Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,872
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,278
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 357,887
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   68,406
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,848
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,733
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,550
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,861
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,316
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,928
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,678
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,401
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,747
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,249
   posts
  2. 33,880
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,803
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,554
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,813
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   27,000
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,639
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   55,115
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,146
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,691
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,686
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,628
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,658
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,162
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,522
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,678
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,779
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,887
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,400
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,520
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,199
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,384
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,710
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (345,583 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,458 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,891 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • குறிஞ்சி மலர்கள் பாடசாலை என்பது ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு எப்படி நற் பிறஜையாக கொடுக்க வேண்டும் என்பது  இப்போதுள்ள மக்கள் யாவரும் அறிந்ததே அப்படிபட்ட பாடசாலையில் ஆசிரியராக பணி புரிபவர்தான் நான் சந்திரன் மாஸ்டர்  இது வரையில் பல பாடசாலைகள் மாறிவிட்டேன் எதிலும் நிரந்தரமில்லை அது என் தொழிலுக்கு கிடைக்கும் உயர்வு என்பதைவிட எனக்கு கிடைக்கும் அரச பரிசுதான் அது அதிபர் ஊடாக முறைப்பாடு வலயத்திற்கு சென்று வலயம் என்னை இடம்மாற்றி விடுகிறது என்பதையும் விட தூக்கியெறிந்து விடுகிறது .சக ஆசிரியர்கள்  அதிபருக்கு விஸ்வாசமான ஆசிரியர்களுடன் முரண்படும் போது அதாவது அவர்கள் பாடவேளைக்கு போகவில்லை என்றால் அதை நான் கேட்கும் போது பிரச்சினையாகிவிடும் எனக்கு நேர்மையாக வேலை செய்யவேண்டும் எடுக்கும் சம்பள‌த்திற்க்காவது. இப்படி அடிக்கடி இடமாற்றம் . இதை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை  இட மாற்றம் பெற்ற நான் அன்று மலையகப்பாடசாலைக்கு ஆசிரியராக செல்கிறேன். மலையகம் என்ற சொல்லை சொல்லில் சொல்வதை விட பார்க்கும் போது ஆஹா என்ன அழகு விப‌ரிக்க வார்த்தைகள் தேடுகிறேன் தமிழ் வாத்தியாராகிய நானே  விண்னை தொடும் மலைகளும் வெளிச்சமிலா வானமும் ( வீடுகளும் ) உஸ்ணம் இல்லாத குளிர்காற்றும் உடம்பை இறுகவைக்கும் குளிர் உறங்காமல் விழ்த்து நின்று கொண்டிருக்கும் தேயிலை மரங்களால் நிறைந்து  பச்சை பசேல் என  இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும்  இலங்கையின் ஏற்றுமதிக்கு பெயர் சொல்லும் பகுதியாகவும்  மிளிர்கிறது மலையகம். 
   மலையகத்தில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்தது சந்தோசமே ஏனென்றால் இலங்கையில் படிப்பு விகிதத்தில் மிகவும் பிந்தங்கியுள்ள ஒரு இடம்  தான் மலையகம் அன்று பாட்சாலைக்கு முதன் முதலாக காலடி எடுத்து வைக்கிறேன்  எல்லாம் புதிய முகங்கள் பேச்சு மொழியில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தாலும்  எழுத்து  மொழி ஒன்று தானே  அன்று பாடசாலையில் வரவு இடாப்பில் கையொப்பமிட்ட நான்  அதிபரின் பணிப்புகமைய எனக்கு உயர் தரம் கலைப்பிரிவு  வழங்கப்பட்டது. வகுப்பு ஆசிரியராக வகுப்பு சென்றேன் கொஞ்சம் அதிர்ச்சி தான் என்றாலும் வகுப்பு முழுவதும்  நிரம்பி வழியும்  40, 50 மாணவர்களை பார்த்து பழகிய எனக்கு அங்கு வெறும் பதினைந்து மாணவ மாணவிகள் மட்டுமே வகுப்பில் வரவேற்றார்கள் என்னை . பரவாயில்லை இத்தனை மாணவர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் வணக்கம் சொல்லப்பட்டு  அறிமுகம் தொடங்கியது   என்னை அறிமுகப்படுத்தினேன்  எனது பெயர் சந்திரன் பிறகு  மாணவர்களின் அறிமுகம் தொடங்கியது  ஒவ்வொருவரும் தங்கள் முளுப் பெயர்களையும் சொல்லி அறிமுகமானார்கள் அந்த அறிமுகத்தில்  தனது எதிர்க்காலத்தையும் சேர்த்து சொன்ன சித்தராவின் அறிமுகம் எனக்கு பிடித்திருந்தது படிப்பில் கெட்டிக்காரி சாதிக்கவேண்டும் என்பதை விட அவர்கள் ச‌மூகம் இந்த உலகில் மாற்றம் பெற வேண்டும் என்ற நினைப்பு அவள் அறிமுகத்தில் அவள் மனதில் புதைந்து கிடப்பதை என்னால் உணரமுடிந்தது. 
