Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,533
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,870
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,274
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 353,284
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   66,945
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,596
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,319
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,534
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,671
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,021
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,910
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,673
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,395
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,498
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,096
   posts
  2. 33,696
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,792
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,504
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,598
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,769
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   20,866
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,117
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,118
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,681
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,646
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,589
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,522
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,110
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,342
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,617
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,333
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,835
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,390
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,425
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,176
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   81
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   54,729
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,703
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (343,020 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,411 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,826 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி
   போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.  
  • புதிய ரகசியம்: அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம்-மின் சித்தி
   புதிய ரகசியம்: அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம்-மின் சித்தி   கிம் ஜோங் உன். | கோப்புப் படம். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவ்வப்போது சுவாரஸ்ய ரகசியங்கள் வெளியாகும். அந்த வகையில் தற்போது கிம்-மின் சித்தி குறித்து ஒரு ரகசியத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிம் ஜோங் உன்னின் தாயார் கோ யோங் ஹுயி-ன் சகோதரி கோ யோங் சுக் கடந்த 1998-ல் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிம் ஜோங் உன் ஸ்விட்சர்லாந்தில் படிக்கும் போது அவரது சித்தி பராமரிப்பிலேயே இருந்திருக்கிறார். வாஷிங்டன் போஸ்டுக்கு கிம்மின் சித்தி அளித்த பேட்டியில், "பள்ளிப் பருவத்தில் கிம் எந்த தொந்தரவும் அளித்ததில்லை. ஆனால் அவனுக்கு எதிலும் பொறுமை இருக்காது. கூடவே முன் கோபமும் அதிகம். அவரது அம்மா எப்போதும் விளையாடாமல் பாடத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துவார். ஆனால், அப்போதெல்லாம் கிம் கோபத்தில் அவரது தாயுடன் பேசாமல் அமைதி காப்பார். உண்ணாவிரதம் இருப்பார். கிம்முக்கு கூடைப்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம். கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் மிகப்பெரிய விசிறி. எனது மகனும் கிம்மும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே வயது. கிம் அதிபர் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 27. கிம்முக்கு தான் வடகொரியாவின் அதிபராகப்போவது அவரது 8-வது பிறந்தநாளிலேயே தெரிந்துவிட்டது" என்றார். அமெரிக்காவுக்கு சென்றது ஏன்? கிம்மின் சித்தி எதற்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார் என்பது இதுவரை ரகசியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவுக்கு அவர்கள் வந்த நாள் முதல் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அவர்களுக்கு நிதியுதவி முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சிஐஏ எல்லா உதவிகளையும் செய்தாலும் வட கொரியா குறித்த எந்த ரகசியத்தையும் நாங்கள் இதுவரை கசியவிடவில்லை என்கிறார் கோவின் கணவர் ரி. http://tamil.thehindu.com/world/புதிய-ரகசியம்-அமெரிக்காவில்-சலவைக்-கடை-நடத்தும்-வடகொரிய-அதிபர்-கிம்மின்-சித்தி/article8659912.ece
