Jump to content


Orumanam
Photo

3 – திரைவிமர்சனம்


 • Please log in to reply
6 replies to this topic

#1 அபராஜிதன்

அபராஜிதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,370 posts
 • Gender:Male

Posted 30 March 2012 - 07:13 AM

ரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன்.
கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது க்ளைமாக்ஸ் வரை. துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் கலந்து கட்டி அடித்தது போல உள்ளது.
முதல் பாதி முழுவதும் இவர்கள் இருவர் பள்ளிக்காதலே வருகிறது முக்கியத்திருப்பங்கள் எதுவுமில்லாமல் நகர்கிறது. தனுஷுக்கு இந்த கதாப்பாத்திரம் சொல்லவே தேவையில்லை அடி தூள் கிளப்புகிறார். இவருக்கு துணை சிவ கார்த்திகேயன், டைமிங் காமெடியில் கலக்குகிறார். அவ்வப்போது சந்தானம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தனுஷும் ஸ்ருதியும் பள்ளி மாணவர்கள் என்பதை எந்தவித சிரமுமில்லாமல் ஏற்க அவர்களது உடல்வாகு உதவுகிறது. ஸ்ருதி கதாப்பாத்திரத்தில் முன்பு வந்தவர் அமலா பால் பின்னர் எதோ கால்ஷீட் பிரச்சனை என்று அவர் இல்லை. அவர் இருந்து இருந்தாலும் பள்ளி சார்ந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இருந்து இருப்பாரா என்று தெரியவில்லை.
ஸ்ருதியை சைட் அடிக்க தனுஷ் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும் உடன் சிவ கார்த்திகேயன். இவரை இடைவேளைக்குப் பிறகு கழட்டி விட்டுவிட்டார்கள் ஆனால் இருக்கும் வரை திரையரங்கம் கலகலத்துக்கொண்டே இருந்தது. ஸ்ருதி நண்பியாக ஜோடி நம்பர் 1 ல் ஆடிய நேபாளி பெண் என்று நினைக்கிறேன். பார்த்தால் அவர் மாதிரி தான் இருந்தார். ஸ்ருதி தங்கச்சியாக வரும் சிறுமி செய்யும் கை அசைவுகள் ரசிக்கும் படி இருக்கும்.
உலகத்திலேயே யாருமே செய்து இராத இடத்தில் தனுஷ் ஸ்ருதி திருமணம் நடக்கிறது. இந்தக்காட்சிக்காக எத்தனை பேர் திட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினி பொண்ணு இயக்கம் என்பதால் தலைவருக்கும் சேர்ந்து திட்டு விழப்போகிறது Posted Image ஒய் திஸ் கொலவெறி என்று தெரியவில்லை. ஸ்ருதியின் திருமணத்தை ஏற்க மறுக்கும் அவரது தந்தையிடம் தனுஷ் பேசும் காட்சிகள் அருமை. ரொம்ப எதார்த்தமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல அவர்கள் தனுஷ் வீட்டிற்கு வரும் போது தனுஷ் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். ஸ்ருதியின் அம்மாவாக ரோகிணி.
பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மெகா ஹிட் ஆகி விட்டதால் படத்திலும் பார்க்க நன்றாகவே இருந்தது. கொலவெறி பாடல் எடுக்கப்பட்ட விதம் ரொம்ப சுமாராக இருந்தது. நான் எதிர்பார்த்தது தான்.
தனக்கு இந்தப் நோய் உள்ளது என்று தெரிய வரும் போது அவரது நண்பரிடம் (மயக்கம் என்ன படத்தில் நண்பராக வருபவர்) கூறி அழுவது, தன் நண்பனையே அடித்து விட்டு பின் அதற்காக வருந்துவது என்று தனுஷ் நடிக்க பல வாய்ப்புகள். மச்சான்! நான் பைத்தியமாடா! என்று அப்பாவியாகக் கேட்டு கலங்க வைத்து விடுகிறார். தனுஷுக்கு உள்ள பிரச்னையை அவர் நண்பர் மட்டுமே அறிந்து இருக்கிறார் என்பதை நம்ப சிரமமாக உள்ளது.
தனுஷ் தன்னுடைய பிரச்னையை ஸ்ருதிக்கு தெரியாமலே சமாளிப்பது என்பதும் நம்பும் படி இல்லை. ஸ்ருதி அழுவதைப் பார்க்க கொடுமையாக இருக்கிறது ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அவருக்கு அது போன்ற காட்சிகள் அதிகம் என்பது தான். அவர் அழும் போது நாம் நெளிய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளை குறைத்து இருக்கலாம் இந்தக்காட்சிகளுக்கு திரையரங்கில் பலர் பொறுமை இழப்பார்கள்.
தனுஷ் அப்பாவாக பிரபு அம்மாவாக பானுப்ரியா. பிரபு தனுஷிடம் டேய்! நல்லா சாப்பிடுடா உன்னைப் பார்த்தால் யாராவது என்னோட பையன் என்று சொல்லுவாங்களா! என்று நாம் கேட்க நினைத்ததை அவர் கூறி நமக்கு வேலையில்லாமல் செய்து விட்டார் Posted Image
முகத்தில் கோபத்தை டெர்ரராக காட்டுவதில் ரஜினிக்கு பிறகு நான் தனுஷ் ரசிகன் ஆகி விட்டேன். அடேங்கப்பா! என்ன மிரட்டு மிரட்டுகிறார் மயக்கம் என்ன படத்திலேயே கலக்கி இருப்பார் இதிலும் அதே போல் பல வாய்ப்புகள். அதிலும் ஒரு சண்டைக் காட்சியில் அவர் அடிக்கும் அடிகள் காட்டும் முக பாவனைகள் சரவெடி தான். அந்தக் காட்சியில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.
படத்தில் சைக்கலாஜிக்கலாக பல காட்சிகள் வருவதால் அதை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு நம் மக்களுக்கு பொறுமை இருக்குமா என்பது சந்தேகம் தான். B C சென்டர்களில் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும். தனுஷ் இது போல ஒரே மாதிரி படங்களாக நடிக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது நல்லது.
3 என்பதற்கு அர்த்தம் பள்ளி, கல்லூரி, திருமணம் ஆன பிறகு என்று மூன்று காலங்கள் வருவதால் இருக்கும் என்று நானே முடிவு செய்து கொண்டேன். வேறு எதுவும் காரணம் தோன்றவில்லை.
படம் டக்கென்று முடிந்து விட்டது பலர் படம் இன்னும் தொடரும் என்று நினைத்தார்கள் நான் உட்பட. மயக்கம் என்ன கூட அப்படித்தான் முடியும் ஆனால் அதில் ஒரு அழகு இருந்தது அதற்கே பலர் திட்டினார்கள் இதற்கு!!… படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்க மாட்டார்கள். எனவே படம் ஹைப்பால் ஓபனிங்கில் வசூல் பார்க்கலாம் மற்றபடி ஓகே ரகம் தான்.http://www.giriblog....vie-review.html