   அவள் தான் அந்த வகுப்பில் முதலாம் பிள்ளை என்பதயும் தெரிந்து கொண்டேன். இப்படியான பிள்ளைகளை கண்டால் அவர்களை ஊக்குவித்து இந்த உலகில் பெயர் சொல்லும் பிள்ளையாக வளர விட எனக்கு ஆசை அதற்க்கான சகல உதவிகளையும்  நான் செய்வது வழமை . 
   அவள் கொப்பிகளை பார்த்த போது ஒவ்வொரு பக்க‌ங்களிலும் வாசகங்கள் அவை செஞ்சை தொட்டு விடும் திருக்குறள் போல் எனக்கும் ஒலிக்கும் இரட்டை வரிகளில் இருக்கும் ஆயிரம் அர்த்தங்கள் 
   சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
   சுடும்போது  எங்களை நினையுங்கள் 
   கணக்கு தீர்க்கலாம் தீர்க்க முடியாததே 
   எங்கள் வாழ்க்கை கணக்கு  வந்து பார்க்காதீர்கள் 
   வாழ்ந்து பாருங்கள்  கேட்க்காத பேச்சும் வேண்டாத ஏச்சும் 
   காசு இல்லாமல் தினம் தினம் வேண்டிக்கொள்கிறோம் (கேட்கிறோம் )   தேர்த்தல்  வந்தால் மட்டும் தேர் இழுக்க வருகிறார்கள் 
   தேவை முடிந்த பின் தேர்கள் நடு வீதியிலே சித்தாராவும் தனது சந்தேகங்களை கேட்டும் தேடல் மூலமும் பெற்று தனது எதிர்காலத்தின் நோக்கை நிறைவு செய்து வந்தாள் சித்ரா.பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதில்லை சித்தரா அனால் தனது செவிப்புலனால் அனைத்தையும் அறிந்து கொள்கிறாள்  பாடசாலை நாட்கள் தொடர்ந்தன சித்ரா பாடசாலைக்கு வருவது மிக குறைவாகவே இருந்தது பல மாணவர்களிடம் விசாரித்தேன்  அவள் வீடு மிக தூரத்தில்  இருப்பதாக சொன்னார்கள் .விடுமுறை நாளான அன்று அவள் வீடு தேடி செல்கிறேன் தலைக்கு ஒரு தொப்பி அது காதுகளை இறுக்கியவண்ணமும் ஒரு போர்வையுடனும் நடந்து செல்கிறேன் கரடு முரடான பாதைகள் கால்களில் குத்தும் முண்டுக்கற்களினாலேயே சென்றுகொண்டிருந்தது  அவள் வீட்டுக்கான பாதை கிட்ட தட்ட மூச்சு வாங்கும் நிலைதான் எனக்கு சுமார் 3 கிலோமீற்றர் நடக்கவேண்டும் இருபக்கமும் அடர்ந்த காடுகள்  கொழுந்து ப‌றிக்க  செல்லும் பெண்கள் கூடையுடன் ஊர்ந்து செல்லும் வண்டுகள் போல வரிசையாக கொழுந்து பறிக்க செல்கின்றனர்.
