத்தில் கொஞ்சம் சுருதி கூடி, இரு இதயங்களும் டப்பு...டப்பு.... என்றடிப்பதால் வலது சோனையறை இடது சோனையறை பகுதிகள் நன்றாகச் சுத்தமாக்கப்படுவதுடன்.
வாயால் சுவாசிப்பது தடைப்படுவதால், சீரான சுவாசம் ஏற்பட்டு நுரையீரல் சுத்தமாக்கப்படும் என நினைக்கிறேன். :lol:

அப்படியே நினைச்சுக்கோங்க. சாவு ஒரு நாள் அழைக்கும் போது தெரியும்..! :) :lol:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#9 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,250 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 05 April 2012 - 02:21 AM

ஏதோ சிக்கின் 65 சாப்பிட்ட கணக்கா ரசிச்சு.. ருசிச்சு எழுதிறாங்கப்பா..! எதுக்கும் கவனமா இருங்கோ.. அளவுக்கு அதிகமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு.. நோய் கீய் வராமல் இருந்தால் சரி..! :lol: :D

நெடுக்கு, ஒருக்கா சுவைத்துப்பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் (உங்களை பிறகு யாழில் காணக்கிடைக்காது :D )
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#10 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,284 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 05 April 2012 - 05:48 AM

இணைப்பிற்கு நன்றி சிறி.
எனக்கு இந்த 'லிப்ஸ்டிக்' பிடிப்பதில்லை. பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் மெய்மறந்திருக்கும் தருணத்தில் அதன் சுவை ஒரு நெருடலை ஏற்படுத்தும். பிசுபிசுப்பில்லாமல் சுவையற்ற 'லிப்ஸ்டிக்' பாவனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னதான் இருந்தாலும் இயற்கை இதழின் சுவைக்கு ஈடாகாது.

Posted Image

இந்த "லிப்ஸ்டிக்" எமது கன்னத்திலோ, சட்டையிலோ பிரண்டு.... பொறுத்த நேரத்தில், காட்டிக் கொடுத்து விடும்.
சரியான கவனமாக இருக்க... வேண்டும். தப்பிலி :rolleyes: :D .

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#11 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,226 posts
  • Gender:Male

Posted 05 April 2012 - 06:39 AM

இந்த "லிப்ஸ்டிக்" எமது கன்னத்திலோ, சட்டையிலோ பிரண்டு.... பொறுத்த நேரத்தில், காட்டிக் கொடுத்து விடும்.
சரியான கவனமாக இருக்க... வேண்டும். தப்பிலி :rolleyes: :D .

எல்லாரும் இயமனைப் பச்சடி போட்ட ஆக்களாக் கிடக்கிறாங்கள்! :o

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com

#12 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 05 April 2012 - 08:26 AM

இந்த "லிப்ஸ்டிக்" எமது கன்னத்திலோ, சட்டையிலோ பிரண்டு.... பொறுத்த நேரத்தில், காட்டிக் கொடுத்து விடும்.
சரியான கவனமாக இருக்க... வேண்டும். தப்பிலி :rolleyes: :D .

இந்த லிப்ஸ்டிக் கலரால மாட்டுப்பட்ட ஆட்கள் பலர். :(

எதுக்கும் நீங்கள் இந்த லிப்ஸ்டிக் கலர்களில் சட்டைகள் வாங்கி வையுங்கோ. அவசரத்திற்கு உதவும். :D

#13 Thumpalayan

Thumpalayan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 839 posts
  • Location:Australia

Posted 05 April 2012 - 08:42 AM

இணைப்பிற்கு நன்றி சிறி.
எனக்கு இந்த 'லிப்ஸ்டிக்' பிடிப்பதில்லை. பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் மெய்மறந்திருக்கும் தருணத்தில் அதன் சுவை ஒரு நெருடலை ஏற்படுத்தும். பிசுபிசுப்பில்லாமல் சுவையற்ற 'லிப்ஸ்டிக்' பாவனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னதான் இருந்தாலும் இயற்கை இதழின் சுவைக்கு ஈடாகாது.