  • உலக மசாலா
   உலக மசாலா: அணில் சண்டை!       அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புகைப்படக்காரர் கிஸ்கிலோவ், மிக அரிதான ஒரு சண்டையைப் படம் பிடித்திருக்கிறார். ‘‘இரண்டு அணில்கள் சண்டையில் இறங்கின. நான் கேமராவோடு தயாரானேன். என்னால் நம்பவே முடியவில்லை… எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ் லீ காற்றில் பறந்து சண்டை போடுவது போல இரண்டு அணில்களும் சண்டையிட்டன. கைகளால் குத்தின. கால்களால் உதைத்தன. தற்காப்பு கலைகள் தெரிந்த ஒருவரால்தான் இப்படிச் செய்ய இயலும். என் வாழ்நாளில் வித்தியாசமான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்!’’ என்கிறார் கிஸ்கிலோவ். அணில்கள் தற்காப்பு கலைகளைக் கற்றுள்ளதோ! பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் ஹெர்னான்டோ குவான்லாவோ. கணக்காளராகப் பணிபுரியும் இவர், பொதுமக்களுக்கான நூலகத்தைத் தன் வீட்டில் அமைத்து, பராமரித்து வருகிறார். தினமும் கை நிறையப் புத்தகங்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறார். அதேபோல நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார். ’’எங்கள் பகுதியில் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். படிக்க ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காகவே இந்த நூலகத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் 70 வயதை அடைவதற்குள் கல்வி அறிவில் எங்கள் மக்கள் முன்னேறிவிட வேண்டும். புத்தகங்கள் அறிவை மட்டும் கொடுப்பதில்லை. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. கற்பனையை வளர்க்கின்றன. சில புத்தகங்கள் நம்மோடு உறவாடவும் செய்கின்றன. ஒரு புத்தகம் எத்தனை வழிகளில் நமக்குப் பயன் தருகிறது என்பதைப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறேன். குழந்தைகள் இங்கே வந்து எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். படித்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம். இங்கே விதிகள் எதுவும் இல்லை என்பதுதான் ஒரே விதி. 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறு வயதில் படித்த புத்தகங்களை சேகரித்து, ஒரு அலமாரியில் வைத்தேன். அது நாளடைவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட மிகப் பெரிய நூலகமாக உருவாகிவிட்டது. என்னுடைய முயற்சி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு பெரிய பெரிய பெட்டிகளில் புத்தகங்கள் நன்கொடையாக வர ஆரம்பித்தன. என் வீட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் புத்தகங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. மணிலாவில் 50 நூலகங்கள் இருக்கின்றன. அவை எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் எளிதாக இல்லை. சில நூலகங்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால் என்னுடைய நூலகத்துக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தால் போதும். வேறு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை’’ என்கிறார் ஹெர்னான்டோ. தொடரட்டும் உங்கள் சேவை! கலிபோர்னியாவைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கான நிறுவனம் பிர்ச். வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது. இங்கே வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதே இந்தக் கடையின் தனிச் சிறப்பு. சமையலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு மிகப் பெரிய சமையலறை இங்கே இருக்கிறது. குளியலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு பெரிய குளியலறை இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்ப்பதற்கு 2 மணி நேரம் ஆகும் என்பதால் காபியும் நொறுக்குத் தீனிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ’’எங்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திப் பார்த்து, ஒரு பொருளை வாங்கும்போது மன நிறைவு அடைகிறார்கள். அதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். ஷவர் வாங்குகிறீர்கள் என்றால், குளியலறையில் அந்த ஷவரைப் பயன்படுத்தி, திருப்தி என்றால் வாங்கலாம். இல்லாவிட்டால் வேறு பொருட்களைத் தேடலாம். அமெரிக்கா முழுவதும் 8 கடைகளை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் பிர்ச் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப்ரி சியர்ஸ். 2015-ம் ஆண்டு மட்டும் இந்தக் கடைகளின் வருமானம் 225 மில்லியன் டாலர்கள். ஒவ்வோர் ஆண்டும் வருமானம் இரட்டிப்பாகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4 புதிய கடைகளைத் திறக்கிறார்கள். புதிய வியாபாரத் தந்திரம்! http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அணில்-சண்டை/article8659540.ece?homepage=true&relartwiz=true
  • மாகாண சபைக்கு அதிகாரமும் இல்லை அதனாலேயே 13வது திருத்தச் சட்டத்தினை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை -
   மாகாண சபைக்கு அதிகாரமும் இல்லை அதனாலேயே 13வது திருத்தச் சட்டத்தினை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை -     கிழக்குமாகான முதல்வரின் கலகமும், அதனால் உண்டான நியாயமும் முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது:-

