Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,473
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,855
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,259
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 66,535
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   16,866
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   10,975
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,579
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,469
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,409
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,346
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,881
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,666
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,382
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,056
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,496
   posts
  2. 33,326
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,764
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,196
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,392
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,185
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,042
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   19,515
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   52,105
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,083
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,656
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   727
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   2,671
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,703
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,060
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,032
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,600
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,832
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,730
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,389
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,060
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,153
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   81
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,943
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,682
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (337,737 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,291 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,683 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்
   ஒட்டுக்குழு அரசியல் இதுதான்.. களத்தில்.. மக்கள் என்ன தான் வதை பட்டாலும்... ஹிந்தியன் வென்றால்.. ஹிந்தியனுக்கு வால்பிடிப்பது.. என்ன தான் இனப்படுகொலை செய்தாலும்.. சிங்களவன் வென்றால்.. சொறீலங்காவை நேசிப்பது.. புலிகளை.. இவங்க எல்லாருக்கும் எதிரியாக்கி.. தமிழ் மக்களிடம் அவர்களை வளர்த்து விடுவது... ஒட்டுக்குழுக்கள் விரும்பாத விளைவு அந்தக் கடைசி விளைவு.. அதை சகிக்க முடியாமல்.. தொடர்வது... காழ்புணர்வு  காட்டிக்கொடுப்பு சரணாகதி எஜமான விசுவாச ஒட்டுக்குழு வாழ்க்கை.
  • இளமை புதுமை பல்சுவை
   பிப்ரவரி 10: எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..   எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்  மறைந்த தினம் இன்று  . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் . பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார் . அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . அந்த கதிரின் பண்புகள் புரியாததால் அவர் அப்படி அழைத்தார். அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது ,"எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !" என்று அழுத்தமாக மறுத்தார். அவை புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார் ;நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள் ,ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர்
   காப்புரிமை செய்யவில்லை .மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் . அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ;அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார் . உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின்  நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய்  கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார்.  பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் மறைந்தார் .அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது. vikatan
  • உலக மசாலா
