Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,562
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,874
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,344
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 363,539
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   70,150
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   13,225
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   20,128
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,564
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   11,003
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,541
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,951
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,713
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,428
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   15,105
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,494
   posts
  2. 34,271
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,826
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,224
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,576
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   19,091
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   27,607
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   22,555
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   57,092
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,175
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,712
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,733
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,722
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,869
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,275
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,773
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,761
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   13,104
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,988
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,432
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,826
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,286
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   112
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,469
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,752
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (348,963 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (12,084 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (12,527 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Upcoming Events

  No upcoming events found
 • Posts

  • காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன?   இலங்­கைத்­தீவில் அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் காணாமல் போவோர் என்­பது இன்று நேற்று அல்ல குறைந்­தது, கடந்த 45 வரு­டங்­க­ளாக, அதா­வது தெற்கில் சேகு­வ­ரா க்கள் என அன்று கூறப்­பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது.  அன்று தெற்கின் சிங்­கள இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போவது ஆரம்­ப­மா­கி­யது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோ­ர் அர­ச­ப­டை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்டு, அவர்களது உடல்கள் தமி­ழர்­க­ளது தாயக பூமியின் நாலா­பக்­கமும் அநா­த­ர­வாக கைவி­டப்­பட்ட நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.  காலங்கள் புரண்டு ஓடி, இலங்­கை உல­கி­லேயே காணாமல் போவோர் விட­யத்தில் முதன்மை வகிக்கும் நிலையில், வடக்­கு–­கி­ழக்­குடன் தெற்கு உட்­பட ஆயிரம் ஆயிரம் இளை­ஞர்கள் யுவ­திகள், பெரி­யோர்கள், குடும்பத் தலை­வர்கள், தலை­விகள், கல்­வி­மான்கள், மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளென பட்­டியல் நீண்டு கொண்டே போகும் அள­விற்கு மனி­தர்கள் காணாமல் போனார்கள்.   போய்­கொண்டும் உள்­ளார்கள். எதிர்­கா­லத்­திலும் போவார்கள் என்ற நிலையில் இலங்­கை­தீவின் நிலை இன்று மாறி­யுள்­ளது. ஆரம்­பத்தில், காணாமல் போவோர் விட­யத்தில் அலட்­சி­ய­மா­க­வி­ருந்த சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்­களும் மேற்கு நாடு­களும் காலப்­போக்­கி­லேயே இலங்­கைத்­தீவின் உண்மை நிலையை அறிந்து தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தன.  இவ்­வி­ட­யத்தில் அன்றும் இன்றும் செயற்­பட்ட, படு­கின்ற மனித உரிமை செயற்­பாட்­டா­ளரின் அணு­கு­மு­றைகள் மிகவும் துணிச்­ச­லாக இருந்த பொழுதும், இவை மிகவும் அபாயம் நிறைந்­த­தா­கவும் காணப்­பட்­டன. இவ்­வி­ட­யத்தில் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களும் உள்­ளனர்.   இவ் விட­யங்­களில் அன்று முன்­னின்று உழைத்து தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த ரிச்சர்ட் டி சொய்சா, குமார்­பொன்­னம்­பலம், தராகி சிவராம், ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ், லசந்த விக்­கி­ர­ம­துங்க போன்ற பலரை நாம் இவ்­வே­ளையில் நினை­வு­கூர கட­மைப்­பட்­டுள்ளோம். இவர்கள் போன்ற பலரின் செயற்­பா­டு­க­ளினால், சர்­வ­தே­சத்தில் இலங்­கையில் காணாமல் போனோர் பற்றி கவ­னத்தில் கொண்­டுள்ள பல அமைப்­புக்­களில், முக்­கி­ய­மான ஒன்­றாக, ஐக்­கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு (UN working Group on Enforced or Involuntary Disappearances) காணப்­ப­டு­கி­றது.  இக்­குழு காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிப்­ப­தற்­காக நான்கு தட­வைகள், அதா­வது 1991ஆம் ஆண்டு ஒக்­டோபர் , 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர், 1999 ஆம் ஆண்டு இறு­தி மற்றும் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைத் தீவிற்கு விஜயம் செய்­துள்­ளது. இவ்­வே­ளை­யி­லேயே, வடக்­கு, ­கி­ழக்கில் காணாமல் போனோர் விட­யத்தில், சில ஆதா­ர­பூர்­வ­மான விட­யங்­களை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் விட­யத்­திற்கு முக்­கிய கார­ணி­க­ளாக இலங்கை அரச படைகள், இவர்­க­ளுடன் உற­வா­டிய ஒட்­டுக்­கு­ழுக்கள் இவற்­றுடன் சில ஆயுத குழுக்­களும் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுடன் 1987 ஆம் ஆண்டு இலங்­கை க்கு அமை­திப்­ப­டை­க­ளாக வருகை தந்த இந்­திய இரா­ணு­வமும் கார­ணி­யா­க­வுள்­ளது. போர் முடி­வுற்­றதும், அதா­வது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஆயிரம் ஆயிரம் தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள், முதி­யோர்கள் என எண்ணில் அடங்­கா­த­வாறு வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போயுள்­ளனர். போர் முடி­வுற்­றதும், இவ்­வி­ட­யத்தில் அக்­கறை கொண்டு உலகம் பூரா­கவும் உள்ள புலம் பெயர் வாழ் அமைப்­புகள் தமது நாடு­களில் உள்ள தமி­ழர்கள் கூடும் தேவா­ல­யங்கள், கோயில்கள், தமிழ் பாட­சா­லைகள் போன்ற இடங்­களில் நின்று வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் பற்­றிய விப­ரங்­களைத் திரட்­டி­னார்கள். ஆனால் இன்று வரை இவ்­வி­ப­ரங்­க­ளிற்கு என்ன நடந்­தது என்­பதை யாரும் அறி­ய­வு­மில்லை. “தமிழர் மனித உரி­மைகள் மையத்­தி­ன­ரா­கிய” நாம் ஐ.