   கிழக்குமாகான முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்கள் கடற்படை அதிகாரியை சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றில் அவமானப்படுத்தியுள்ளார் என்பதுதான் இந்த வாரம் அரசியலில் பேசுபொருளாக உள்ளது. இதனை போற்றியும், தூற்றியும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினாலும், இதனைவிட பாரிய விடயங்கள் சந்திக்கு வராமல் இருக்கின்ற நிலையில், இந்த விடயத்தினை ஊதி பெருப்பித்து பூதாகரமாக்கி தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக அமைத்துக்கொடுத்த பெருமை எமது ஊடகவியலாளர்களையே சாரும்.  
   முதலமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதனைவிட அவர் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர் என்பதனால், இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்ததுபோல், முதலமைச்சரின் அரசியல் எதிரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யதார்த்தத்துக்கு அப்பால் பேரினவாதிகளுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் முதலமைச்சர் செய்தது தவறு என்று கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
   அடிமைத்தனத்துக்கு பழக்கப்பட்டு குட்ட குட்ட குனிந்து செல்கின்றவர்கள் மட்டுமே முதலமைச்சர் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை என்கின்றார்கள். ஆனால் முற்போக்கு சிந்தனையும் போர்க்குணமும் கொண்ட எவரும் எந்த இடத்திலும் தங்களது கொள்கையினை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.  பாடசாலை மாணவர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பார்வையாளர்களாக இருக்கத்தக்கதாக நாட்டின் அதியுயர் சபயான பாராளுமன்றத்தில் நடந்திராத அநாகரீகம் இங்கு நடந்தேறிவிடவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதலடைய வேண்டும்.        
   அன்றய வடகிழக்கு மாகான முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அவர்கள் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு, இந்திய படயினர்களுடன் நாட்டைவிட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து, வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டிலிருந்து ஆளுநரின் ஆளுகைக்கு கீழ் நிறுவகிக்கப்பட்டது.  
   தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் பரவலாக செறிந்து வாழும் வடகிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழரையோ, அல்லது ஒரு முஸ்லிமையோ ஆளுநராக இதுவரையில் நியமித்ததில்லை. மாறாக ஒய்வு பெற்ற சிங்கள படை உயர் அதிகாரிகளே ஆளுநராக நியமிக்கப்பட்டதுதான் வரலாறு.    
   நீதிமன்ற தீர்ப்புக்கமய 2007 இல் இரு மாகானங்களும் பிரிக்கப்பட்டு, தனித்தனியே ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். பின்பு கிழக்கு மாகாணத்துக்கு 2008 இல் தேர்தல் நடாத்தப்பட்டது. அதில் சிங்கள அரசாங்கத்தின் பொம்மையாக செயற்படக்கூடியர் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். பின்பு சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக 2013 இல் வட மாகாணசபை தேர்தலை விருப்பமின்றி அரசாங்கம் நடாத்தியது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பெற்றி ஆட்சி செய்து வருகின்றது.
   இங்கே விடயம் என்னவென்றால், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயரளவில் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியுமே தவிர, போதிய அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு பணியினையும் ஆளுநரின் அனுமதி பெற்றே செய்யவேண்டிய நிலை மாகாணசபையில் காணப்படுகின்றது. இதன் நீண்டகால மனஉளைச்சளின் வெளிப்பாடுதான் கிழக்கு முதலமைச்சரின் கொந்தளிப்பாகும். இம்மாகாண சபை மூலம் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதனாலேயே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை பிரபாகரன் ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை.
   மாகாணசபையின் குறைந்தளவு அதிகாரத்தினையும் புடுங்கி எடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயன்றபோது, அமைச்சரவையில் சிறுபான்மை இனத்தினை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, அதாஉல்லா, ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள். அப்போது தன்னந்தனியே மகிந்த ராஜபக்சவினை எதிர்த்து அமைச்சரவையில் வாதிட்டு தடுத்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் என்பதனை அன்றைய பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிட்டதுடன், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராட்டியும் இருந்தது.     
   வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிருவாகத்தில் ஆளுநரின் தலையீடுகள் அதிகமாக காணப்படுவதனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ்விரு மாகான முதலைமைச்சர்களும், அமைச்சர்களும் ஆளுநருடன் முரன்படாத சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை.
   தங்களுக்கு பொம்மையாக செயற்படக்கூடியவர்கள் என்று நியமிக்கப்பட்ட கிழக்கு மாகான முன்னாள் முதலமைச்சர்களான பிள்ளையான், நஜீப் ஏ மஜீத் போன்றவர்கள்கூட, ஆளுநரின் தேவையற்ற தலையீடுகள் காரணமாக எந்தவொரு அதிகாரத்தினையும் தங்களால் பிரயோகிக்க முடிவதில்லை என்பதனை பகிரங்கமாக கூறி, பலவிடயங்களில் முரண்பட்டு வந்தார்கள்.