" துரோகத்தின் வலி அறிந்தவன் மற்றோருக்கு துரோகம் இழைக்க மாட்டான், துரோகியையும் மன்னிக்க மாட்டான் "


ninaivu-illam

#2 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,086 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 01 April 2012 - 04:54 PM

இன்று தான் படம் பார்த்தன். என் விமர்சனத்தையும் இங்கு சேர்க்கிறேன்.

இடைவேளை வரை படம் ரசிக்கும் படி இருக்கு. எனினும் துள்ளுவதோ இளமை படத்தை நினைவு படுத்துகிறது. இடைவேளையின் பின் மெதுவாக திரைக்கதை நகர்கிறது.

ஸ்ருதி காதல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். எனினும் அழும் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு இருக்கிறது. இடைவேளையின் பின் அவருக்கு முழுக்க அழும் காட்சிகள் தான். ஸ்ருதியின் குரலும், பேசும் விதமும் படத்தை இன்னும் மெதுவாக செல்வது போல் காட்டுகிறது.

தனுஷ் நன்றாக நடித்துள்ள போதும் இடைவேளையின் பின்னர் மயக்கம் என்ன படம் பார்த்தமாதிரி இருந்தது. நெடுக்காலபோவான் அண்ணா சொன்னது போல தனுஷின் repeat action இங்கும் வெளிப்படுகிறது. என்ன செய்வது இனியாவது தனுஷ் மனநோயாளி பாத்திரத்தை தெரிவு செய்யாமல் இருப்பது நல்லது.