நா.விற்கு மனித உரிமை மீறல் விட­யத்தில் தகவல் சமர்ப்­பிப்­பதில் இரு தசாப்­தங்கள் கொண்ட அனு­ப­வத்தின் கார­ணத்­தினால், இவ் அமைப்­புக்கள் திரட்­டிய தக­வல்­களை எம்­மிடம் கொடுத்தால் இவற்றை உரிய முறையில் ஐ.நா.விற்கு சமர்ப்­பிக்க முடி­யு­மென வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தும், இன்று ஏழு வரு­டங்­க­ளா­கியும் திரட்­டிய தக­வல்கள் எங்கு சென்­றன என்­பதை யாரும் அறி­ய­மாட்­டார்கள். இவற்றை மிக சுருக்­க­மாக கூறு­வ­தானால், அன்­றி­லி­ருந்து இன்று வரை வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போனோ­ரு­டைய புள்ளி விப­ரங்­களோ அல்­லது தக­வல்­களோ இன்று வரை சரி­யாக நேர்த்­தி­யாக திரட்­டப்­ப­டவும் இல்லை. இவை சரி­யான முறையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வு­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.நா.அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்­துள்ள ஐ.நா.குழு­வினர் காணாமல் போனோர் விட­யத்தில் பல உண்­மை­க­ளையும், தக­வல்­க­ளையும் கண்­ட­றிந்­துள்­ளனர். இவர் கள் தாம் இலங்­கைத்­தீவில் அறிந்­த­வற்­றையும் அர­சிற்கு சில சிபார்­சு­க­ளையும் தொகுத்து ஓர் அறிக்­கை­யாக, நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்து இருந்­தனர். இவ் அறிக்­கையின் கோவை­ இ­லக்கம் A/HRC/33/51/Add.2 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை இரு­பத்­தி­ரண்டு பக்­கங்­க­ளையும் எண்­பத்தி ஐந்து பெரிய உப பந்­தி­களை உள்­ள­டக்­கிய அறிக்­கை­யாக காணப்­ப­டு­கி­றது. இவ் அறிக்­கையின் முன்­னு­ரையில் ஐ.நா.காணாமல் போனோர் பற்றி ஆராயும் குழு, இலங்கைத் தீவில் யார் யாரை சந்­தித்தது. தாம் எந்த எந்த இடங்கள், நக­ரங்­க­ளிற்கு விஜயம் செய்தது என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.   தாம் விஜயம் செய்­த­தாக குறிப்­பிடும் இடங்­களில் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தாம் சந்­தித்­த­தாக கூறும் நபர்­களில், வடக்கு, கிழக்கு முத­ல­மைச்­சர்­களை குறிப்­பிட்­டுள்­ளனர். இவ்­வ­றிக்­கையின் 7ஆவது பந்­திக்கு அமைய, ஐ.நா. காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு, கடந்த காலங்­களில் பன்­னி­ரா­யிரம் பேர் காணாமல் போயுள்ளோர் பற்­றிய விப­ரங்­களை அர­சிடம் சமர்ப்­பித்து இருந்­த­தா­கவும், இவற்றில் ஐயா­யி­ரத்து எழு­நூற்று ஐம்­பது பேர் தொடர்பில் இன்னும் அர­சினால் சரி­யான விளக்கம் கொடுக்கப் பட­வில்லை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை­யாவும் பெரும்­பா­லாக 1980–1990 இல் ஜே.வி.பி.யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை உண்­மையில் வடக்கு, கிழக்கு வாழ் மக்­க­ளிற்கு மிகவும் கவலை தரும் செய்­தி­யாகும். இன்று வரை ஆயிரம் ஆயிரம் தமி­ழர்கள் காணாமல் போயுள்ள நிலையில் ஐ.நா.வின். காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் பிரி­விடம், வடக்கு, கிழக்கு பற்­றிய புள்ளி விப­ரங்கள் மிகவும் குறைந்தே காணப்­ப­டு­கி­ன்றன.  இதனைத் தொடர்ந்து எட்­டா­வது, ஒன்­ப­தா­வது பந்­தியில் வெள்ளை வேன் கடத்­தல்கள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்ள அதே­வேளை, தமி­ழீ­ழ­வி­டு­தலைப் புலி­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் போயுள்­ளனர் என்­பது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையின் 13ஆவது பந்­தியின் பிர­காரம், ஐ.நா.காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­வினர் இலங்கை சர்­வ­தேச குற்றவியல் நீதி­மன்­றத்தின் பிர­க­ட­னத்தில் தம்மை ஓர் அங்­கத்­த­வர்­க­ளாக இணைத்துக் கொள்ள வேண்­டு­மென அறி­வுரை கூறப்­பட்­டுள்­ள­துடன் மற்­றைய சர்­வ­தேச மனித உரிமை பிர­க­ட­னங்­க­ளிலும் கையெ­ழுத்­திட வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது. இத­னது 17ஆவது பந்­தியில் தமது விஜ­யத்தின் பொழுது தாம் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிற்குச் சென்­றி­ருந்த வேளையில், நிலத்­திற்குக் கீழ்­உள்ள பதி­னொரு ரக­சிய தடுப்பு முகாம்­களை தாம் பார்த்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத­னது 18ஆவது பந்­தியில் கடந்த ஆண்டு 2015, பெப்­ர­வரி மாதம் சாட்­சி­களின் பாது­காப்பு பற்­றிய சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தும் இவற்றில் சில குறைகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பந்­திகள் 24, 25க்கு அமைய 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனா­தி­பதி ராஜபக் ஷவினால் காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்கு ஓர் புதிய ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ் ஆணைக்­கு­ழுவை “பர­ண­கம ஆணைக்­குழு” என அழைப்­ப­தா­கவும் இது ஆரம்­பத்தில் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இறு­தியில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காணாமல் போனோர் பற்றி ஆராய வேண்­டப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையில் 27 ஆவது பந்­தியில் குறிப்­பி­டு­வது மிகவும் வேடிக்­கை­யா­னது. பர­ண­கம ஆணைக்­கு­ழுவில் மக்கள் நம்­பிக்கை கொள்­ள­வில்லை என்றும் அப்­ப­டி­யி­ருந்தும் பர­ண­கம ஆணைக்­குழுவுக்கு இரு­ப­தா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்ற பொழுதும் நூற்று ஐம்­பது முறை­பா­டு­களே விசா­ர­ணைக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கி­றது.   