   ஆளுநர் அதிகாரம் செலுத்துவது ஒருபுறமிருக்க, படையினர்களின் கெடுபிடிகளும், தலையீடுகளும் பாரிய ஒரு தலையிடியாக உள்ளது. இது கிழக்கு மாகாணத்தினை விட வடமாகாணத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது. அங்கு சிவில் நிருவாகங்களில்கூட படையினர்களிடம் அனுமதி பெற்றும், அவர்களது மேற்பார்வையிலும் இன்னும் நடைபெற்றுவருவது வடமாகான சபைக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது.    
   ஆனாலும் இவ்வாறான படையினர்களின் தலையீடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், சத்தியாக்கிரகங்களும், பிரேரணைகள் நிறைவேற்றியும், பாராளுமன்றத்திலும் தங்களது எதிர்ப்பினை த.தே.கூ மேற்கொண்டார்களே தவிரே, நேரடியாக படைத்தளபதிகளிடம் தங்களது அதிகாரத்தில் குறுக்கிட வேண்டாம் என்று ஒருபொழுதும் வாதிட்டதில்லை. அதனால்தான் என்னவோ படையினர்கள் தங்களது தலையீடுகளை அங்கு இன்னும் நிறுத்தவில்லை.
   கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசம் புலிகளிடமிருந்து 2006 இல் மீட்கப்பட்டதன்பின்பு தமிழ், முஸ்லிம் மக்களின் குடியிருப்பு நிலங்கள், வயல் நிலங்கள் என்பன படையினர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. இதில் தனியார் மற்றும் அரச  நிலங்கள் பல அண்மையில் கிழக்கு மாகாணசபையின் முயற்சியினால் படையினர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவர்களது ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்பதன் வெளிப்பாடே கடற்படையினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற சம்பூர் பாடசாலை நிகழ்வாகும்.
   யுத்தப்பிரதேசம் ஒன்றில் சிவில் நிருவாகத்தில் இராணுவத்தினர் தலையீடு செய்வது ஒரு சாதாரண விடயமாகும். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை தாண்டி, முழுக்க முழுக்க சிவில் நிருவாகம் நிலவுகின்ற பிரதேசமொன்றில் சீருடை தரித்த படையினருக்கு என்ன வேலை? மாகாணசபைக்கு உற்பட்ட பாடசாலை ஒன்றில் விழா நடாத்துவதற்கு படையினருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினால் அங்கு கல்வி அமைச்சு எதற்கு இருக்கின்றது? கல்வி அமைச்சு செய்யவேண்டிய வேலயை படையினர்களிடம் பொறுப்பு கொடுத்தது யாருடைய தவறு? என்று கேள்விகளை எழுப்ப சிலருக்கு மனமில்லாமல் இருக்கின்றது.
   இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் கவனிக்க வேண்டும். அதாவது முதலமைச்சர் கடற்படை அதிகாரியை மட்டும் திட்டவில்லை. கூடவே தன்னை அதிகாரம் செலுத்துகின்ற ஆளுனருடனும் கடிந்துகொண்டார். இதன் பிரதிபலிப்புத்தான் பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையாகும். அதாவது படையினர்களின் முகாம்களுக்கு முதலமைச்சர் செல்லக்கூடாது என்றும், அதுபோல் எந்தவொரு முதலமைச்சரின் நிகழ்வுகளிலும் படையினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை வெளியிடப்பட்டதானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பது போல இருக்கின்றது.
   ஒரு முதலமைச்சர் அழைப்பு இன்றி எந்தவொரு படையினர்களின் முகாம்களுக்கும் செல்லுவதில்லை. அப்படியான ஒரு தேவையும் அவருக்கு ஏற்படுவதுமில்லை. ஆனால் படையினர்கல்தான் தேவை இல்லாத விடயங்களில் அதிகாரம் செலுத்த முற்படுவதும், பிரச்சனைகளை உண்டாக்குவதுமாகும்.  
   இவ்வாறு படையினர்கள் தேவையில்லாத தலையீடுகளை சிவில் நிருவாகத்தில் திணிக்கின்ற சந்தர்ப்பங்களில் வடமாகானசபையை போன்று பிரேரணைகளையும், கண்டன தீர்மானங்களையும் கிழக்கு மாகானசபயிலும் நிறைவேற்றி இருந்தால் இன்னும் தீர்க்கமான ஓர் முடிவு இங்கும் இல்லாதிருந்திருக்கும்.
   எனவேதான் கிழக்குமாகான முதலமைச்சரின் அதிரடி கொந்தளிப்பு காரணமாக சிவில் நிருவாகங்களில் படையினர்கள் இனிமேல் தலையிடமாட்டார்கள் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவு ஒன்று படைதரப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது எத்தனையோ போராட்டங்கள் நடாத்திய வடமாகான சபைக்கு கிடைக்காதது கிழக்கு மாகாணசபைக்கு கிடைத்ததானது ஓர் பாரிய வெற்றியாகும். இதனைத்தான் கூறுவது கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமென்று. முதலமைச்சரின் கலகம்தான் கிழக்கு மாகாணசபையின் கேள்விக்குற்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு ஒரு நியாயத்தினை பெற்று கொடுத்திருக்கின்றது.  
     முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது:- என்பவரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பதிவு மாற்றங்கள் இனிறி வெளியிடப்படுகிறது.. கருத்துக்கள் யாவும் கட்டுரையாளரையே சாரும்.. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132591/language/ta-IN/article.aspx  
  • யாழ்.கந்தரோடையில் "புலிகளின் தமிழன்" குண்டு வீசி தாக்குதல்
   யாழ்.கந்தரோடையில் "புலிகளின் தமிழன்" குண்டு வீசி தாக்குதல்  
   விடுதலைப்புலிகளின் உள்ளூர் தயாரிப்பான கைக்குண்டு  வீசி யாழ்.கந்தரோடை பகுதியில் உள்ள  வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