   உலக மசாலா: பாரம்பரிய டயட்       நியூயார்க்கைச் சேர்ந்த சமையல் கலைஞர் பஸ்க்வாலே கோஸோலினோ 168 கிலோ எடை கொண்டவராக இருந்தார். இத்தாலியில் இருந்து நியூயார்க் வந்ததில் இருந்து தினமும் ஒரு பாக்கெட் ஓரியோ பிஸ்கெட்டும் 2,3 சோடா கேன்களும் குடிப்பார். எடை வெகு வேகமாக அதிகரித்துவிட்டது. எடை அதிகரிப்பால் எந்த நேரமும் மாரடைப்பு வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துவிட்டனர். மூட்டு வலி, முதுகு வலி, அல்சர் என்று பல பிரச்சினைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கோஸோலினோ. இத்தாலிக்குச் சென்றார். அங்கே பாரம்பரியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் பிட்ஸாவின் செய்முறையைக் கற்றுக்கொண்டார். சுத்திகரிக்கப்படாத மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் என்ற 4 பொருட்களை மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் பிட்ஸா இது. இதில் வெண்ணெய் உட்பட வேறு எந்தப் பொருட்களும் சேர்ப்பதில்லை. இந்த மாவை 36 மணி நேரம் ஊறவைத்து, 12 அங்குல பிட்ஸாவாக உருவாக்கினார். தக்காளி சாஸ், பச்சைக் காய்கறிகள் சேர்த்தார். இதிலிருந்து 600 கலோரிகள் கிடைத்தன. இது மதிய உணவுக்கானது. காலையில் பல வகை தானியங்கள், பழங்கள், ஆரஞ்சு ஜூஸ், காபி எடுத்துக்கொண்டார். இரவில் காய்கறிக் கலவை, கடல் உணவு, ஒரு தம்ளர் ஒயின். ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள் கிடைத்தன. சர்க்கரை சேர்க்காமல், கலோரிகள் குறைய ஆரம்பித்தபோது தலைவலியும் கோபமும் அதிகரித்தன. சில மாதங்களில் உடல் இந்த உணவுக்குப் பழகிவிட்டது. 3 மாதங்களில் 18 கிலோ குறைந்துவிட்டது. ‘‘தினமும் பிட்ஸா சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். உடலுக்குத் தேவையான சரிவிகித சத்துகள் கிடைத்தன. 7 மாதங்களில் 46 கிலோ எடை குறைந்துவிட்டது. இடுப்பு அளவு 48 அங்குலத்தில் இருந்து 36-க்கு வந்துவிட்டது. ‘‘இயற்கையான, பாரம்பரிய உணவுகள் மூலம் எடையைக் குறைக்க முடியும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன். என்னுடைய டயட்டை மருத்துவர்களும் அங்கீகரித்துவிட்டனர். என் முகமே மாறிவிட்டது. மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். தங்களுக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்’’ என்கிறார் கோஸோலினோ. ஆச்சரியமான டயட்டாக இருக்கிறதே!   அமெரிக்காவில் வசிக்கும் சாராவுக்கு டிஸ்னியின் கதாபாத்திரங்கள் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். அவர் வளர்ந்த பிறகு, எல்லோரும் டிஸ்னி இளவரசியைப் போலவே இருப்பதாகக் கூறினார்கள். மார்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரியும் சாரா, 10 லட்சம் ரூபாயைச் செலவு செய்து 17 இளவரசி உடைகளை வாங்கினார். வார இறுதி நாட்களில் டிஸ்னி இளவரசி போல ஆடைகள் அணிந்து, வலம் வந்தார். ‘‘நான் இவ்வளவு செலவு செய்வதோ, டிஸ்னி இளவரசியாக வலம் வருவதோ என் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒவ்வொரு ஆடையையும் தயாரிக்க 6 மாதங்கள் பிடித்தது. முழுநேரமும் டிஸ்னி இளவரசியாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என்னுடைய பெரிய கண்களும் பொம்மை போன்ற உடலும் கச்சிதமாக டிஸ்னி கதாபாத்திரங்களுக்குப் பொருந்திவிடுகின்றன. பிறந்தநாள், திருமணம் போன்ற விழாக்களில் நான் பங்கேற்றால் 1 மணி நேரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, லிட்டில் மெர்மயிட், ராபுன்ஸெல், ஸ்நோ ஒயிட் என்று எந்தக் கதாபாத்திரங்களில் வரச் சொன்னாலும் நான் வந்துவிடுவேன்’’ என்கிறார் சாரா. கலக்குங்க பிரின்சஸ்!   கனடாவில் உள்ள க்யூபெக் சஃபாரிக்குச் சென்றது ஒரு குடும்பம். கார் நிறுத்தும் இடத்துக்கு பனிமான் ஒன்று வந்தது. அதைப் பார்த்த தந்தை, ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டு கேரட் ஒன்றைக் கொடுத்தார். சாப்பிட்ட பனிமான், பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சென்றது. அந்தக் குழந்தை சிறிதும் பயப்படவில்லை. தன் அப்பாவைப் போலவே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடி, கேரட்டைக் கொடுத்தது. வாங்கிச் சாப்பிட்ட பனிமான், அடுத்து காருக்குள் தலையை விட்டு கேரட்களைத் தேடியது. குழந்தை சிறிது பயந்தாலும் ஆச்சரியமடைந்தது. மீண்டும் கேரட்டைக் கையில் எடுத்தது. பனிமான் அவள் கொடுக்கும் வரை காத்திருக்காமல், கையில் இருந்து தானே எடுத்துக்கொண்டது. பிறகு அங்கிருந்து நகர்ந்தது. புது விலங்குகளிடம் குழந்தைகளை நெருங்க விடுவது ஆபத்தானது. http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D/article8217825.ece
  • செம்மை காணுமா செர்பியா?
   செம்மை காணுமா செர்பியா? - 6     முதலாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு வந்த செர்பிய இளவரசர் அலெக்ஸாண்டர் இளவரசர் ஜார்ஜ் தனக்கு அரியணையில் நாட்ட மில்லை என்று ஒதுங்க, அவர் தம்பி அலெக்ஸாண்டர் ‘செர்புகள், க்ரோட்டுகள் மற்றும் ஸ்லோவேன்களின் அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். பால்கன் போர்களில் இளவரசர் அலெக்ஸாண்டர் மிகச் சிறப்பாக வியூகம் அமைத்துப் போரிட்டு செர்பியாவை வெற்றி பெறச் செய்தார். செர்பிய சாம்ராஜ்யத் திலிருந்து துருக்கியர்கள் தங்கள் படைகளை பின்வாங்கிக் கொண்டனர். அலெக்ஸாண்ட ருக்கு பூ மழை பொழிந்து வாழ்த்து தெரிவித்தார்கள் மக்கள். முதலாம் உலகப்போர் வெடித்த காலத்தில் செர்பிய ராணுவத்தின் தலைவராக கருதப்பட்டார் அலெக் ஸாண்டர். செர்பிய ராணுவம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. ஆக்கிரமிக்க வந்த ஆஸ்திரியா-ஹங்கேரி ராணுவத்தினரை ஓடஓடவிரட்டியது. எனினும் 1915-ல் பல திசைகளிலி ருந்தும் (ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, பல்கேரியா) வந்த எதிர்ப்புகளுக்கு செர்பிய ராணுவத் தினரால் ஈடுகொடுக்க முடியவில்லை. 