Jump to content


Tamil Star News
Photo

ஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை அறிமுகப்படுத்துகிறது கூகுள்!


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 30 March 2012 - 03:21 PM

Posted Image
'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை கூகுள் அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது. மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல்வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது. தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது.
கணினியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் Cloud storage வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை இத் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கின்றது.கூகுள் சுமார் 1 ஜி.பி வரையான நினைவக வசதியை அதன் பாவனையாளர்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைப் போன்ற வசதியினை வழங்கும் ட்ரொப் பொக்ஸ் வேகமாக வளர்ச்சியைடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டே கூகுளும் தற்போது களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது. எனினும் இது தொடர்பில் கூகுள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அப்பிள் நிறுவனம் இத்தகைய ஒரு சேவையினை ஏற்கனவே வழங்கி வருகின்றது. அப்பிள் தனது ஐ கிளவ்ட் (iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை (cloud storage service) கடந்த வருடம் அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]