   அந்த வானாந்தரத்தினுள் இருக்கும்  பயங்கரமான சம்பவங்கள்  அங்கு சென்ற சில நாளிலேயே முற்று முழுவதுமாக அறிந்து கொண்டேன் அது ப‌லருக்கும் தெரியவாய்ப்பில்லை அவைதான் இவை (மலையத்தினுள் மூழ்கி கிடக்கும் மர்ம‌ முடிச்சுகள் எனலாம் ) நாம் இன்று குடிக்கும் தேநீர்  கோப்பைக்குள் எத்தன பேரின் உடலில் உறிஞ்சப்பட்ட உழைப்பு உதிரம் தேநீராக வருகிறதென்பது பலருக்கு தெரியாது  ஏற்றத்தில் இருக்கும் தேயிலை கொழுந்தின்  வளர்ச்சி இற‌க்கத்தில் இருக்கும் இவர்கள் வாழ்க்கை வளர்ச்சி  இது எப்போது மாறும் என்ற கேள்வி மனதுக்குள் இருந்தாலும் இந்த மக்கள் அன்று வெள்ளைக்காரன் காலத்தில் 19ம் நூற்றாண்டில் அடிமைகாளாக தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களாக சொல்லப்படுகிறது அன்று எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல்   தான் பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.  அவர்களை வைத்து உழைக்கும் வர்க்க உல்லாச வாழ்க்கை இவர்களுக்கு தினம் தினம் உயிருடன்  ஊசலாடும் வாழ்க்கை  அட்டை பூச்சிகளுக்கு காசு பெறாமல் தினம் தினம் ரத்த தானமும் நுளம்பு கடியும் குளவி குத்தலும்  சிறுத்தை தாக்குதலும்  என்று வழக்கு தொடரமுடியாத வன ஜீவ ராசிகளின் தாக்குதல்கள்  தொடர்ந்த வண்ணமே உள்ளது.
   இவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் வாழ்கிறார்கள்  இதை யாரும் கண்டு கொள்வதில்லை அவர்களுக்கு தேவை இவர்க்ளின் உழைப்பு மாத்திரமே இவ்ர்களோ கொய்யும் கொழுந்தில் தான் வாழ்கிறார்கள் மழை , வெயில்  என்று பாராமல் கொழுந்து பறித்தாகவேண்டும்   அன்றய நாள்  கொய்யப்படும் நிறைக்கே படி ( காசு )  
   இத்தனை தூரம் கடந்து பாடசாலை வரும் அந்த மாணவின் நிலையை நினைத்தும் இந்த மக்களின் வாழ்க்கையை நினைத்தும்  அவள் வீட்டுத்தொகுதிக்கு நெருங்கினேன் லயன் வாழ்க்கை தொடர் வீடுகள் வயது முதிர்ந்த நிலையில் தள்ளாடுவது போல் இருந்தது  தகர கூரைகள் அதில் ஆயிரம் ஓட்டைகள்  தொடர் வீடுகள் உள்ளே போனால் திருமப முடியாது சமையல் அறை ,தூங்கும் அறை என்றெல்லாம் இல்லை எல்லாம் இதற்குள்ளே  எத்தனை பேரானாலும் இந்த கூட்டுக்குள்ளே வாழ வேண்டும்   இது தான் லயன்கள் என்று சொல்லபடுகின்ற வீடுகள். 