பர­ண­கம என்­பவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு நெருக்கமானவர் என்­பதும் இவர் ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் போர்க்­குற்­றங்­களை மூடி­ம­றைக்க நிய­மிக்­கப்­பட்­டவர் என்­பதை உல­க­றியும் என்­பது எனது கருத்து. புதை­கு­ழிகள் இவ் அறிக்­கையின் 38ஆவது பந்­திக்கு அமைய 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தியில் மன்­னாரில் 83 பெண்கள், பிள்­ளை­க­ளது எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் இவை பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவை பற்­றிய தக­வல்கள் விளக்கம் அற்று காணப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அறிக்­கையின் 41ஆவது பந்­திக்கு அமைய இலங்கையில்ல் காணப்­படும் புதை­கு­ழிகள் யாவும் காணாமல் போனோ­ருடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தமக்கு சகல இடங்­க­ளிற்கும் விஜயம் செய்து பார்­வை­யிட முடி­ய­வில்­லை­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 44ஆவது பந்­திக்கு அமைய தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போரா­ளிகள் இலங்கை இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் காணாமல் போயுள்­ள­தா­கவும் சில சம­யங்­களில் இப் போரா­ளி­களின் பெற்­றோர்­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவை சார்ந்­த­வர்­களும் யுத்­தத்தில் ஈடு­ப­டா­த­வர்­களும் பாது­காப்பு படை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காணாமல் போக கார­ணமாய் இருந்தோர் தண்­டிக்­கப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­ப­டு­வது ஓர் முக்­கிய பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது. இலங்கையின் விசா­ர­ணை­களை ஆதா­ரங்­க­ளுடன் பார்க்கும் பொழுது நீதி விசா­ர­ணை­களில் நிச்­சயம் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­குத்­தொ­டு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பது தெளி­வா­கி­ற­தாக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையில் காணாமல் போயுள்­ளோரின் உற­வி­னர்கள் இம்­சிக்­கப்­ப­டு­வது பற்றி தாம் மிகவும் அக்­கறை கொண்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நஷ்­ட­ஈடு காணாமல் போனோர் என்ற அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வது ஓர் முக்­கி­ய­மான விட­ய­மாக தாம் எண்­ணு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது. காணாமல் போனோரின் தாய், மனைவி, பிள்­ளைகள் எந்­த­வித பொரு­ளா­தார உத­வி­களும் இல்­லாது காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோர் எனக் கூறப்­ப­டுவோர், இல்­லாத கார­ணத்­தினால் அவர்­களை நம்பி வாழ்க்கை நடத்­திய குடும்­பங்கள் பெரி­தாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­றிக்­கையின் 61ஆவது பந்­திக்கு அமைய ஐ.நா.குழு­வினர் தாம் நூற்­றுக்­க­ணக்­கான காணாமல் போனோரின் உற­வி­னர்­களை, விசே­ட­மாக தாய், மனைவி, சகோ­த­ரிகள், மகள்­மாரை, மகன்­மாரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ள­தா­கவும் இவர்­களில் சில­ரது குடும்­பங்­களில் பலர் காணாமல் போயுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பலர் தாம் தமது உற­வி­னர்­களை தேடும்­வே­ளையில் பாலியல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் இவர்கள் அவர்­க­ளது சமு­தா­யத்தில் உள்­ள­வர்­க­ளினால் பாகு­பாட்­டிற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. காணாமல் போன சில­ரது பிள்­ளைகள், தாய் தகப்பன் இரு­வ­ரையும் இழந்து காணப்­ப­டு­வ­தா­கவும் சில சந்­தர்ப்­பங்­களில் பெற்­றோ­ருடன் சிறு பிள்­ளை­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது. அறிக்­கையின் 64ஆவது பந்­திக்கு அமைய காணாமல் போனோ­ரது உற­வினர் எந்­த­வித நஷ்­ட­ஈடும் பெற­மு­டி­ய­வில்­லை­யென்றும் தமக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமைய பாதிக்­கப்­பட்டோர் ஒரு இலட்சம் ரூபாவை பெற முடியும் என்­பது 1988 ஆம் ஆண்டின் விதி முறை­க­ளிற்கு அமைய கூறப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை கூறு­கின்­றது. இந்த நஷ்­ட­ஈட்டை இறப்பு சான்­றி­தழைச் சமர்ப்­பிப்­பதன் மூலமே பெற முடி­யு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  இங்கு கூறப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு என்­பது இது­வ­ரையில் மாற்றம் அடை­யா­வி­டினும் சில­ரது உற­வி­னர்கள் இரண்டு இலட்சம் ரூபா­வரை பெற்­றுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது. இவ் இரண்டு இலட்சம் நஷ்­ட­ஈடு என்­பதை நிச்­சயம் தெற்கில் காணாமல் போன சிங்­க­ள­வர்­க­ளது உற­வி­னர்­களே பெற்­றி­ருக்­கலாம் என்­பது எனது கருத்து. ஐ.நா குழு அறிந்­த­வ­ரையில் இந் நஷ்­ட­ஈடு என்­பது இறப்பு அல்­லது மர­ணச்­சான்­றி­தழை ஏற்கும் காணாமல் போனோ­ரது குடும்­பங்­க­ளுக்கும் தொடர்ந்து காணாமல் போனவர் பற்­றிய தேடு­தலை நிறுத்திக் கொள்­ப­வர்­க­ளுக்கும் மட்­டுமே. இதன் காரணம் ஐ.நா. குழு வற்­பு­றுத்­து­வது என்­ன­வெனில் இறப்புச் சான்­றி­தழைப் பெறும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போனவர் பற்­றிய உண்­மை­களை அறிய உரித்­து­டை­யவர். இவ் அடிப்­ப­டையில் அண்­மையில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தற்­க­மைய காணாமல் போனோர் விட­யத்தில் மரணச் சான்­றி­த­ழுக்கு பதி­லாக “ஆள் இல்லை” (Certificates of Absence) என்ற விடயம் வர­வேற்­கத்­தக்­க­தாக அறிக்கை கூறு­கி­றது. 67ஆவது பந்­திக்கு அமைய வடக்கு, கிழக்கில் இரா­ணுவம் தொடர்ந்து அதி­க­மான தனியார் நிலங்­களை அப­க­ரித்து உள்­ளமை தம்மை அதிர்ச்சி கொள்ள வைத்­துள்­ள­தாக ஐ.நா. குழு கூறு­கி­றது. காணாமல் போனோ­ருக்கும் இடம் பெயர்ந்தோர் விட­யங்­க­ளிற்கும் இடையில் நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோரின் உற­வுகள் இடப்­பெ­யர்வால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கின்­றது. இதே­வேளை 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு அரசு எந்தவித ஆக்­க­பூர்­வ­மான வேலை­க­ளையும் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டை ஐ.நா. குழு­வினர் அறிந்­துள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் காணாமல் போனோரை நினை­வு­கூரும் நினை­வுச்­சின்­னங்­களோ அல்­லது வேறு நினைவு கூரக்­கூ­டிய விட­யங்­களோ அங்கு பெரி­தாகக் காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இவற்­றிற்கு அரசின் ஆத­ர­வுகள் பெரி­தாக காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டும் இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் பெயர் மாற்றப்பட்டிருந்த பொழுதும் இராணுவம், அவர்களது குடும்பத்தினருக்கும் புகழ்ந்து விழாக்கள் எடுத்த பொழுதும் போர்க்காலங்களில் உயிரிழந்த பொது மக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையென அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை காணாமல் போனோர் விடயத்தில் முன்னேற்றம் காண்பதற்கும் இவற்றை அங்கு அறவே இல்லாமல் செய்வதற்கான பல ஆலோசனைகளை விசேடமாக சட்டத்துடனான மாற்றங்கள் பற்றி ஐ.நா. குழு இலங்கைக்கு சிபார்சு செய்துள்ளது. முக்கிய குறிப்பு 01. வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் ஆகிய விடயங்களில் சரியான தெளிவான பெயர்பட்டியலோ விபரங்களோ இன்றுவரை யாரிடமும் இல்லை. இவற்றைப்பட்டியலிட நாம் முன்வர வேண்டும். 02. காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோரது சகல விபரங்களையும் ஐ.நா.வில் உள்ள அவற்றிற்குரிய பிரிவுகளிற்கு உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களிற்கு நடந்தவை, நடப்பவை யாவும் ஓர் இனஅழிப்பு என்பதை எம்மால் சர்வதேசத்திற்கு நிரூபிக்க முடியும். 1990 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வேலைகளையே பிரதானமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொண்டிருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலம் பெயர் தேசங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட சில கோடரிக் காம்புகளினால் ஐ.நா. வேலை திட்டங்கள் யாவும் நீர்மூலமாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் கவலை தரும் விடயம். ச.வி.கிரு­பா­கரன் –பிரான்ஸ்
  • தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்?   செல்­வ­ரட்னம் சிறி­தரன் இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள் கிள்­ளுக்­கீ­ரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்கள். அது மட்­டு­மல்ல. அவர்கள் பெரும்­பான்மை இன மக்­களின் தயவில் வாழ வேண்­டிய நிலையில், இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து நாடு சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக, படிப்­ப­டி­யாக, இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்தச் செயற்­பாடு தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையே இப்­போதும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. பல இனங்­களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்­கின்­றார்கள். பல மதங்­களை அவர் கள் பின்­பற்றி வரு­கின்­றார்கள். இந்த நாட்டின் 75வீதம் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றார்கள். அவர்­களில் பெரு­ம­ள­வானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் அடுத்­த­டுத்த நிலை­க­ளிலும், அதற்கு அடுத்த நிலை­களில் மலேயர், பறங்­கியர் போன்ற வேறு இன மக்­களும் இங்கு வாழ்­கின்­றார்கள். ஆயினும் ஏனைய ஜன­நா­யக வழி­மு­றையைப் பின்­பற்­றி­யுள்ள நாடு­களைப் போன்று பல்­லின மக்கள், பல மொழி­க­ளையும் மதங்­க­ளையும் பின்­பற்­று­கின்ற மக்கள் வசிக்கும் நிலையில் இலங்­கையில் அர­சியல் நிலைமை காணப்­ப­ட­வில்லை.  இங்கு சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அவற்றை, பார­பட்­ச­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே பாரம்­ப­ரி­ய­மாக இடம்­பெற்று வரு­கின்­றது.  இந்த நிலை­மை­களில் முக்­கி­ய­மா­ன­வற்றை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்  .சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் கல்­வி­யிலும், அரச தொழில்­து­றை­க­ளிலும் வர்த்­த­கத்­திலும் சிறந்து விளங்­கி­யதை நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை. தமிழ் மக்­க­ளுடன் இணைந்து வாழ வேண்டும் என்றோ, அவர்­க­ளுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்றோ அவர்கள் எண்­ண­வில்லை. அதற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­ட­வில்லை.   மாறாக, தமிழ் மக்­களின் திறமை அவர்கள் சமூ­கத்­திலும் அர­சி­ய­லிலும், தொழில் துறை­க­ளிலும் அடைந்­தி­ருந்த உயர்ச்­சியைப் பொறாமை கண்­கொண்டு நோக்­கி­ய­தோடு, அவர்­களை அந்த நிலையில் இருந்து சரித்து வீழ்த்தி அவர்கள் வகித்த இடத்தைத் தாங்கள் கைப்­பற்ற வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே சிங்­கள மக்­களின் தலை­வர்கள் செயற்­பட்­டி­ருந்­தார்கள். அர­சியல், மதம், வர்த்­தகம், கல்வி, அர­சாங்க மற்றும் துறை­சார்ந்த தொழில்­து­றைகள் என பல வழி­க­ளிலும், தமிழ் மக்­களை எந்த வகையில் வீழ்த்­தலாம், அவர்­களை எவ்­வாறு முந்திச் செல்­லலாம் என்ற நோக்­கத்­தி­லேயே அவர்கள் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அது மட்­டு­மல்­லாமல் பண்­பாட்டு ரீதி­யாக அவர்­களை எவ்­வாறு பின்­ன­டையச் செய்­யலாம் என்ற நோக்­கத்­திலும் அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­ததைப் பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் இயல்­பாகக் கொண்­டி­ருந்த திற­மை­யுடன் போட்­டி­யிட்டு தமது திற­மை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்குப் பதி­லாக, சிங்­கள மக்கள் தாங்கள் பெரும்­பான்மை இன மக்கள் என்ற ரீதியில் எந்தத் துறை­யா­யினும், அதில் தங்­க­ளுக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் உரி­மை­களை உரித்­தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறுக்கு வழியைப் பின்­பற்றி அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்­டார்கள்.  அதற்கு உறு­து­ணை­யாக சிங்­கள பௌத்த மதத் தலை­வர்­களும் பல்­வேறு துறை­களில் அதி­கார ரீதி­யாக அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்­த­வர்­களும் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.  இதன் கார­ண­மா­கவே, கல்வி, அரச தொழில்­வாய்ப்பு, தொழில்­துறை முயற்­சி­க­ளுக்­கான அனு­மதி போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்­களில் விகி­தா­சார நடை­மு­றையை சிங்கள ஆட்­சி­யா­ளர்கள் புகுத்­தி­னார்கள்.   விகி­தா­சா­ரத்தைப் பின்­பற்­று­வ­தற்­காக கல்­வியில் தரப்­ப­டுத்தல் முறை கொண்டு வரப்­பட்­டது. இதனால் திற­மை­சா­லி­க­ளான தமிழ் இளைஞர், யுவ­திகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறு­வதில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்கும், தடை­க­ளுக்கும் முகம் கொடுக்க நேரிட்­டது. பலர் உயர் கல்வி வாய்ப்பை இழந்து தமது எதிர்­கால வாழ்க்­கையை சிறப்­பாக அமைத்துக் கொள்ள முடி­யாத நிலை­மைக்கு ஆளா­கி­னார்கள். கல்­வியில் கொண்டு வரப்­பட்ட தரப்­ப­டுத்­தலே, தமிழ் இளைஞர், யுவ­திகள் அர­சி­யலில் ஈடு­ப­டவும், ஆயுதப் போராட்ட வழி­மு­றையில் திசை திரும்பிச் செயற்­ப­டு­வ­தற்­கு­மான வழியை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்­தது. சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­களின் முன்­னேற்­றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பெரும்­பான்மை இனத்­த­வரின் பிடி­வாதம் நிறைந்த பேரின, இன­வாத சிந்­த­னையும் செயற்­பா­டு­க­ளுமே, சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளையும் மத உரி­மை­க­ளையும் மறுப்­ப­தற்கும், ஒறுப்­ப­தற்­கு­மான முக்­கிய கார­ணங்­க­ளா­கின. அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­டன. மத ரீதி­யான ஒடுக்­கு­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்டு, தமிழ் மக்­களின் குறிப்­பாக இந்­துக்­களின் பிர­சித்­த­மான வணக்­கத்­த­லங்­க­ளும்­கூட சிங்­கள பௌத்­தர்­க­ளினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டன. இந்த ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பாட்டின் தொடர்ச்­சி­யா­கவே யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், குறிப்­பாக வடக்கில் பல இடங்­களில் இந்து ஆலய வள­வு­க­ளிலும் இந்து கோவில்­க­ளுக்கு அரு­கிலும் புத்தர் சிலை­களை நிறுவும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் அந்த இடங்­களில் பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணிக்கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மன்னார் மாவட்­டத்தில் முருங்கன், திருக்­கே­தீஸ்­வரம், வவு­னியா கன­க­ரா­யன்­குளம் கிளி­நொச்­சியில் கன­காம்­பிகைக் குளம், முல்­லைத்­தீவு மாவட்டம் கொக்­கிளாய் பிர­தே­சத்­திலும், யாழ்.