Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,380
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,837
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,193
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 68,517
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   20,385
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   10,565
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,825
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,459
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,369
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,144
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,067
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,660
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,378
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   13,718
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,139
   posts
  2. 33,021
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,719
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,171
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,354
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   17,916
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   25,901
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   18,633
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   50,581
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,073
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,630
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,565
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,454
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,630
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   9,999
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   18,821
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,580
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,470
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,655
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,378
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   18,886
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,087
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   69
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,837
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,670
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   • No posts here yet
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (335,590 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,201 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,598 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்! இலட்சிய அரசியல் செயற்பாடே மாவீரருக்கான எமது தார்மீகக் கடமையாகும்!! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்
   மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.     மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உழைத்தலுமாகத்தான் இருக்க முடியும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆவணப்படுத்தல், ஆட்சி மாற்ற அரசியல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்கள் விவகாரம் என சமகாலத்தின் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மாவீரர் நாள் செய்தியின் முழுமையான வடிவம் : இன்று தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நமது தாய்மண்ணின் வீரர்களின் நினைவு நாள். தமக்கென வாழாது, தம் மக்களுக்காகவே வாழ்ந்து, களம் பல கண்டு போராடி நம் மண்னில் விதையாய் வீழ்ந்து விட்ட மாவீரர்களை நமது இதயக் கோவிலில் வைத்து நாம் பூசிக்கும் நாள். வீரத்துக்கும் ஈகத்துக்கும் அகராதியில் புதிய அர்த்தம் தந்து, ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை வேட்கையை உலகறியச் செய்த உத்தமர்களின் நினைவுகளில் நாம் உணர்வுடன் மூழ்கிக் கிடக்கும் நாள். தம் குருதியால் எம் மண்ணைத் தோய்த்து விடுதலை உணர்வு என்ற பயிரை ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் விதைத்து விட்டு வரலாற்றில் இடம் பிடித்து விட்ட எமது நாயகர்களின் திருநாள். மாவீரர்களை நினைத்து உருகி அவர்களை தமது நெஞ்சக்கூட்டினில் இருத்தி மக்கள் அவர்களுக்கான மரியாதையினை வழங்கும் இன்றைய நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து தனது மரியாதை வணக்கத்தைத் தலை சாய்த்துத் தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றா, இரண்டா, பத்தா, நூறா, ஆயிரமா... இல்லையே.... ஆயிரம் ஆயிரமாய் 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களையல்லவா நமது தேசம் தனது விடுதலைக்காய் ஆகுதியாய்க் கொடுத்திருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பை முறியடித்து, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசில் எமது மக்கள் பாதுகாப்பாக, கௌரவமாக, சமத்துவமாக, இனஅழிப்புக்கு உட்படாது தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்தவாறு ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற கனவுடன்தானே எமது மாவீரர்கள் களமாடினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் இருந்த காலத்திலெல்லாம் எமது மக்கள் தமது நெஞ்சினை நிமிர்த்தியவாறு «நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்» என்று அறைகூவியபடி, போராடும் மக்கள் என்ற தார்மீகச் செருக்குடன் வாழ்ந்தமைக்கு நமது மாவீரர்கள்தானே வழி சமைத்துக் கொடுத்தார்கள். எமது தேசியப் பிரச்சனையை இது ஒரு சிறு உள்நாட்டுப் பிரச்சனை என்று தட்டிக் கழிக்க முயன்றவர்களுக்கெல்லாம் - களத்தில் நின்று தாம் நடத்திய வீரமும் ஈகமும் நிறைந்த போராட்டத்தின் மூலம் - அதனை அனைத்துலகச் சட்டங்களுக்கு உள்ளாகும் அனைத்துலகப் பிரச்சனையாக உருவெடுக்க வைக்க எமது மாவீரர்கள்தானே வழிகோலினார்கள். அரசற்ற தேசமாக இருக்கும் ஈழத் தமிழர் தேசம் தனக்கென்றதோர் அரசினை அமைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே நமது தாயகத்தினதும் மக்களதும் இருப்பை உறுதி செய்யும் என்பதனை, வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு உய்த்துணர்ந்த சுதந்திர வேட்கையுடன்தானே எம் மாவீரர்கள் நமது தாயகத்தை எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப் போராடினார்கள். எமது மாவீரர்களின் நினைவுகள் தமிழ் மக்களிடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும். மாவீரர்கள் எமது மக்களின் கூட்டு நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். எமது மக்களின் விடுதலை உணர்வுக்கு அவர்கள் கவசமாக இருக்கின்றார்கள். மாவீரர்கள் நினைவுகள் எமது மக்களிடம் நிறைந்திருக்கும் வரையில் அவர்களை அடிமை கொள்ள முடியாது என்பதனை எதிரி புரிந்து வைத்திருக்கிறான். மாவீரர்கள் நினைவுகள் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும்வரை தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் தனது நோக்கம் நிறைவேறப்போவதில்லை என்பதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறான். மாவீரர்கள் நினைவுகள் அடுத்த தலைமுறைக்குக் காவிச் செல்லப்படுவதனை எப்பாடுபட்டாவது தடுத்து விட வேண்டும் என்பது அவனது திட்டமாக இருக்கிறது. மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்துத் துவம்சம் செய்ததும், மாவீரர்களுக்கு மக்கள் வணக்கம் செலுத்த விடாது தடைகள் இடுவதும் இந்த நோக்குடனேயே மேற்கோள்ளப்படுகின்றன. மாவீரர்களின் வரலாற்றையும் ஈகத்தையும் நினைவுகளையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்து விட வேண்டும் எனத் துடிப்பதும் இதன்பாற் பட்டுத்தான் நடைபெறுகிறது. மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக எதிர்காலத் தமிழர் தலைமுறைக்குச் சித்தரிப்பதே சிங்களத்தின் திட்டமாக இருக்கிறது. தற்போதய தலைமுறைத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்குள் வைத்திருந்து, அவர்களை அச்சத்தின் பிடிக்குள் அழுத்தி வைத்திருந்து, மாவீரர்கள் பற்றிய நினைவுகளை போர்க்காலத்தில் வாழ்ந்த மக்களுக்குள் மட்டுப்படுத்தி விட்டால், அடுத்த தலைமுறையினருக்கு மாவீரர்களைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்கும் வகையிலான அரச பாடப்புத்தகங்களை உருவாக்குவதும், அதன்வழி மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக வரலாற்றில் நிலைநிறுத்துவதும் சாத்தியமானது என சிங்கள இனவாத மூளை சிந்திக்கிறது. ஓர் ஆயுதம் தாங்கிய குழுவினர் மக்களைக் கொன்றார்கள், தலைவர்களைக் கொன்றார்கள், இனச் சுத்திகரிப்புச் செய்தார்கள், வரி விதித்தார்கள், தமது ஆயுதங்களால் மக்களைப் பயமுறுத்தி கொடுங்கோலாட்சி நடாத்தினார்கள் - இக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களை சிங்கள தேசத்தின் படைகள் பெரும் உயிர்த் தியாகம் செய்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கினார்கள் என - மாவீரர் வரலாற்றை பயங்கரவாதிகளின் வரலாறாகச் சித்தரிக்கும் திட்டம் சிங்களத்திடம் இருக்கிறது. மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போருக்கு