   யாழ்,கந்தரோடை மடத்தடி பகுதியில் உள்ள தேவராஜா முருகதாசன் என்வரின் வீட்டின் மீதே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் குறித்த கைக்குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

   வீசப்பட்ட குண்டானது வெடிக்காததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


   குண்டு வீசப்பட்டதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் உடனடியாக சுன்னாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து அவர்கள் வந்து குண்டினை மீட்டு சென்றுள்ளனர்.


   நேற்றிரவு வீட்டில் இருந்த வேளை வீட்டின் முன்பாக ஏதோ விழுந்தது போன்ற சத்தம் கேட்டு சென்று பார்த்த போது "சொப்பின்பை" யில் சுற்றப்பட்ட நிலையில் இக் குண்டு காணப்பட்டது அதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினேன்.


   சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிலர் எங்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்கள். அது தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் செய்யபப்ட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மூவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். நீதிமன்றினால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை த்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


   அது தவிர வேறு எதுவும் தற்போது என்னால் கூற முடியாது உள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.


   குறித்த குண்டானது விடுதலைப்புலிகளினால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குன்டாகும். இக் கைக்குண்டு விடுதலைப் புலிகள் "தமிழன் " குண்டு என பெயர் சூட்டி இருந்தனர். இக் குண்டை இறுதி யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் விடுதலைப்புலிகள்  இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தினர்.


   குறித்த குண்டினை ஏனைய கைக்குண்டுகள் போன்று குண்டின் மீது உள்ள கிளிப்பை அகற்றி  வீசினால் வெடிக்காது. இக் குண்டின் கிளிப்பை அகற்றிய பின்னர் அதன் மேல் பகுதியை கைகளினால் அல்லது வேறு வகையில் குத்திய பின்னர் வீசினால் தான் குண்டு வெடிக்கும்.


   இக் குண்டினை வீசியவர்களுக்கு அதனை வீசுவதற்கான பொறிமுறை தெரியாததாலையே அக் குண்டு வெடிக்கவில்லை.  உரிய முறையில் வீசி இருந்தால் அக் குண்டு வெடித்து சேதத்தை உருவாக்கி இருக்கும்.


   இக் கைக்குண்டு தற்போது யாழ்ப்பணத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது ? . அது யாழில் உள்ள இளைஞர் குழுக்களின் கைகளில் எவ்வாறு கிடைத்தது ? இதனை வீசியவர்கள் யார் ? என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை.


   இதேவேளை கடந்த மாதம் யாழில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுக்குழு ஒன்றிடம் இருந்து இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்து இருந்தனர். அதேவேளை கடந்த வருடம் யாழில் கைது செய்யப்பட்ட "ஆவா" குழு எனும் குழுவிடம் இருந்தும்  புதிய ரக கைக்குண்டுகள் இரண்டும் பொலிசாரினால் மீட்கப்பட்டு இருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132586/language/ta-IN/article.aspx
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,237
  • Most Online
   1,326

  Newest Member
  Muthupandi K
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. Shankar2805
   Shankar2805
   (35 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   154,699
  • Total Posts
   1,028,914