தனுஷுக்கு உள்ள வியாதி ஸ்ருதிக்கு தெரியாமல் மறைக்கப்படுவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தனுஷின் அப்பா, அம்மாவாக பிரபு , பானுப்பிரியாவும் ஸ்ருதியின் அம்மாவாக ரோகிணியும் நடித்துள்ளனர். ஸ்ருதியின் நண்பியாக வருபவர் விஜய் டிவியின் "jodi no 1-season4" இல் வந்தவர். தங்கையாக நடிப்பவரும் "jodi no 1-junior" இல் வந்தவர் போலிருக்கிறது. சரியாக தெரியவில்லை. இவர்களுக்கு காட்சிகள் பெரிதும் இல்லாவிட்டாலும் கொடுக்கப்பட்டதை அழகாக செய்துள்ளார்கள்.

இடைவேளை வரை வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் அவருக்கான காட்சிகள் போதாது. இடைவேளையின் பின் தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் வரும் சுந்தர் வருகிறார். இவர் இந்த படத்திலும் ஒரு அப்பாவியாக வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு இது முதல் படம் என்று கூற முடியாதவாறு படத்தை எடுத்துள்ளார். ஆனால் செல்வராகவனிடம் assistant director ஆக பணிபுரிந்ததன் தாக்கம் பல இடங்களில் தெரிகிறது. எவ்வாறாயினும் தமிழ் சினிமாவில் இன்னொரு நல்ல இயக்குனர் ரெடி.

பாடல்களை பொறுத்தவரை கண்ணழகா பாடல் நன்றாக உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த "why this kolaveri" பாடலும் "போ நீ போ" பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது. "why this kolaveri" பாடல் வந்த சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலாக "போ நீ போ" பாடலை போட்டிருந்தால் அப்பாடலாவது கதையுடன் பொருந்தியிருக்கும். கண்ணழகா பாடலை தவிர ஏனைய அனைத்து பாடல்களிலும் இசைக்கும், பாடல் வரிகளுக்கும் தகுந்தபடி movements அமையவில்லை. காட்சியமைப்பில் இன்னும் அழகாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் ரசிக்கக்கூடியதாக உள்ளது.

படத்தின் ஆரம்பத்திலேயே முடிவு என்ன என்று தெரிந்தாலும் திடீரென்று படத்தை முடித்து விட்டார்கள். ஸ்ருதியின் கட்டத்தில் கொண்டுவந்து முடித்திருந்தாலும் பரவாயில்லை.

படத்திற்கு "3" என பெயரிடப்பட்டதன் காரணம் தெரியவில்லை. தனுஷ், ஸ்ருதிக்கு அடுத்து 3 ஆவதாக வரும் இந்த நோய் படத்தின் முடிவுக்கு காரணமாக இருப்பதால் "3" என்ற பெயர் வந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

கண்டிப்பாக repeat audience இருக்கமாட்டார்கள்.

Edited by காதல், 02 April 2012 - 10:45 PM.

 • குமாரசாமி likes this

#3 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,624 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 02 April 2012 - 07:09 AM

3 - விமர்சனம்


இந்திய சினிமாவின் இரு பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்துள்ள படம் 3. ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், கமல்ஹாஸன் மகள் ஸ்ருதிஹாஸன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Posted Image


ஐஷ்வர்யாவின் முதல் படம் என்பதால் சாதாரணமாக படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் செய்த ஒரு காரியத்தால் இந்த படத்தை இந்தியா முழுவதும் திரும்பிப் பார்த்தது. கொலவெறிப் பாடலை யூ டியூபில் போட்டதன் மூலம் படம் தானாக விளம்பரமானது. இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

ஸ்ருதியும் தனுஷும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கிறார்கள். ஸ்ருதியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு சின்ஸியரான மாணவராக இருக்கிறார் தனுஷ்.

பள்ளியில் படிக்கும் போதே, இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டு மொட்டைமாடியில் சந்திப்பது, வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் குஜாலாக இருப்பது போன்ற நல்ல காரியங்கள் தொடர்கிறது.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகும் காதல் தொடர்கிறது. பல எதிர்ப்புகளைத் தாண்டி திருமணாம் செய்துகொள்கிறார்கள். திருமணாத்திற்கு பின் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான சூழலில் வாழ்கின்றனர்.