இராணுவப் பெயர்கள் எதுவும் சூட்டப்படாது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என இத் தமிழின அழிப்புப் போர் அழைக்கப்பட்டமையினை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இத்தயைதோர் நிலை உருவாகாது தடுக்க வேண்டியது தற்போதய தலைமுறையினராகிய எமது கைகளில்தான் இருக்கிறது. மாவீரர் வீரங்களையும், ஈகங்களையும் மாவீரர்களின் மனிதத்துவம் நிறைந்த வாழ்வு குறித்த ஆயிரக்கணக்கான உண்மைக் கதைகளையும் உரிய ஆவணங்களாக்குவது தற்போதய தலைமுறையினரின் பொறுப்பாக இருக்கிறது. இப் பெரும்பணியை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது தலைமுறையைச் சேர்ந்த அறிஞர்களதும், எழுத்தாளர்களதும், படைப்பாளிகளதும் கைகளில் உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமன்றி உலகின் முக்கியமான மொழிகளில் எல்லாம் இப் படைப்புகள் வெளிவர வேண்டும். ஆய்வுகளாக, வரலாற்று ஆவணங்களாக, வாழ்க்கைக் குறிப்புகளாக, சிறுகதைகளாக, புனைவுகளாக, நாடகங்களாக, திரைப்படங்களாக, கவிதைகளாக, பாடல்களாக, ஓவியங்களாக, புகைப்படங்களாக – என்னென்ன வடிவங்களில் மாவீரர் வாழ்வும் அவர்தம் கனவும் பதிவு செய்யப்பட முடியுமோ அந்தந்த வடிவங்களில் எல்லாம் அவற்றைப் பதிவு செய்து நமது அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டியது நமது தலைமுறையின் பொறுப்பாகும். இதனை நாம் மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை வணக்கத்தின் முக்கிய பகுதியாக நாம் கொள்ள வேண்டும். அன்பான மக்களே! தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது ஒரு சிக்கலான காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மாவீரர்களின் வீரத்தாலும், ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் இலக்கைச் சிதைத்து விடும் வகையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மகிந்த இராஜபக்சவின் கொடும் கோலாட்சியினை அகற்றவும், தமிழின அழிப்புடனான கொடும் போரைத் தமிழ்மக்கள் மீது ஏவி விட்டமைக்குத் தண்டனை வழங்கவும்; தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பைக் கொண்டே தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை இல்லாதொழிக்கும் வகையிலான செயற்பாடுகளில் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர். மகிந்த இராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டமையின் ஊடாக சிறிலங்கா அரசு அனைத்துலக ரீதியிலான தனிமைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் தற்போதய அரசாங்கத்தை உலகின் பலம் மிக்க நாடுகள் ஆதரிக்கின்றன. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து நிற்கிறது. இந்தியாவின் ஆதரவும் புதிய ஆட்சியாளர்களுக்கு உண்டு. சீனாவுடனும் நெருக்கடி தராத வகையிலான உறவை புதிய ஆட்சியாளர்கள் பேணிக் கொள்கின்றனர். இலங்கைத்தீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வெறுமனே உள்நாட்டில்; நடந்த விடயம் அல்ல. இது அனைத்துலக அரங்கில் வகுக்கப் பட்டதொரு திட்டம். இத் திட்டத்தில் சிங்களத் தலைவர்கள்; மட்டுமல்ல தமிழ், முஸ்லீம் தலைவர்களும் பங்காளர்களாக இருந்தார்கள். இவ் ஆட்சி மாற்றத் திட்டத்தின் பிரதான நோக்காக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுகளின் நலன்களுக்கும் ஏற்பவே சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை அமைய வேண்டும் என்பதில் இந் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இதற்கு தென்னிலங்கையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பது இந் நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது தென்னிங்கையின் கடும் போக்காளர்கள் சிங்கள தேசியவாதத்தை ஆயுதமாகக் கொண்டு தற்போதய ஆட்சியினை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது என்பதில் இந் நாடுகள் மிகக் கவனமாக இருக்கின்றன. இதேவேளை மகிந்த இராஜபக்சவினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மைத்திரி - ரணில் - சந்திரிகா அணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்குச் சில வாக்குறுதிகள் வழங்கியிருந்ததாக அறிய முடிகிறது. இந்த வாக்குறுதிகள் எவை என்பதனை கூட்டமைப்புத் தலைவர்கள் பகிரங்கப்படுத்தாவிடினும்கூட இவை தொடர்பாக செய்திகள் வெளியில் கசிந்த வண்ணம்தான் உள்ளன. இதில் அரசியல் தீர்வு குறித்த விடயம் முக்கியமானது. 