   . அவளின் வீட்டின் கதவை விசாரித்த பின்பே  தட்டினேன் ஏனென்றால் நிரலில் பல வீடுகள் ஒரே மாதிரியானவை என்றபடியால்   அவளுக்கு ஆச்சரியம் என்ன சார்  இவ்வளவு தூரம் என்றாள்  உன்னை தேடித்தான் வந்தேன் பிள்ளை உள்ளே வாங்கோ சார் உள்ளே கூப்பிட்டாள் அவள் வீட்டை தலைவணங்கியே செல்ல வேண்டும் வீட்டுக்கு நிலையில்லை உள் நுழைந்தேன் அங்கே அவள் அம்மா படுத்த படுக்கையாக இருந்தார்  என்னால் உணர முடிந்தது குளவி தாக்கியதில் அவள் அம்மாவும்  காயப்பட்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது இது அவரகளுக்கு சாதரண ஒன்று தான்  ஆனால் அது வயது முதியவர்களை தாக்கும் போது அது உயிரிழப்பாக கூட அமையும் .அம்மாக்கு உடம்புக்கு முடியவில்லை இதனால் தான் சார் நான் பள்ளிக்கு  வரவில்லை  என்றாள் அப்பா எங்கே என்று கேட்க அப்பா இறந்து விட்டார் சார் நாங்கள் ஐந்து பேர் அம்மா அப்பா நான் தம்பி ஒன்று  தங்கை ஒன்று அப்பா தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறும்போது சறுக்கி கீழே விழுந்து விட்டார் அடுத்த தம்பி தோட்ட முதலாளி வீட்டுக்கு வேலைக்கு கூட்டித்து சென்றார் அவன் படிக்கவும் இல்லை சம்பளமும் கொடுப்பதில்லை  அம்மாவும் அவரிடம் எதுவும் கேட்பதில்லை கேட்டால்   அவன் ஆண்பிள்ள  தானே என்று சொல்லுவா  அம்மா உழைத்து தான் சார் நானும் தங்கையும் படிப்பதாக கூறினாள் இனி அம்மாவால் முடியாது போல் தெரிகிறது அதனால் நான் பள்ளிகூடத்திற்கு வரமுடியாது என்றாள் சித்தரா அவள் அம்மாவோ உனக்கு பைத்தியமா பிள்ளை நீ படி உன்னை படிக்க வைப்பது தான் எனது லட்சியம் என்றாள். அவள் அம்மாவோ   
   இல்லை பிள்ளை அப்படி சொல்லாத  நீ படித்தால்  தான் உன் குடும்பத்தை  நல்ல நிலைக்குக் கொண்டு வந்து என்று  நானும் சொல்ல அவள் அம்மாவும் ஆமாங்க துரை இவள படிக்க வச்சி வேற வேலையில சேர்க்கணும் என்று சொல்ல அவளோ இல்லையம்மா இனியும் உன்னால் முடியாதுதானே தங்கச்சி மட்டும் படிக்கட்டும் என்றாள் என் மனம் உள்ளே அவள் எதிர்க்காலத்தை எண்ணி சரிகிறது என் மனம்  .நானும் அப்படி நினைக்காதே நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு அவள் அவள் வீட்டு செலவுக்காக சட்டைப்பையில் இருந்து 2000 ரூபா காசை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று  கொடுக்கிறேன்  வாங்க மறுத்துவிட்டார்கள் பரவாயில்லை அம்மா வைத்திய செலவுக்காவது வைத்துகொள் என்ற அவள் அம்மா தலையணையில்  வைத்து விட்டு  அவள் கூட்டை விட்டு (வீட்டை )  வெளியே வந்தேன்  குடிப்பதற்கு பீலி தண்ணீரும்  மின்சாரம் இல்லை  இருட்டில் சிமிளி விளக்கில் தொலைகிறது இவர்கள் வாழ்கையை எண்ணி பெருமூச்சுடன் அவ்விடத்தை வீட்டு அகல்கிறேன் .    இரண்டு வாரங்கள் கழித்து அவள் அம்மா தேயிலை கொய்த இடத்தில் விழுந்து மரணமாகிறாள் பாடசாலையில் பயின்ற மாணவி என்பதற்க்காக பாடசாலை மாணவ மாணவிகள் அதிபர் ஆசிரியர்கள்  அவள் வீடு சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறி விட்டு  வந்தோம் இருந்தாலும் நன்றாக படிக்கும் ஒரு மாணவியை   இழக்க நான் விரும்பவில்லை  அவள் படிப்பை தொடரவேண்டும் என்று நிணைப்பில் அவள் பயில்வதற்க்கு தேவையான பொருட்களை  வாங்கி கொண்டு அவள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக  செல்கிறேன்  அப்போது அவ்வழியாக தேயிலை கொய்ய  வரிசையாக பெண்கள் தங்கள் பெயர்களை பதிய நிற்கின்றனர் . அப்போது ஒரு  குரல் வரிசையின் வழியே செவிக்கு வருகிறது எங்க சார் போறிங்க  என்னால் நம்பமுடியவில்லை சித்திரா விசித்திரமாக‌ தலையில் முக்காடும் முதுகில் பிரம்பு கூடையும் சாக்குபையை இடுப்பில் சுற்றி கட்டியவாறும்  தேயிலை பறிக்க செல்ல தயாராகி கொண்டிருந்தாள் .   வீட்டில் ஒருத்தருமில்லை சார்  அதான் உங்களை  இங்கே வைத்து கூப்பிட்டேன்  ஏன் பிள்ளை ஏன் என்று நான் வினவ  அவள் பதிலோ  எனக்கு இப்போ படிப்பு சோறு போடாது பறிப்பு தான் சோறு போடும் ஏன்றாள்  என்னால் அவள் கூற்றுக்கு பதில் சொல்ல முடியவில்லை  வாங்கி வந்த‌ பொருட்களை உன் தங்கைக்காக பயன் பெறட்டும் என்று கூறி  அவளிடம் அந்த பொருட்களை  கொடுத்துவிட்டு  பாடசாலைக்கு வந்து எனது சுய விருப்பின் பெயரில் இடமாற்ற கடிதத்தினை அதிபரிடம்  கொடுக்கிறேன் 
