Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,562
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,874
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,332
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 361,742
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   69,633
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   13,120
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   20,003
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,564
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,965
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,455
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,944
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,699
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,420
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   15,006
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,431
   posts
  2. 34,144
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,823
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,218
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,573
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   19,013
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   27,422
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   22,347
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   56,355
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,167
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,711
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,725
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,696
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,795
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,267
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,714
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,744
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,952
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,960
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,410
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,743
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,262
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,437
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,738
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (348,152 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,954 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (12,400 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Upcoming Events

  No upcoming events found
 • Posts

  • பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு   பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார்.    கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த் கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜங்கிள் என்று அழைக்கப்படும் கலெய்யின் மிகப்பெரிய குடியேறிகள் முகாமை மூடுவதாக தான் தெரிவித்ததை ஒல்லாந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பிரிட்டனின் வாக்கெடுப்பில் குடியேறிகளை கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. http://www.bbc.com/tamil/global-37473009
  • தென் கொரியாவில் கேலக்ஸி நோட் 7 விற்பனையை தாமதப்படுத்தும் சாம்சங் நிறுவனம்   உலகெங்கிலிருந்தும்,  கேலக்ஸி நோட் 7 கைப்பேசியை திரும்பப் பெறுவதில் சாம்சங் நிறுவனத்துக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், தென் கொரியாவில் அதன் விற்பனை மீண்டும் தொடங்குவதைத் தான் தாமதப்படுத்தவிருப்பதாக  சாம்சங் தெரிவித்துள்ளது.   மிகப்பெரிய தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேட்டரிகள் அதிக வெப்பமடையும் பிரச்சினை காரணமாக  உலகளவில் சுமார் 2.5  மில்லியன் கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற வேண்டிவந்தது.   பல டஜன் கணக்கான கைப்பேசிகள் தீ பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கைப்பேசி செப்டம்பர் 28 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வர இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி வாக்கில்  அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கைப்பேசியின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசிகளுக்கு மாற்று கைப்பேசியை வழங்க முன்வந்தது. ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசியை பயன்படுத்த வேண்டாம் எனவும் சாம்சங் வலியுறுத்தி இருந்தது.  உலகளவில் கேலக்ஸி நோட் 7 கைப்பேசியின் திரும்பப்பெற்ற சம்பவம் 10 சந்தைகளை பாதித்தது. தென் கொரியாவில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கைப்பேசியை திருப்பி அளித்துள்ளதாகவும், அதே எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இன்னும் திருப்பி அளிக்கவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. லித்தியம் பேட்டரிகள் எதனால்  தீ பிடிக்கின்றன? கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில் பயணிகள் விமானம் ஒன்றில், விமான பணியாளர் குழு, தீ அணைக்கும் கருவியை கொண்டு பழைய சாம்சங் கைப்பேசியிலிருந்து வெளிவந்த புகையை அணைத்துள்ளனர்.    அந்த சம்பவத்தில், 2012ல் விற்பனைக்கு வெளியான கேலக்ஸி நோட் 2 கைபேசி, எரிந்து கொண்டிருந்ததாகவும், தீப்பொறிகளை உமிழ்ந்து கொண்டிருந்ததாகவும் இண்டிகோ விமான நிறுவனத்தில் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில், நோட் 7 கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே சமயம், நாட்டின் மத்திய விமான போக்குவரத்துறையானது, விமான பயணிகள் நோட் 7 கைப்பேசியை விமானத்திற்குள் கொண்டுவர வேண்டாம் என்றும், அப்படி எடுத்து வந்தால் அதனை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.  உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் விமானத்தில் நோட் 7 கைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன. மேலும், விமான பயணத்தின் போது அதனை சார்ஜ் ஏற்ற கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் விமானத்தில் நோட் 7 கைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன. முதலில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன் விற்பனைக்கு வந்தது. விமர்சகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய ஐ போன் 7-ஐ வெளியிட்ட சமயத்தில் சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 கைப்பேசிகள் திரும்பப் பெறப்பட்டன. http://www.bbc.com/tamil/global-37472926
  • யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு பதினோரு நாட்கள் நீர்கூட அருந்தாமல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழர் விடுதலைக் கூட்டணியச் சேர்ந்த ஆனந்தசங்கரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திலீபனின் நினைவு சின்னத்திற்கு தியாகச் சுடரேற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பாடசாலைகள், கல்லூரி கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொண்டிருந்தார். இந்திய அமைதிப்படையினர், இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வளவில் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபன் உயிர் நீத்ததுடன் முடிவடைந்தது. ஆயினும் திலீபனுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; இராசையா பார்த்திபன் என்பது அவருடைய இயற்பெயராகும். யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுவந்தபோது, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோதே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். விடுதலைப்புலிகள் செல்வாக்குடன் இருந்த காலப்பகுதியில் திலீபனின் நினைவு தினம் சிறப்பாக அனுட்டிக்கபட்டு வந்தது. ஆயினும் கடும் யுத்த மோதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கடந்த பல வருடங்களாக இந்த நினைவுதினம் கைவிடப்பட்டிருந்தது. http://www.bbc.com/tamil/sri-lanka-37473004
  • முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்     முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு வழி செய்யுமாறு மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்றைய அபிவிருத்திகுழுக்கூட்ட த்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..   பாசாலைக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுவதனால் மாணவர்கள் இயல்பான முறையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.   முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் மகா வித்தியாலயம், பாலிநகர் ஆரம்பவித்தியா லயம் ஆகியவற்றுக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுகின்றது.   பாடசாலைக்கு முன்பாகவுள்ள பொதுக்காணி மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணி உள்ளடங்கலாக சுமார் எட்டு ஏக்கர் காணி இவ்வாறு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.   பாடசாலை நேரங்களில் இராணுவத்தினர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடு களில் ஈடுபடுவதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், தாம் அச்சத்துடன் பாடசாலைக்கு செல்வதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.   பாடசாலைக்கு முன்னால் இராணுவமுகாம் காணப்படுவதனால் மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களுக்கு செல்லமுடியாத சூழல் காணப்படுவதுடன் தற்காலிகமாகவிருந்த இராணுவ முகாம் தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாலிநகர் மகாவித்தியாலய அபிவிருத்தி குழு செயலாளர் தெரிவிக்கின்றார்.   மாணவர்கள் இயல்பான சூழலில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த இராணுவ முகாம் தடையாகவுள்ளதாக தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி  முகாம் உள்ள காணிகள் மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.   இந்நிலையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பாலிநகர் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இராணுவ முகாம் காணப்படுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.   மாந்தை கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம்  இன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.   இன்றய அபிவிருத்திக்குழு கூட்டத்தில்  அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், கே. கே. மஸ்தான், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் சிவநேசன்  மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   இதன்போது பாடசாலைக்கு முன்பாகவுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கும், காணியை காணி உரிமையாளர்களிடத்தில் கையளிப்பது என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. http://onlineuthayan.com/news/18136
  • தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று மாலையும் அஞ்சலி       நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று மாலை 5.30 மணியள வில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.    இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பி னர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர். விளக்கேற்றி தேவாரம் இசைத்து மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்கள்.  http://onlineuthayan.com/news/18129
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,303
  • Most Online
   1,326

  Newest Member
  Saravanan Tas
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. asan
   asan
   (35 years old)
  2. ராம்
   ராம்
   (32 years old)
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   161,110
  • Total Posts
   1,052,552