குடா­நாட்டில், யாழ்ப்­பாணம், நயி­னா­தீவு போன்ற பல இடங்­க­ளிலும் இவ்­வா­றாக மத ரீதி­யான அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் - ஒடுக்­கு­முறைச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.   மத ரீதி­யான இந்த ஒடுக்கு முறை­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுப்­போரை இன­வா­தி­க­ளாகச் சுட்­டிக்­காட்டி, நாட்டில் இன­வா­தத்தைக் கிளப்பி அமை­தியைக் குலைக்­கின்­றார்கள், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்குத் தூபம் போடு­கின்­றார்கள் என்று தென்­னி­லங்­கையில் உள்ள இன­வாத கடும்­போக்­கா­ளர்­களும் கடும்­போக்­கு­டைய பொது­பல சேனா உள்­ளிட்ட பௌத்த மதத் தீவி­ர­வா­தி­களும் தமிழர் தரப்பின் மீது குற்­றங்­களைச் சுமத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். இன­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற அவர்­களே அவர்­க­ளு­டைய செயற்­பாட்­டினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களை நோக்கி 'நீங்­களே இன­வா­திகள், இன­வா­தத்தைத் தூண்­டு­கின்­றீர்கள்' என்று குற்றம் சாட்­டு­கின்ற விநோ­த­மான அர­சியல் போக்கை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். மொத்­தத்தில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரத்­தையே, பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பேரின சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கும், ஆட்சி அதி­கா­ரத்தைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்கும் உரிய உத்­தி­யாக, அர­சியல் செயற்­பா­டாக முன்­னெ­டுத்து வந்­துள்­ளார்கள். இன­வா­தத்தின் அடிப்­ப­டையில் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தனால் வெடித்த யுத்தம் முடி­வ­டைந்­துள்ள போதிலும், இந்த இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் உத்­தியை அவர்கள் இன்னும் கைவிட்­ட­பா­டில்லை. சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் பகிர்ந்­தளிக்கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்த நாட்டில் விகி­தா­­சார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அந்த முறை­மையின் கீழ் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை அர­சியல் பலத்தைப் பெற முடி­யா­த­தொரு நிலை­மையை உரு­வாக்­கி­விட்­டுள்ளார். ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற இப்­போ­தைய அர­சாங்கம் அந்தத் தேர்தல் முறையை மாற்றி, ஒரு கலப்பு தேர்தல் முறையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது. விகி­தா­சார தேர்தல் முறையையும் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யையும் கொண்ட – ஒரு கலப்பு தேர்தல் முறை­யா­னது சிறு­பான்மை இன மக்­க­ளி­னதும், சிறிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அர­சியல் பலத்தை குறைப்­ப­தற்கு அல்­லது இல்­லாமற் செய்­வ­தற்கே வழி­வ­குக்கும் என்று அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக அச்சம் நில­வு­கின்­றது. நாட்டில் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்­புக்குப் பதி­லாக, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வது, புதிய தேர்தல் முறை­மை­யொன்றை உரு­வாக்­கு­வது, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது என்ற மூன்று முக்­கிய கார­ணங்­களை முன்­வைத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றது. இந்த நட­வ­டிக்­கை­யும்­கூட உண்­மை­யி­லேயே சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி, அவர்­க­ளுடன் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கு­ரிய நேர்­மை­யான முயற்­சி­தானா என்ற சந்­தேகம் பல தரப்­பி­ன­ரி­டை­யேயும் எழுந்­துள்­ளது. முதன் முறை­யாக, நாட்டின் பொது­மக்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி, புதிய அரசிய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்­புக்­களை உரு­வாக்­கி­ய­போது, சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் தலை­வர்­க­ளு­டைய கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று ஏனைய அர­சியல் கட்­சி­க­ளி­னது அர­சியல் கருத்­துக்­களும் கேட்­கப்­ப­ட­வில்லை. ஆனால் இப்­போது, சகல அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­புக்கள் மட்­டு­மல்­லாமல், பொது­மக்­களின் கருத்­துக்­களும் திரட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே, புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டுக்கும் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்­கலாம் அல்­லது ஏற்­பு­டை­ய­தாக இல்­லாமல் இருக்­கலாம். ஆனால், அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு என்ற ரீதியில் அதற்கு எதி­ராகக் குறை கூறவோ அல்­லது குற்றம் சுமத்­தவோ முடி­யாத ஒரு நிலைமை ஏற்­படப் போகின்­றது என்­பதை அர­சியல் ஆய்­வா­ளர்கள் எதிர்வு கூறி­யி­ருக்­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போக்கு புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­போது இருந்­த­திலும் பார்க்க, படிப்­ப­டி­யாக தடம் மாறிச் செல்­வ­தா­கவே பலரும் உணர்­கின்­றார்கள். நிலை­மை­களும் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. முன்­னைய ஆட்­சி­யி­லும்­பார்க்க புதிய ஆட்சி சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் உளப்­பூர்­வ­மான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்று பலரும் எதிர்­பார்த்­தார்கள்.   ஆயினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்கள் செல்லச் செல்ல புதிய ஆட்சி தனது பொறுப்­புக்­களை குறிப்­பாக சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் காலத்தை இழுத்­த­டிக்கும் போக் கைக் கடைப்­பி­டிப்­ப­தா­கவே பலரும் கரு­து­கின்­றார்கள். விசே­ட­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை இந்த அர­சாங்­க­மா­வது துரி­தப்­ப­டுத்தும், இரா­ணு­வத்­தினர் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள தமிழ் மக்­க­ளு­டைய காணி­களை மீளக் கைய­ளித்து, கால் நூற்­றாண்­டுக்கு மேலாக இடம்­பெ­யர்ந்­துள்ள அவர்­களின் அவல நிலைக்கு முடி­வேற்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது, ஆனால் இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்கை மந்த கதி­யி­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வலி­காமம் வடக்கில் இருந்து இரா­ணு­வத்­தி­னரால் வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த கொட்­டில்கள் ஓட்­டைகள் நிறைந்த கிடுகு கூரை­களைக் கொண்ட குடி­சை­களை நேரில் பார்­வை­யிட்டு, அங்­கி­ருந்த ஒரு திண்­ணையில் அமர்ந்து அந்த மக்­களின் அவல நிலைமை குறித்து கேட்­ட­றிந்­ததன் பின்னர் ஆறு மாதங்­களில் அவர்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.ஆனால் அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.  அதே­போன்று கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில் தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் என கோரி உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­திய தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய ஆர்.சம்­பந்தன், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன், அப்­போது சிறைச்­சாலை ஆணை­யா­ள­ராக இருந்த இப்­போ­தைய வவு­னியா அர­சாங்க அதிபர் ரோகன புஷ்­ப­கு­மார ஆகி­யோரின் ஊடாக வழங்­கிய உறு­தி­மொ­ழியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இன்னும் காணாமல் போன­வர்கள் தொடர்­பிலும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து இருக்­கு­மிடம் தெரி­யாமல் போயுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் புதிய அர­சாங்கம் பொறுப்­பான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. மனித உரிமை மீறல் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி உறு­தி­ய­ளித்த இந்த அரசு அது தொடர்பில் ஆமை வேகத்தில் காலம் கடத்­து­கின்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது, காணாமல்போன­வர்கள் தொடர்பில் முன்­னைய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஜனா­தி­பதி ஆணைக்­குழு, நம்­பிக்­கை­யற்ற விதத்­தி­லான விசா­ர­ணை­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆயினும் இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கின்ற ஒரு தோற்­றப்­பாட்டில், ஐ.நா.பிரே­ர­ணையில் பொறுப்பு கூறு­வ­தற்­காக அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியை நிறை­வேற்றும் வகையில் காணாமல் போனோர் தொடர்­பி­லான செய­ல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் அதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்­துக்கள் சரி­யான முறையில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அவர்­களின் பங்­க­ளிப்பை உள்­ள­டக்கும் வகையில் அவர்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வமும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று பொறுப்பு கூறும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்­துடன் தோளோடு தோள்­கொ­டுத்துச் செயற்­பட்டு வந்­துள்ள பொது அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான செயற்­பாட்­டா­ளர்­களும் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள். இது போன்ற நிலை­மைகள் கார­ண­மாக, புதிய அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய மக்கள் மத்­தியில் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் பின்னர் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முழு அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். முன்­னைய அர­சாங்கம் இந்த விட­யத்தில் பெய­ர­ள­வி­லேயே காரி­யங்­களை நகர்த்­தி­யது. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அவர்­க­ளு­டைய பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்­றிய போதிலும், மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களை இரா­ணுவ மயப்­ப­டுத்தி அந்த மக்­களை மேலும் மேலும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­தது. ஆனால் புதிய அர­சாங்கம் இந்த நிலை­மை­களில் சிறிய அள­வி­லேயே மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இருப்­பினும் இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­களை இல்­லாமல் செய்யும் வகையில் அவர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்கோ அல்­லது இரா­ணுவ முகாம்­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையோ புதிய அர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை. இதனால், இந்த அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டிக்­கைகள் எதிர்­பார்த்த அளவில் விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யி­ருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்தின் மீது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை இழந்து வரு­கின்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­வேளை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கை­யற்ற நிலைமை நீடித்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் ஏனைய இராஜதந்திரிகளைப் போல அல்லாது ஏனைய ஐ.நா. அதிகாரிகளைப் போலல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிப் பார்த்து உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார் என கூறத் தக்க வகையில் பல்வேறு தரப்பினரையும் பல இடங்களுக்கும் சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். எனவே, காலம் காலமாக நீடித்து வந்த சிறுபான்மை இன மக்களை அடக்கி யொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மறைமுகமான முறையில் மிகவும் தந்திரோபாய ரீதியில் சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளோ இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சமஷ்டி முறையை தமிழ் மக்கள் பொருத்தமான தீர்வாக விரும்பியிருக்கின்ற போதிலும், அதுபற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மறுதலையாக – முரண்பட்ட நிலைமையாகவே காணப்படுகின்றது, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஒற்றையாட்சி நிலைப்பாடும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இறுக்கமான போக்கும் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இதுவே சிறுபான்மை இன மக்களை இந்த அரசாங்கமும் கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றதோ என்ற கேள்வியை எழச் செய்திருக்கின்றது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-22#page-1
  • அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஏன் யாழ்ப்பாணத்தலை சிறைச்சாலை இல்லையோ?