   ஒளிராதா வாழ்க்கைகுள் மிளிர்ந்து கொண்டிருக்கும் கொழுந்துகள் இவை   
   சாதாரண ஒரு தேநீர் கோப்பைக்குள் ஒளிந்து இருக்கும் சோகங்கள் யாருக்கும் தெரிவதில்லை நாம் சொல்வோம் சாயம் கூடியது  தேயிலை சரி இல்லை  என்று அனால் தேயிலை எத்தனை பேரை தேய்த்து  தேநீராகியது  என்று அந்த நொடியில் யாரும் நினைத்து பார்க்காத ஒன்று.  மலையகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து  கறபனையாக       
  • உலகின் பழைய சட்டை!       எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே கந்தலான V கழுத்து லினன் சட்டை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம்! 1913-ம் ஆண்டு டர்கன் என்ற இடத்திலிருந்த கல்லறைகளைத் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது இந்தச் சட்டை கிடைத்தது. டர்கன் கல்லறைகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தினரைச் சேர்ந்தவை. கல்லறைக்குள் நுழைந்தபோது ஏராளமான கலைப் பொருட்கள் இருந்தன. இந்த லினன் துணி மண்ணோடு மண்ணாகத் தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். எதிர்கால ஆய்வுக்காக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். பிறகு மறந்தும் போய்விட்டார்கள். 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஷெய்லா லாண்டி என்ற துணி ஆராய்ச்சியாளர், இந்தச் சட்டையில் உள்ள களிமண்ணை நீக்கியபோது ஆச்சரியத்தில் மூழ்கினார். V வடிவ கழுத்து, மடிப்புகள் வைத்து தைத்த விதத்தைப் பார்த்து அவரது கண்கள் விரிந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்லறையிலிருந்து எடுத்த சட்டையாக அது தெரியவில்லை. கந்தலாக இருந்தாலும் இப்போது பயன்படுத்தும் சட்டை போலவே இருந்தது! சட்டை 3 பாகங்களாகக் கத்தியால் வெட்டப்பட்டு, கையால் தைக்கப்பட்டிருந்தது. வெளிர் சாம்பல் வண்ண லினன் துணியாக இருந்தது. சட்டை முழுவதுமாக இல்லாததால், இது ஆண்கள் அணியும் சட்டையா, பெண்கள் அணியும் சட்டையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சட்டையின் வடிவமைப்பைப் பார்க்கும்போது இன்றைய இளம் பெண்ணுக்குப் பொருந்துவதாக உள்ளது! 40 ஆண்டுகளுக்கு முன் துணியின் வயதைக் கண்டுபிடிக்கக்கூடிய ரேடியோகார்பன் இல்லை. டர்கன் கல்லறையின் வயது கி.மு.3100. அதனால் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சட்டையாக இருக்கலாம் என்று கணித்தனர். பீட்ரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் ஆலிஸ் ஸ்டீவன்சன், “இதுவரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான துணிகள்தான் கிடைத்திருக்கின்றன. அதுவும் தாவர நார்கள், விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட துணிகள்தான். உடலைச் சுற்றிக்கொள்ளும் துணியாக மட்டுமே அவை இருந்தன. ஆனால் இந்தச் சட்டை லினன் துணியில் அழகாக வெட்டப்பட்டு, கைகளால் தைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத் துணி தைக்கப்பட்டது போலவே இருக்கிறது!’’ என்று சொன்னார். 