ஆனால், தன் மனைவி ஸ்ருதிஹாசனுக்கும் தெரியாமல் தனுஷுக்கு ஒரு வியாதி இருப்பதாக படத்தின் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது. அதாவது அதிகமாக கோபப்படுவதும், அதிகமாக சந்தோஷப்படுவதும். சிம்பிளா சொன்னா, ஒருவர் மேல் கோபம் வரும்போது, அவங்க மண்டைய ரெண்டா பொளந்து ரத்தகாயமாக்கிட்டு, அப்புறம், அய்யோ... நானா இப்படி பண்ண, எனக்கு ஏன் தான் இப்படியெல்லாம் தோணுதோ என்று தலைமேல அடிச்சுக்கிட்டு அழுவது!

Posted Image


காதல் கொண்டேன், மயக்கம் என்ன இரண்டு தனுஷையும் ஒன்னா பார்த்தா எப்படி இருக்கும். அதே சைக்கோத் தனமான கேரக்டர். இந்த வியாதி முத்திப்போக, கடைசியில் ஸ்ருதிஹாசனை தனுஷ் கொன்றுவிடுகிறாரா? அல்லது தற்கொலை செய்துகொள்கிறாரா? என்பது படத்தின் முடிவு. ஆனால் அது ரசிகர்களுக்கு கொடுமையான முடிவுதான் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதை இதுதான் என்றாலும் அதை திரைக்கதை மூலம் ரொம்ப நல்லாவே குழப்பி இருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்.


முதல் பாதியில் சிவகார்த்திகேயன் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு எதார்த்தமான முதலிரவுக் காட்சியை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது போல. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் அப்படி ஒரு நெருக்கம். தனுஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

குழப்பம் கதையில் மட்டுமே! நடிப்பை பொருத்தவரை இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. உண்மையான சைக்கோ மாதிரியே நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், பார்ப்பதற்கு ’கும்’முன்னு இருந்தாலும் பல நேரங்களில் ’கம்’முன்னே இருக்காங்க. ஆனாவொன்னா அழுவது எரிச்சல்!

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானவை தான். பாடல்களின் விஷுவல் காட்சிகளும் ஏமாற்றமில்லாமல் அமைந்திருக்கின்றன. கொலவெறி பாடல் அதிரடியான அலட்டல்கள் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது ஆறுதல். நீ பார்த்த விழிகள்... இதமான மெலடி.

பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை என பல பரிமாணங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக நிரூபித்தவர் வேல்ராஜ். இந்த படத்தில் சாதாரண காட்சிகளையும் கூட பிரம்மிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.

தனுஷுக்கு வியாதி என்பதை ஏற்க முடிந்தாலும், அது எதனால் வந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை கதையில் சொல்லி இருந்தால், கொஞ்சம் தெளிவா குழம்பி இருக்கலாம். என்ன காரணம்னு கடைசி வரைக்கும் சொல்லாமல், ஹீரோவோடு சேர்த்து பார்வையாளர்களையும் சாகடிப்பது எந்த விதத்தில் நியாயம்? (எப்படி இருந்தாலும், ஐஸ்வர்யா தனுஷ் செல்வராகவனின் உதவியாளர் என்பதை நிரூபித்துவிட்டார் )

படத்தை எடுத்தவருக்கு பைத்தியமா? படத்தில் நடிப்பவருக்கு பைத்தியமா? இல்ல படத்தை பார்ப்பவர்களுக்கு பைத்தியமான்னு? ஒரு பெரிய கேள்வியே வருகிறது.அடிக்கிற வெயில்ல ஏற்கெனவே தலைவலி, இதுல இதுவேறவா?

3 - மண்ட காயுது! ஒரே தலைவலி, ஏன் இந்த கொலவெறி?

நன்றி:நக்கீரன்.கொம்

இன்று தான் படம் பார்த்தன். என் விமர்சனத்தையும் இங்கு சேர்க்கிறேன்.

கண்டிப்பாக repeat audience இருக்கமாட்டார்கள்.