சேம் பிளட் பிரதர். மெய் மறக்க முதல் மேக்கப்பை அழித்து விடுறது தானே? சிலவகை நகைகள் உந்த மேக்கப் எல்லாம் "அந்த நேரத்தில" சோலியான சாமான்களாக்கும் :wub:

#14 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,835 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 April 2012 - 10:55 AM

நெடுக்கு, ஒருக்கா சுவைத்துப்பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் (உங்களை பிறகு யாழில் காணக்கிடைக்காது :D )

ஆக்களை..எச்சில் இலை நாயே என்றெல்லாம் பேசுறாங்க.. ஆனால் பெண் உதட்டில்.. போய் எச்சில் இல்லை அமிர்தம்.. சா.. தேன் என்றாங்க. கொடுமை. அங்க தேனும் இல்ல பாலும் இல்ல.. வெறும் உமிழ் நீர் தான் உண்டு. அதைச் சுவைக்கிறதிலும்.. கடையில நல்ல கொம்புத் தேன் வாங்கி ரோஸ்ட் பண்ணின பாணில பிரட்டி சாப்பிடுவது சுவை..! :lol:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#15 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,645 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 05 April 2012 - 11:08 AM

ஆக்களை..எச்சில் இலை நாயே என்றெல்லாம் பேசுறாங்க.. ஆனால் பெண் உதட்டில்.. போய் எச்சில் இல்லை அமிர்தம்.. சா.. தேன் என்றாங்க. கொடுமை. அங்க தேனும் இல்ல பாலும் இல்ல.. வெறும் உமிழ் நீர் தான் உண்டு. அதைச் சுவைக்கிறதிலும்.. கடையில நல்ல கொம்புத் தேன் வாங்கி ரோஸ்ட் பண்ணின பாணில பிரட்டி சாப்பிடுவது சுவை..! :lol:

நெடுக்கு இது நல்லாயில்லை.. :D ஒரு காலத்தில நீங்களே கல்யாணம் கட்ட வெளிக்கிட்டாலும் பிறகு நாங்கள் முன்னாலை நிண்டு தடுப்பம் சொல்லிட்டன்..! :lol:

எதுக்கும் நீங்கள் இந்த லிப்ஸ்டிக் கலர்களில் சட்டைகள் வாங்கி வையுங்கோ. அவசரத்திற்கு உதவும். :D

:lol: :lol: :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#16 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,835 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 April 2012 - 11:13 AM

நெடுக்கு இது நல்லாயில்லை.. :D ஒரு காலத்தில நீங்களே கல்யாணம் கட்ட வெளிக்கிட்டாலும் பிறகு நாங்கள் முன்னாலை நிண்டு தடுப்பம் சொல்லிட்டன்..! :lol:

கலியாணம் கட்டிறதே அடிமைத் தனம். பிற்போக்குத்தனம்..! (அப்பாடா நானும் ஒரு மாதிரி.. முற்போக்குவாதி ஆகிட்டனே..!) :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#17 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 05 April 2012 - 12:54 PM

நெடுக்கு இது நல்லாயில்லை.. :D ஒரு காலத்தில நீங்களே கல்யாணம் கட்ட வெளிக்கிட்டாலும் பிறகு நாங்கள் முன்னாலை நிண்டு தடுப்பம் சொல்லிட்டன்..! :lol:

அதாவது பரவாயில்லை. யாழில் பெண்களைப் பற்றி எழுதிய கருத்துக்களை வைத்து , 'பெண்கள் - நெடுக்காலபோவானின் சிந்தனையிலிருந்து' என்று வால்யூம் வால்யூமாகத் தொகுத்து வைத்திருக்கிறோம். அதுதான் திருமணப் பரிசு. :D

#18 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,835 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 April 2012 - 04:19 PM

அதாவது பரவாயில்லை. யாழில் பெண்களைப் பற்றி எழுதிய கருத்துக்களை வைத்து , 'பெண்கள் - நெடுக்காலபோவானின் சிந்தனையிலிருந்து' என்று வால்யூம் வால்யூமாகத் தொகுத்து வைத்திருக்கிறோம். அதுதான் திருமணப் பரிசு. :D

இப்படிச் சொன்னாப் போல.. பயந்து எழுதாம விட்டிடுவமாக்கும்..! அது தானே நடக்காது..! :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#19 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,284 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 05 April 2012 - 04:51 PM

இப்படிச் சொன்னாப் போல.. பயந்து எழுதாம விட்டிடுவமாக்கும்..! அது தானே நடக்காது..! :lol: :D

அப்பிடியெண்டால்.... உங்களுக்கு, கலியாணமும் நடக்காது. :lol: :icon_idea: :D

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#20 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 05 April 2012 - 07:37 PM

'அப்பிள்' பயன்படுத்திய tuch screen தொழில் நுட்பம் போல,
அவசரத்திற்கு, இதழில் உள்ள 'லிப்ஸ்டிக்'கை சுண்டு விரலால் கன்னத்திற்கு தட்டி விட்டு பின் மீளக் கொணரும் சாத்தியமுண்டா?

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]