1918-ல் ஸ்லோவேன்கள், க்ரோட்டுகள், செர்புகள் ஆகிய வர்கள் கொண்ட குழு ஒன்று அலெக்ஸாண்டரைப் பேச அழைத் தது. இதுவே அந்தப் புதிய ராஜாங்கம் (Kingdom of Serbs, Croats and Slovenes) பிறக்கக் காரணமாக இருந்தது. இதற்குள் மன்னராகியிருந்த அலெக்ஸாண்டர், ரோமானிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். கொஞ்சம் சர்வாதி காரத் தன்மையாகவே ஆட்சியை நடத்தினார் எனலாம். புதிய அரசிய லமைப்புச் சட்டத்தை அறிமுகப் படுத்தினார். அது முக்கிய அதிகாரங்கள் எல்லாம் மன்னருக்கு தான் என்றது. ஆண்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டுப் போடலாம் என்றார். இது அப்போதைய சூழலில் சகஜம். ஆனால் தேர்தலில் வாக்களிப்பு ரகசியமானதாக இருக்காது என்றார் (ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு நுழைவு வாயில். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின் நுழைவுவாயில் வழியாகச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்!). இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற பாரிஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய நாடு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டு மல்ல அதன் எல்லைப்பகுதிகள் மேலும் கொஞ்சம் விரிவாக்கப் பட்டன. பக்கத்து நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, க்ரோவேஷியா, ஸ்லோவேனியா ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சப் பகுதிகள் செர்பியாவுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஹங்கேரி யும் பல்கேரியாவும் தன்னை எதிர்க்கலாம் என்று கருதியவுடன் செக்கோஸ்லாவாகியா மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளுடன் ஓர் உடன்படிக்கையில் கையெழுத் திட்டது செர்பியா. அதாவது இந்த மூன்று நாடுகளில் எதை வெளிநாடு ஆக்ரமித்தாலும், மற்ற இரு நாடுகளும் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துச் செயல்படும். ஆனால் உள்ளூர்க் கலவரங்கள் தான் பெருமளவில் ஏற்பட்டன. முதலில் குரல் கொடுத்தது க்ரோட்டுகள். ‘எங்களுக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள். தங்களுக்கென ஒரு தனி நாடாளுமன்றத்தை க்ரோட்டுகள் உருவாக்கிக் கொண்டனர். இந்த மோதல் மிக விபரீத நிலையை விரைவில் எட்டியது. க்ரோவேஷியாவின் விவசாயக் கட்சித் தலைவர் ராடிக் என்பவர். அந்தப் பகுதியின் மிக முக்கியத் தலைவர். க்ரோவேஷியாவுக்குத் தன்னாட்சி வேண்டும் என்ற முழக்கத்தை அதிகமாகவே வெளிப் படுத்திய இவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது செர்ப் இனத்தைச் சேர்ந்த ஒருவர். கலவரங்கள் உச்ச நிலையை எட்டின. இதைத் தொடர்ந்து மன்னர் அலெக்ஸாண்டர் சில உடனடி நடவடிக்கைகளை எடுத்தார். அரசியலமைப்பு சட்டத்தை முடக் கினார். ‘இனி எனது ஆட்சிப் பகுதி சர்வாதிகாரத்துக்கு உட்பட்டது’ என்றார். இந்த சர்வாதிகாரம் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அதற்குப் பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். தனது நாட்டின் பெயரை யுகோஸ்லாவியா என்று மாற்றினார். சர்வாதிகார ஆட்சியில் எதிர்ப் புகள் நசுக்கப்பட்டன. எனினும் பொதுமக்களிடையே ஒரு வெறுப்பு அதிகரித்து வருவதை மன்னர் உணர்ந்தார். பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். தன் உயிருக்கு ஆபத்து என்ற பயம். 1934-ல் பிரான்ஸுக்கு ஒரு முறை சென்றிருந்தார். நட்பு விஜயம். அப்போது பல்கேரியா வைச் சேர்ந்த ஒருவன் இவரைப் படுகொலை செய்தான். அலெக்ஸாண்டருக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் பீட்டர் அரியணை ஏறினார். அப்போது அவன் பதினெட்டு வயது நிரம்பாத மைனர். காலம் நகர்ந்தது. உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தலைவரின் கையில் யுகோஸ்லாவிய ஆட்சி வந்து சேர்ந்தது. (உலகம் உருளும்) http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article8217831.ece
  • இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு
   தோல்வி குறித்து தோனி கூறியது February 10, 2016  09:49 am   புனேயில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்தது. இந்தநிலையில் இது குறித்து இந்திய அணித் தலைவர் தோனி கூறுகையில், ‘சமீபத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்கள் போன்று இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது.

   சொல்லப்போனால் இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று காணப்பட்டது. நிறைய புற்கள் இருந்தன. விதவிதமாக பவுன்ஸ் ஆனது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதைவிட சிறப்பான ஷாட்டுகளை அடித்திருக்க வேண்டும். 130 முதல் 135 ஓட்டங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ என்றார்.

   இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

   முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரகானே வௌியேறினார்.

   இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய துடுப்பாட்ட வீரர்களை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. அதிக அளவில் ஸ்விங்கும், பவுன்சும் இருந்தது.

   இதனால் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அஸ்வின் மட்டும் சிறப்பாக ஆடி 31 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் இந்தியா 18.5 ஓவரிலேயே 101 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

   இதையடுத்து 102 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த போதும், 18-வது ஒவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 105 ஓட்டங்களை எடுத்து வெற்றியை எளிதாக பெற்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=76873
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,181
  • Most Online
   1,326

  Newest Member
  காஞ்சிசத்யா
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   149,923
  • Total Posts
   1,005,408