2015-ம் ஆண்டு நவீன ரேடியோ கார்பன் பரிசோதனைக்கு இந்தத் துணியிலிருந்து சிறிய பகுதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி துணியின் வயது 95 சதவீதம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 5,100 முதல் 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள். அந்தக் கால எகிப்தியர்கள் நீண்ட அங்கி அணிந்திருந்ததால் இது சட்டையாக இல்லாமல், நீண்ட அங்கியின் மேல் பகுதியாகவும் இருக்கலாம் என்கிறார்கள். உலகின் மிகப் பழமையான கம்பளியால் செய்த கால் சட்டை, இன்றைய சீனாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாடோடி தலைவர் ஒருவரின் கல்லறையில் இருந்து இந்தக் கால் சட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் கம்பளியில் டிசைன்கள் போடப்பட்டு மிக அழகாக இருக்கிறது! இவற்றை எல்லாம் பார்க்கும்போது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இன்றைய நாகரிகத்துடன் போட்டி போடும் அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா? எந்த வித இயந்திரங்களும் இல்லாமல், துணிகளை நெய்து, வெட்டி, கைகளால் அழகான ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் திறமைகளை என்னவென்று சொல்வது?! tamil.thehindu
  • பிரான்ஸ் தேவாலயத்தில் பாதிரியாரை கொன்றவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு   பிரான்ஸின் வடக்கு நகரான ரூவனுக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரைக் கொன்ற இரண்டு தாக்குதல்தாரிகள், ஐ.எஸ் அமைப்பிடம் தீவிர விசுவாசம் கொண்டவர்கள் என பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந் தெரிவித்துள்ளார்.   தாக்குதல்தாரியிடமிருந்து தப்பித்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தியேந்திய அந்த தாக்குதல்தாரி பாதிரியாரின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் எவ்வாறு அவரை மண்டியிட மிரட்டினார் என விவரித்துள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த, அந்த தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், கத்திகளை ஏந்திய அந்த தாக்குதல்தாரிகள் பலரைப் பணையக் கைதிகளாக சுமார் ஒரு மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.   அந்த இரண்டு தாக்குதல்தாரிகளும் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு தேவாலயத்தில் பல பேரை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தாக்குதாரிகளில் ஒருவர் தேவாலயத்தின் அருகாமையில் வசித்து வந்ததாகவும் கடந்த வருடம் சிரியாவில் அவர் ஐ.எஸ் அமைப்பில் சேர முயற்சித்ததை அடுத்து மின்னணு கைப்பட்டை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார் எனவும் உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலிஸார் சிலரைக் கைது செய்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜிகாதி அனுதாபி ஒருவர் நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரைக் கொன்ற சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில், இந்த தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/07/160726_france_hollande
  • நான் 
   இரவு நேர இதய ....
   காவலாளி .....
   கனவில் கூட நீ 
   வருவதை தடுக்க ....!!! உன் 
   நினைவுகளால் .....
   இதயத்தில் தாஷ்மஹால் ...
   காட்டுகிறேன் ....
   வலிகள் தான் செலவு ....!!! காற்றில் உரசும் ....
   மரக்கொப்புக்கு உள்ள ....
   இன்பம் கூட நமக்குள் ....
   இல்லை .....!!! &
   முள்ளில் மலர்ந்த பூக்கள் 
   கஸல் கவிதை 
   கவிப்புயல் இனியவன் 
   1038
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,262
  • Most Online
   1,326

  Newest Member
  Tamil Eelam Cricket
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   158,135
  • Total Posts
   1,041,276