(உங்கட பெயரைத் தான் உச்சரிக்க கஸ்டமா இருக்கிறது.. காரணம்.. நாங்கள் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள்... சரி அதைவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...)

யாழ் களத்தில் உங்களின் முதலாவது பட விமர்சனம் இது என்று நினைக்கிறேன்.. நான் வாசிச்ச பிற விமர்சனங்களோடு ஒப்பிடும் போது நிச்சயமா படம் பார்க்காத ஒருவர் இந்தப் படத்தை பார்க்கனுமா இல்லையான்னு தீர்மானிக்க உங்கட விமர்சனம் உதுவும் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள். இன்னும் எதிர்காலத்திலும் எழுத வாழ்த்துக்கள். நன்றி.. தங்கச்சி..! :)
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#4 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,086 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 02 April 2012 - 06:22 PM

(உங்கட பெயரைத் தான் உச்சரிக்க கஸ்டமா இருக்கிறது.. காரணம்.. நாங்கள் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள்... சரி அதைவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...)

யாழ் களத்தில் உங்களின் முதலாவது பட விமர்சனம் இது என்று நினைக்கிறேன்.. நான் வாசிச்ச பிற விமர்சனங்களோடு ஒப்பிடும் போது நிச்சயமா படம் பார்க்காத ஒருவர் இந்தப் படத்தை பார்க்கனுமா இல்லையான்னு தீர்மானிக்க உங்கட விமர்சனம் உதுவும் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள். இன்னும் எதிர்காலத்திலும் எழுத வாழ்த்துக்கள். நன்றி.. தங்கச்சி..! :)என்னை திட்டுறீங்களா பாராட்டுறீங்களா என்று புரியலையே????? :)

எதுவாக இருந்தாலும் என் முன்னேற்றத்திற்கு உதவும்... எனவே நன்றிகள் அண்ணா....

எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை. யாழ் களத்தில் மட்டுமல்ல. பிறந்ததுக்கே நான் விமர்சனம் எழுதுவது இது தான் முதல் தரம். ஏதோ என் கருத்தை தான் கூறினேன் - விமர்சனம் என்ற பெயரில்.

அப்புறம்....
வரிக்கு வரி காதல், காதலிக்கிறார்கள், காதலிக்கும் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும் விமர்சனத்தை நீங்கள் இங்கு இணைக்கும் போது "காதல்" என்ற என் பெயரை இங்கு எழுதுவதால் ஒன்றும் குறைந்து விட மாட்டீர்கள்........... (உச்சரிக்க எல்லாம் தேவையில்லை :) ).

சிலவேளை என் பெயரை உச்சரித்தால் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்திலிருந்து தீவிர காதல் ஆதரவு சங்கத்திற்கு மாறிவிடுவீர்களோ என்னவோ? :lol: :D

என்ன இருந்தாலும் என் பெயரை மேலே எழுதின பிறகும் இப்பிடியெல்லாம் அடம்பிடிக்க கூடாது. எழுதும் போது மனதுக்குள் உச்சரித்து தான் எழுதியிருப்பீர்கள் :icon_idea: .

Edited by காதல், 02 April 2012 - 06:24 PM.

 • குமாரசாமி likes this

#5 குண்டன்

குண்டன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 383 posts
 • Gender:Male

Posted 02 April 2012 - 07:37 PM

Posted Imageபாரின்கோபா சொகய அமதுறான் Posted Image

#6 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,624 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 02 April 2012 - 11:29 PM

பாரின்கோபா சொகய அமதுறான் Posted Image


நாங்க எல்லாம் வீராப்புக் காட்டி அழிஞ்சது தான் மிச்சம். அவன் பேக்கு மாதிரி நடிச்சு நடிச்சே செம பிகரா மடக்கிக்கிட்டு இருக்கிறான்..! பிகருகளும்.. பேக்குகளிடம் தான் மடியுங்கள். அப்ப தானே ஊரை ஏய்க்கலாம்.. மேய்க்கலாம்..! :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#7 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,184 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 03 April 2012 - 12:56 AM

நாக்கமுக்க......நாக்கமுக்க மாதிரி ஏன் இந்த கொலைவெறி........எல்லா விளம்பரமும் வியாபாரமாகாது....நான் நினைச்சது நடந்துட்டுது.......


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]