2016 ஆம் ஆண்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தர் அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட்டு தேசியம், தாயகம் சுயநிர்ணம் என்று நிலையின்பாற்பட்ட ஒரு சமஸ்டித்தீர்வு என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சமஸ்டியும் இல்லாத ஒற்றையாட்சியும் இல்லாத ஒரு புதியதோர் அரசியல் அமைப்பை யாத்து அதனையே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வாகவும் ஏற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றத் தேர்தலின் முன்பே கூட்டமைப்புத் தலைமை சம்மதம் வழங்கி விட்டது என்பது தெளிவாகி வருகிறது. எவ்வாறு அமெரிக்காவால் ஜெனிவாவில் முன்மொழியப்பட்ட நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மான வாக்கியங்கள் அமைந்திருந்தனவோ அதே போன்றதொரு அணுகுமுறையாகத்தான் இதுவும் அமையக் கூடும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அடிப்படையில் ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினையே பரிந்துரைத்திருந்தது. அதேவேளை அதனை ஒரு கலப்புப்பொறிமுறை என வாதிடுவதற்கும் இடமளிக்கும் வகையில் சில அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன. இதே போன்று ஆக்கப்படும் புதிய அரசியலமைப்பும் ஒற்றையாட்சி என்பதனை வெளிப்படையாகக் கூறாது விடினும் அடிப்படையில் ஒந்றையாட்சி அரசியல் அமைப்பாகவே அது இருக்கும். மத்தியில் இருந்து மேற்கொள்ளப்படும் சில அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு இதுவும் சமஸ்டிதான் என வாதிடுவதற்கும் இந்த அரசியலமைப்பு இடம் தரக் கூடும். இங்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதோ, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதோ, தமிழ் மக்களுக்கு இயல்பான சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதோ சிங்களத்தால் அங்கீகரிக்கப்படப் போவதில்லை. இத்தகைய அங்கீகாரம் இல்லாத எந்த அரசியல் ஏற்பாடுகளும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. இவ்விடத்தில் மாவீரர் கனவுகள் குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். மாவீரர்களின் ஆன்மா அமைதியாக உறங்குவதற்கு ஏற்ற வகையில் நமது அரசியற் செயற்பாடுகள் அமைய வேண்டும். மாவீரர்கள் எம்மிடம் வேண்டுவதெல்லாம் இலட்சிய அரசியல் செய்யுங்கள் என்பதுதான். இங்கு இலட்சிய அரசியல் என்பது ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும் அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உழைத்தலுமாகத்தான் இருக்க முடியும். மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இந்த அடிப்படைகளை நாம் கைவிட முடியாது. அவற்றை ஒரு தார்மீகக் கடமையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு தமிழரது அரசியற் தலைமைகளுக்கு உண்டு. இந் நிலைப்பாடுகள் தொடர்பாக எமது தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும். தேர்தல் காலக் கோசமாக மட்டும் இவை அமையக் கூடாது. நாம் மாவீரர்களை நினைவு கூருதல் உணர்வுபூர்வமாக மட்டும் அமைந்தால் போதாது. அது அரசியல் ரீதியிலும்; அமைய வேண்டும். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிர் ஈந்தவர் என்பதற்காக மட்டும் செலுத்தும் வணக்கமாக அமையாமல் அவர்; என்ன நோக்கத்துக்காக உயிர் ஈகம் செய்தார்கள் என்பதனை எண்ணிப் பார்த்துச் செய்யும் அரசியல்ரீதியான வணக்கமாகவும் அமைய வேண்டும். தோழர்களே! எம் அரிய மாவீரர்கள் எமது சொந்த மண்ணின் விடிவுக்காகவே போராடினார்கள். வேறு எவரது தாயகத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கு அவர்களிடம் துளியளவும் இருந்ததில்;லை. இனச் சுத்திகரிப்பு எண்ணம் அவர்களிடம் என்றும் இருந்ததில்லை. சிங்கள தேசத்தின் இருப்பை மாவீரர்கள் அங்கீகரித்தார்கள். முஸ்லீம் மக்களுடன் ஓர் இணக்கமான அரசியல் உடன்பாட்டுக்கு வருவதையே அவர்கள் விரும்பினார்கள். வடகிழக்கு நிலப் பரப்பு முஸ்லீம் மக்களினதும் தாயகம் என்றே அவர்கள் கருதினார்கள். போர்க்காலத்தில் முஸ்லீம் மக்களை வெளியேற்ற வேண்டிய நிiலை ஏற்பட்டமை குறித்து மனம் வருந்தினார்கள். மாவீரர் கனவுகளை நனவாக்குவதற்கு எம்மால் முடிந்த அனைத்துக் கருமங்களையும் நாம் ஆற்ற வேண்டும். நமது உடனடிப்பணி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து சிறிலங்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அனைத்துலக நீதி விசாரணைக் கோரிக்கையினை வலுப்படுத்துதலாக இன்று இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழம் என்ற நிலைப்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகவே அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு ஆதரவுத்தளத்தை விரிவு படுத்தி அதற்காக உழைப்பதும் நமக்குரிய மற்றைய உடனடிப்பணியாக அமைகிறது. அத்தகைய நிலைப்பாடு ஒன்றே எமது தேசியப் பிரச்சனை தொடர்பாக உண்மையான ஜனநாயகத்தின் பாற்பட்டதாக அமைய முடியும். மாவீரர் தம் நினைவுகள் எமது பணிகளுக்;கு உத்வேகம் அளிப்பதாக! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாதம் ஊடகசேவை
  • தடைகளை தாண்டி யாழ். பல்கலையிலும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!
   யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய மணி ஒலிக்கவிடப்பட்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இராணுவ புலனாய்வாளர்களின் பிரசன்னத்துக்கு மத்தியிலும் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.                     http://www.seithy.com/breifNews.php?newsID=145749&category=TamilNews&language=tamil யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு, பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அஞ்சலியை தாயக பாடலுடன் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவுகூர்ந்தனர். http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo1E.html
  • மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை விதிக்கக் கூடாது! - ஆனந்தசங்கரி
   மாவீரர் தினம் அனுஷ்டிப்பதனை அரசாங்கம் தடைசெய்யக்கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1989ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கால்நூற்றாண்டுக்கு மேலாக மாவீரர் தினம் சில சமய நிகழ்வுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவதை தடுப்பது அரசாங்கத்தின் புத்திசாதுரியமான செயலன்று.     அன்று தொட்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களால் அந்தந்த இடத்தில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதாகவோ பெருமளவிலோ இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பிரபாகரனின் பிறந்த தினம் கார்த்திகை மாதம் 26ஆம் திகதியாகும். அப்படியிருந்தும் அவர் கார்த்திகை மாதம் 27ஆம் திகதியையே மாவீரர் தினமாக நினைவுகூர வேண்டுமென கட்டளை பிறப்பித்திருந்தார். பல இளைஞர்கள் சரியாகவோ பிழையாகவோ தாம் ஒரு பெறுமதிமிக்க தேவைக்காக தம் உயிரை அர்ப்பணிப்பதாக கருதினர். இந்த இளைஞர்களின் உறவுகளை பொறுத்தவரை அவர்கள் பெரும் நல்ல நோக்கத்துக்காகவே தம் உயிரை அர்ப்பணித்துள்ளனர் என கருதுகின்றனர். இவ் உறவினர்களை புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணமுடியாது. தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதாகவும் அவர்களுக்காகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் சில சமய கிரியைகள் செய்வதாகவே கருதுகின்றனர். அதேபோல்தான் நாமும் வருடாவருடம் எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்காக சமய ரீதியான கிரியைகளை செய்கின்றோம். இந்நிகழ்வு ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசாங்கம் கூட இந்த மக்களுடைய உரிமையில் தலையிடக்கூடாதென்று கருதுவதே நியாயமானதாகும். இந்த நிகழ்வுகளில் அரசு தலையிடாமல் இருப்பதற்கு பொருத்தமான இன்னுமொரு காரணம் யாதெனில் இந்த தியாகிகளின் உறவுகள் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருக்கின்றார் என்றும் அந்த அடிப்படையில் சேர்த்த பெருந்தொகை பணம் அவரிடம் நம்பிக்கை நிதியமாக இருக்கின்றதென நம்புகின்றனர். பிரபாகரன் உயிருடன் இல்லையென்பதை அரசு ஆதாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் இவ்வாறு பெருந்தொகை பணத்தை நம்பிக்கை நிதியமாக வைத்திருக்கின்றவர்கள் மிகச் சிறந்த வகையில் முதலீடுகளை செய்யலாம். இந்த விண்ணப்பத்தை நான் விடுப்பதற்கு முன்பு தற்போது பிரபாகரன் இல்லாதபடியினாலும் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமையாலும் சமாதானம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்பதனாலும் இவர்களுடைய இந்த நிகழ்வுகளில் அரசாங்கம் தலையிட வேண்டாமென வினயமாக வேண்டுகிறேன்.   http://www.seithy.com/breifNews.php?newsID=145728&category=TamilNews&language=tamil
  • உலகெங்கும் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!
   தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்டஉலகில் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர் உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் தடைகளையும் மீறி சில தரப்பினரால் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினமும் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்குமாறு வடக்கில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, மாவீரர் தின நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடம் அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   http://www.seithy.com/breifNews.php?newsID=145743&category=TamilNews&language=tamil
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,137
  • Most Online
   1,326

  Newest Member
  இ.பு.ஞானப்பிரகாசன்
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. Panangkai
   (38 years old)
  2. kaduvan
   (24 years old)
  3. Seeraalan
   (33 years old)
  4. smkonli
   (28 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   146,147
  • Total Posts
   991,854