  • தோனியின் விக்கெட்தான் திருப்பம்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து     பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் தோனி | படம்: பிடிஐ இந்தியாவுக்கு எதிராக டெல்லி பெரோஷா கோட்லாவில் நடை பெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறிய தாவது: தோனியின் விக்கெட்டை சவுத்தி கைப்பற்றியதுதான் மிகப்பெரிய தருணமாக எங்களுக்கு அமைந்தது. தோனி போன்ற ஒருவரை அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்தால் நிச்சயம் போட்டியை முடித்து வைத்துவிடுவார். அவர் உலகின் சிறந்த வீரர். சவுத்தி செய்த கேட்ச்தான் வெற்றி பெற பெரிய வகையில் உதவியாக இருந்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென் றால் பந்து வீச்சாளர்கள் சரியான திசையில் வீச வேண்டும். பனிப் பொழிவு பிரச்சினை இருந்த நிலையிலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டனர். கவர் திசையிலேயே பந்துகள் அதிகம் சென்றன. இதனால் கூடுதலாக பீல்டரை நிறுத்தி ரன் சேர்ப்பதில் தோனிக்கு நெருக்கடி கொடுத்தோம். பந்து ஈரமான நிலையிலும் அதிக பவுண்டரிகளை செல்ல விடவில்லை. அதிர்ஷ்டவசமாக சீரான இடைவேளையில் விக்கெட் களை கைப்பற்றிய நிலையில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன் படுத்த முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். டிரென்ட் போல்ட் மிகவும் புத்தி சாலித்தனமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டார். 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்துவது என்பது எப்போதும் நடைபெறாது. இது அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் ரன் சேர்க்க கடினமாகவே இருந்தது. பந்து மெதுவாகவும், தாழ்வாகவும் வந்தன. ஆனால் ஆட்டத்தின் பாதி யில் மைதானம் கைகொடுத்தது. இந்தியாவில் எப்படி பந்து வீசவேண்டும் என நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். டிரென்ட் போல்ட் தலைமையிலான வேகப் பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெறு வதற்கு இதுதான் ஒரே வழி. வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது. அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் இருந்து அடுத்த ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்க வேண்டும். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதால், இன்னும் சில துறைகளில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியதுள்ளது. இவ்வாறு வில்லியம்சன் கூறினார். http://tamil.thehindu.com/sports/தோனியின்-விக்கெட்தான்-திருப்பம்-நியூஸிலாந்து-கேப்டன்-வில்லியம்சன்-கருத்து/article9254856.ece
  • காதல் வழிச் சாலை 05: திரும்பத் திரும்பக் காதலிக்கலாமா?       அந்த இளைஞரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். பேயறைந்தவர் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். ஒரு பெண்ணின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தரர். “இவன் சரியா தூங்கி மூணு நாளாச்சு சார். வீட்டுக்கே வராம எங்கேயோ சுத்திக்கிட்டு இருந்தான். வேலையை விட்டு நின்னுட்டான். தேவையில்லாத நிறைய மாத்திரைகளை பைக்குள் வெச்சிருந்தான். தற்கொலை பண்ணிக்கப்போறானோன்னு பயமா இருக்கு. இவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு எங்களுக்குத் தெரியவந்தது. அதுல ஏதாவது பிரச்சினையான்னும் தெரியலை. எங்க பையனை மீட்டுக்கொடுங்க சார்” என்று கலங்கியபடியே சொன்னார்கள் அந்த இளைஞனின் அப்பாவும், அண்ணனும். அந்த இளைஞரின் மொபைலை எடுத்துக் காட்டினார் அவருடைய அண்ணன். “நான் சாகப் போகிறேன். எனக்கு நீ வேண்டும். என்னை நீ புரிந்துகொள்ளவில்லை. நான் உன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன். நான் எங்கோ கண் காணாத இடத்துக்குப் போகிறேன் சாவதற்கு. என் பிணத்தைப் பார்க்கவாவது நீ வருவாயா மாட்டாயா?” - இப்படியான மெசேஜ்கள் நிறைந்திருந்தன. காதல் விவகாரங்களில் இது சகஜம்தான். ஆனால் இந்தக் குறுந்தகவல்களின் எண்ணிக்கை சுமார் இருநூறைத் தாண்டியிருக்கிறது, அதுவும் இரண்டே நாளில். அது இயல்பில்லை, அசாதாரண நடத்தை! “அந்தப் பொண்ணைப் போட்டு டார்ச்சர் செய்திருப்பான் போல சார். அவங்களும் இவனைக் காதலிக்கறாங்க. ஆனால் சமீபகாலமாக இவன் ரொம்ப தொந்தரவு தர்றான்னு தோணுது. ஒரே நாளில் நூத்துக்கணக்கில் மெசேஜ் அனுப்பறது. நிமிஷத்துக்கு நிமிஷம் போன் பண்றது, அவங்க வேலை செய்யற ஆபீஸுக்குத் தொடர்ந்து ஃபேக்ஸ் குடுத்துட்டே இருக்கறதுன்னு இவனோட தொந்தரவு எல்லை மீறியிருக்கு. ரெண்டு பேருமே ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிட்டு காதலிக்கறபோது இவன் ஏன் இந்த மாதிரி நடந்துக்கறான்னு புரியலை” என்று வருத்தப்பட்டார் அவருடைய அண்ணன். அப்பாவும் அண்ணனும் பேச, அந்த இளைஞரோ எந்த உணர்வுமின்றி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். ஆட்டிப்படைக்கும் அதீத உணர்வு ஒரு விஷயம் நமது எண்ண வெளியெங்கும் நிறைந்திருப்பது, வேறு எதையும் ஒரு பொருட்டாக எண்ணத் தோன்றாமல் சமூகம், குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் புறந்தள்ளி ஒரு நபரைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழும் ஆரோக்கியமற்ற உந்துதலான உணர்வுகள் போன்றவற்றை ஆங்கிலத்தில் ‘அப்செஷன்’ என்று சொல்வார்கள். தான் நேசிக்கும் ஒரு பெண் அல்லது ஆணிடத்தில் இதுபோன்ற அசாதாரணமான உணர்வுகளைச் செலுத்தித் தானும் நிம்மதி இழந்து அடுத்தவரையும் உயிரோடு கொல்லும் இந்த விசித்திரக் காதலே ‘அப்செஷனல் லவ்’. அந்த இளைஞர் இப்படி ஒரு உணர்வுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். துன்புறு காதல் கீழ்வரும் அறிகுறிகளைப் பாருங்கள்: # தாழ்வு மனப்பான்மை நிறைய இருக்கும். # ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ‘நீ என்னைக் காதலிக்கிறாய்தானே?’ என்று தினமும் நாற்பது முறையாவது கேட்பது. # திரும்பத் திரும்பக் கைப் பேசியில் அழைப்பது, குறுந்தகவல் அனுப்புவது. ஒன்று, தமக்குப் பிடித்தவரின் நேர்மறை விஷயங்களைச் சிலாகித்துப் பேசுவது. இல்லையென்றால் அவரின் எதிர்மறைப் பக்கங்களைப் பற்றியே பேசி இம்சிப்பது. இப்படித்தான் இருப்பார்களே ஒழிய நடுநிலைக் கண்ணோட்டமே இருக்காது. # நேசிப்பவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்துகொண்டு அவை கிடைக்காமல் இருக்கச்செய்ய முயல்வது. உதாரணம் பணம், உணவு. # தான் நேசிக்கும் நபருடன் உலகின் எல்லை முடிந்து போவதாகக் கருதுவது. வேலை, ஓய்வு, நட்பு, குடும்பம், கடமை இவற்றையெல்லாம் விலக்கிவைத்து விடுவார்கள். # நேசிப்பவரின் அண்மையும் அவரது ‘க்ரீன்’ சிக்னலும் போதும். அதீத சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள். # எங்கே கை நழுவிப்போய் விடுவாரோ என்ற பயத்திலும் சந்தேகத்திலும் அனைத்து விதங்களிலும் வேவு பார்ப்பது. ஏதேனும் தவறாகத் தென்பட்டால் எந்த அளவுக்கு வன்முறை என்றாலும் துணிந்து இறங்குவது. இந்த அறிகுறிகளுடன் ஒரு காதல் பயணிக்கிறது என்றால் அது ஆரோக்கியமானதல்ல. காதல் தன்னலமற்றது. கருணை மிக்கது. தியாகங்கள் நிறைந்தது. நம்மவரின் சுக துக்கங்களை நம்முடையது போல கருதுவது. பொது வாழ்க்கையிலும் நம்மை வெற்றியாளனாக்கி முழு மனிதனாக வாழச்செய்வது. நிழலும் நிஜமும் இந்தத் துன்புறு காதலைப் போன்று இம்சைக்கு ஆளாக்குவதல்ல காதல். பெரிய அளவிலான உளவியல் கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாகவே இந்தத் தொல்லைக் காதலைப் பார்க்க வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் மனக் கோளாறுகள் இருந்தாலும் இப்படி அவர் பாதிக்கப்படச் சாத்தியம் உண்டு. சமூகத்தில் 0.1% பேருக்கு இப்படியான உளவியல் கோளாறுகள் இருக்கின்றன. தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணையோ அல்லது காதலிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்காகவோ கத்தியைத் தூக்கும் வன்முறைகளின் பின்னணியில் இப்படிப்பட்ட உளவியல் பிரச்சினைகள் ஒளிந்திருக்கலாம். பல திரைப்படங்களில் காதல் என்ற பெயரால் சித்தரிக்கப்படும் பத்தாம்பசலித்தனங்களின் அடிப்படை இந்த இம்சைக் காதல்தான். திரையில் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் நிஜ வாழ்விலோ இது நோய். மூன்று மணி நேரத்தில் காதலித்து வெற்றி அல்லது தோல்வி பெற்று, வில்லனைக் கொன்று அல்லது தன்னைக் கொன்று முடிந்துவிடுவதல்ல நிஜ வாழ்வின் காதல். ஆண், பெண் இரு பாலருமே இந்தத் தொல்லைக் காதலால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் பெண்கள் பெரும்பாலும் தனக்குப் பரிச்சயமானவர்களிடத்திலோ தமக்கு உதவி செய்தவர்களிடத்திலோதான் இப்படி ‘துன்புறு காதலில்’ மாட்டிக்கொண்டுவிடுவார்கள். புதியவர்களிடமோ அறிமுகமில்லாதவர்களிடமோ அவர்கள் இப்படிச் செய்வதில்லை. எல்லை நல்லது மேற்சொன்ன இளைஞரின் வாழ்வில் அந்த இளம் பெண்ணின் நிலைமை இன்னும் மோசம். இருவரும் மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் காதலிக்கிறார்கள். பையன் வீட்டில் திருமணத்துக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் இப்போது மிகுந்த பயத்தில் இருக்கிறார். காதலுக்கும் ஒரு அளவீடு உண்டுதானே? மூச்சுவிட முடியாத அளவுக்கு, காதல் என்ற பெயரில் இப்படி மன ரீதியாகத் துன்பத்துக்கு ஆளானவுடன் அவர் பயப்பட, அதைக்கண்ட நம் இளைஞர் ஏன் என்னை விட்டு விலகுகிறாய் என்று தன் இம்சைகளை மேலும் அதிகரிக்க… இதோ சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டார். காதலிக்கிறேன் பேர்வழி என்று ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு அதன் பின்னர் நம்மவரின் உண்மைப் பக்கங்களைக் கண்டு அதிர்ந்து போயிருப்பவர்களுக்காகச் சொல்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான். காதலின் பெயரால் இன்று சமூகத்தில் நிகழும் பல சீரழிவுகளின் பின்னணியில் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் பங்கு நிறைய உண்டு. அதற்கெல்லாம் சிகிச்சையும் உண்டு. அதீதத்தின் பெயரால் காதலையும் வதைக்க வேண்டாம், விட்டுவிடுவோம். காதலும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே! எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். (பயணிப்போம்)
   கட்டுரையாளர், மனநல மருத்துவர். http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-05-திரும்பத்-திரும்பக்-காதலிக்கலாமா/article9249469.ece
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,310
  • Most Online
   1,326

  Newest Member
  Riyas Qurana
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   162,328
  • Total Posts
   1,057,518